Friday, January 5, 2018

முன்னாள் பதிவாளர் அறை உறவினர் முன் திறப்பு

Added : ஜன 05, 2018 02:36


சேலம்: பெரியார் பல்கலை, முன்னாள் பதிவாளர் அங்கமுத்துவின் அலுவலக அறை, அவரது உறவினர்கள் முன்னிலையில் நேற்று திறக்கப்பட்டது.


சேலம், பெரியார் பல்கலையில், 2005ல், உடற்கல்வி இயக்குனராக சேர்ந்தவர் அங்கமுத்து. இவர், அதே பல்கலையில், 2012 முதல், 2015 வரை பதிவாளராக பணிபுரிந்தார்.
அப்போது, பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் பணி ஆணை உள்ளிட்ட பல்வேறு கோப்புகள் ஒப்படைக்காதது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், டிச., 18ல், அங்கமுத்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அவரது அலுவலக அறையில் உள்ள பொருட்களை யாரும் பயன்படுத்தாமல் இருக்க, பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டது.


இதை பாதுகாக்க, சிண்டிகேட் உறுப்பினர் செந்தில்வேல்முருகன் தலைமையில், குழு அமைக்கப்பட்டிருந்தது.


நேற்று, அங்கமுத்து மகள் சவுமியா, அவரது உறவினர்கள், பல்கலைக்கு வந்தனர். அவர்கள் முன்னிலையில், அங்கமுத்து பயன்படுத்திய உடற்கல்வி இயக்குனர் அலுவலகம் திறக்கப்பட்டது.


அங்குள்ள பொருட்கள் குறித்து ஆய்வு நடந்தது. சொந்த பொருட்கள் பிரிக்கப்பட்டு, உறவினர்களிடம்ஒப்படைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024