அண்ணாமலைப் பல்கலை.யில் நிலுவைச் சான்றிதழ் வழங்கும் முகாம்
By DIN | Published on : 05th January 2018 02:18 AM |
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தேர்வுத் துறை சார்பில், தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் கடந்த 25 ஆண்டுகளில் (1991 - 2017) படித்து தேர்ச்சி பெற்றவர்களில் சான்றிதழ் பெறாமல் நிலுவையில் உள்ள மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் மூன்றாவது முறையாக நடைபெற உள்ளது.
மேற்கூறிய காலகட்டத்தில் படித்து தேர்ச்சி பெற்றவர்களின் பலர் தங்களது மதிப்பெண் பட்டியல், பட்டச் சான்றிதழ்களைப் பெற்றுகொள்ளாமல் தேர்வுத் துறையில் உள்ளது. எனவே பல்கலைக்கழகத் தேர்வுத் துறை சார்பில், படித்த மாணவர்களுக்கு நிலுவைச் சான்றிதழ் வழங்கும் சிறப்பு திட்ட முகாம் தேர்வுத் துறை அலுவலக வளாகத்தில் வருகிற பிப்ரவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
எனவே, இதுவரை மதிப்பெண் பட்டியல், பட்டச் சான்றிதழ் பெறாதவர்கள், சிறப்பு திட்ட முகாமில் பெற்றுக்கொள்ளலாம்.
சான்றிதழ் பெற வரும் மாணவர்கள் தங்களது புகைப்பட அடையாள அட்டையுடன் நேரில் வந்து, பல்கலைக்கழகத்தில் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்தி அனைத்து வகையான சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் மாணவர்கள் தங்களது சந்தேகங்களுக்கும் தேர்வுத் துறை, தொலைதூரக் கல்வி இயக்ககம் மற்றும் படிப்பு மையத்தை தொடர்புகொள்ளலாம் என பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன் தெரிவித்துள்ளார்.
இந்த முகாம் 3 நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
No comments:
Post a Comment