Friday, May 8, 2015

எம்.பி.பி.எஸ்., பி.இ. கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?

பிளஸ் 2 தேர்வில் உயிரியல்-இயற்பியல்-வேதியியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் 200-க்கு எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.
உதாரணமாக, ஒரு மாணவர் உயிரியலில் 200-க்கு 198, இயற்பியலில் 200-க்கு 198,
வேதியியலில் 200-க்கு 200 என மதிப்பெண் எடுக்கும் நிலையில் கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கீடு:

உயிரியல் 198/2 100-க்கு 99
இயற்பியல் 198/4 50-க்கு 49.5
வேதியியல் 200/4 50-க்கு 50
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கட்-ஆஃப் மதிப்பெண்: 198.50

மேலும் ஒரு உதாரணம்:
உயிரியல் 196/2 100-க்கு 98
இயற்பியல் 199/4 50-க்கு 49.75
வேதியியல் 200/4 50-க்கு 50
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கட்-ஆஃப் மதிப்பெண்: 197.75
பிளஸ் 2 பாடத் திட்டத்தில் அறிவியல் பிரிவை (சயின்ஸ் குரூப்) தேர்வு செய்து படித்த ஒரு மாணவர் தாவரவியலில் 200-க்கு 200, விலங்கியலில் 200-க்கு 198, இயற்பியலில் 200-க்கு 198, வேதியியலில் 200-க்கு 200 என மதிப்பெண் எடுக்கும் நிலையில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கீடு:

தாவரவியல் 200/4 50-க்கு 50
விலங்கியல் 198/4 50-க்கு 49.5
இயற்பியல் 198/4 50-க்கு 49.5
வேதியியல் 200/4 50-க்கு 50
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கட்-ஆஃப் மதிப்பெண்: 199

பி.இ. கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கீடு:
பிளஸ் 2 தேர்வில் கணிதம்-இயற்பியல்-வேதியியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் 200-க்கு எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் பி.இ. படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.
ஒரு மாணவர் கணிதத்தில் 200-க்கு 198, இயற்பியலில் 200-க்கு 198, வேதியியலில் 200-க்கு 200 என மதிப்பெண் எடுக்கும் நிலையில் பி.இ. படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கீடு:-

கணிதம் 198/2 100-க்கு 99
இயற்பியல் 198/4 50-க்கு 49.5
வேதியியல் 200/4 50-க்கு 50
பி.இ. படிப்பில் சேர கட்-ஆஃப் மதிப்பெண்: 198.50

Thursday, May 7, 2015

சல்மானுடன் காரில் பாதுகாப்புக்குச் சென்றதால் சாகும் வரை கொடூரத்தை சந்தித்த கான்ஸ்டபிள்: நண்பர் கண்ணீர் பேட்டி

கான்ஸ்டபிள் ரவீந்திர பாட்டீல் (உள்படம்) , காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபோது எடுத்த படம்.

சல்மான் கான் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது குறித்து, அவருடன் பாதுகாப்புக் குச் சென்ற போலீஸ் கான்ஸ்டபிள் தான் போலீஸில் புகார் கொடுத் தார். பின்னர் போலீஸ் தரப்பில் இருந்தும், பலதரப்பில் இருந்தும் அவருக்குக் கடும் நெருக்கடிகள் வந்துள்ளன. ஆனால், கடைசி வரை தனது புகாரில் உறுதியாக இருந்த கான்ஸ்டபிள், காச நோயால் பரிதாபமாக இறந்துள்ளார்.

சல்மான் கான் உயிருக்கு, மும்பை நிழல் உலக தாதாக்களால் ஆபத்து இருப்பதாக கூறப் பட்டது. அதனால், அவருக்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. கடந்த 1998-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ரவீந்திர பாட்டீலை, சல்மான் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பினர்.

சல்மான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பாட்டீல் அவருடன் காரில் சென்றுவந்தார். கடந்த 2002-ம் ஆண்டு ஒரு நாள் இரவு, அதிகமாக மது குடித்து விட்டு காரை தானே ஓட்டியுள்ளார் சல்மான்.

அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து வந்த பாட்டீல், சல்மானை எச்சரித்துள்ளார். காரை மெதுவாக ஓட்டுங்கள் என்று கூறியுள்ளார். அதை அலட்சியப்படுத்திய சல்மான், காரை தாறுமாறாக ஓட்டி நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றினார். இந்த விபத்தில் பாட்டீலுக்கும் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு, சல்மான் கானுக்கு எதிராக கான்ஸ்டபிள் பாட்டீல்தான் புகார் கொடுத்துள்ளார். அதன் பிறகு அவர் பல பிரச்சினைகளை, மிரட்டல்களை, நெருக்கடிகளைச் சந்தித்துள்ளார்.

கார் விபத்து குறித்த வழக்கை முதலில் மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரித்தபோது, எதைப் பற்றியும் கவலைப்படாத பாட்டீல், துணிச்சலாக நடந்த விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவித்தார். குடி மயக்கத்தில் இருந்ததால், காரை மெதுவாக ஓட்டும்படி சல்மானை எச்சரித்தேன். அதை அவர் கேட்கவில்லை என்று சாட்சியம் அளித்தார். இந்த வாக்குமூலத்தை மாற்றி சொல்லும்படி, பாட்டீலுக்கு பல தரப்பில் இருந்து நெருக்கடிகள் வந்துள்ளன.

நெருக்கடி முற்றியதால், பாட்டீல் திடீரென காணாமல் போனார். சல்மான் கானின் வழக்கறிஞர்களின் நெருக்கடி யைத் தாங்க முடியாமல் தலைமறை வானதாக அப்போது கூறப்பட்டது. அத்துடன் போலீஸ் துறையில் இருந்தவர்களே, சல்மான் மீது கூறப்பட்ட புகாரை மாற்றி சொல் லும்படி நிர்பந்தம் கொடுத்தனர் என்று புகார் எழுந்தது. அதன்பின், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறி கடந்த 2006-ம் ஆண்டு போலீஸார் பாட்டீலை கைது செய்தனர். அத்துடன் கான்ஸ்டபிள் பணியில் இருந்தும் அவரை நீக்கினர்.

அதன்பிறகு கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீவ்ரி பகுதியில் உள்ள ஒரு தெருவில் அநாதையாக பாட்டீல் கிடந்தார். அவரது நண்பர் ஒருவர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். காசநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டி ருந்தார் பாட்டீல். அதனால், அவரது குடும்பத்தினரும் அவரை அநாதையாக விரட்டி உள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 2007 அக்டோபர் மாதம் பரிதாபமாக பாட்டீல் இறந்து விட்டார்.

பாட்டீலை மருத்துவமனையில் சேர்த்தது அவரது நண்பர் சுஷாந்த் சாவந்த் என்பவர் தான். அவர் கூறும்போது, ‘‘பாட்டீல் எனக்கு சிறந்த நண்பர்.

இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னர், பாட்டீல் என்னிடம் மனம் திறந்து பேசினார். ‘சல்மான் கான் மீது தான் கூறிய புகாரில் கடைசி வரை உறுதியாக இருந்தேன். ஆனால், என்னுடைய போலீஸ் துறையினரே எனக்கு ஆதரவாக இல்லை. எனக்கு மீண்டும் கான்ஸ்டபிள் வேலை வேண்டும். நான் வாழ வேண்டும். ஒரு முறை போலீஸ் கமிஷனரைச் சந்தித்துவிட வேண்டும்’ என்று கூறினார். ஆனால், பரிதாபமாக உயிரிழந்து விட்டார்’’ என்றார்.

இப்போது சல்மானுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, இறந்தவர், படுகாயம் அடைந்த 4 பேருக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, பரிதாபமாக உயிரிழந்த கான்ஸ்டபிளுக்கும்தான் என்கிறார் அவரது நண்பர்.

பிளஸ் 2 தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் சாதனை; கலெக்டருக்கு குவியும் பாராட்டுக்கள்!

சென்னை: கல்வியில் பின்தங்கியிருந்த பெரம்பலூர் மாவட்டம், பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் இரண்டாவது இடத்தையும், அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தில் 94.34% பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்தும் சாதனை படைத்துள்ளது. மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமதுவே இந்த சாதனைக்கு முக்கிய காரணம் என பாராட்டுகிறார்கள் அம்மாவட்ட மக்கள்.
 


12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், முதல் 14 இடங்களைப் பிடித்த மாவட்டங்களில் பெரம்பலூரைத் தவிர வேறு ஒன்று கூட வட தமிழகத்தைச் சேர்ந்ததில்லை.

கடந்த முறை 2014 –ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 93 சதவிகிதத்தை எட்டியிருந்தது.தற்போது 2015-ஆம் ஆண்டில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 97.25% தேர்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை எட்டி பிடிக்கவும், கல்வி அறிவில் பெரம்பலூர் மாவட்டத்தை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தரேஸ் அகமதுதான் காரணம் என்கிறார்கள்,பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள்.

அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம்

அதேப்போன்று அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்திலும் பெரம்பலூர் மாவட்டம் 94.34% பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளையும் தேர்வு செய்து, அவற்றை மூன்று வகைகளாகப் பிரித்து, தேர்ச்சியில் 50 சதவிகிதத்துக்கும் கீழ் உள்ள பள்ளிகளுக்கு சிவப்பு ஸ்டிக்கர், 70 சதவிகிதம் உள்ள பள்ளிகளுக்கு மஞ்சள் ஸ்டிக்கர், 80 முதல் 100 சதவிகிதம் உள்ள பள்ளிகளுக்கு பச்சை ஸ்டிக்கர் என அடையாளம் கொடுத்திருந்தார்கள். அதன்படி, தேர்ச்சி விகிதம் குறைவான பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

இவை மட்டும் இல்லாமல் சூப்பர் 30 என்று ஒரு அமைப்பு அமைத்து அதில் மாணவ,மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் அமைத்து கொடுத்துள்ளார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்.அவற்றில் பயின்ற மாணவ,மாணவிகளுக்கு நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவர்களில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள்:


1.வேளாங்கண்ணி - பெரம்பலூர் 1161


2. அசோக்குமார் 1147 - பெரம்பலூர்


3. சௌந்தர்யா 1141 - சு.ஆடுதுறை

இந்த மூன்று மாணவ,மாணவிகளும் சூப்பர் 30 அமைப்பில் பயின்றவர்கள்.பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு மீட்கப்படட மாணவியர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத மாவட்ட நிரவாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.இதனால் அம்மாணவிகள் கல்வி படிப்பை தொடர்ந்தார்கள். இவற்றில் 19 மாணவியர் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றார்கள்.


பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் 8296. வெற்றி பெற்றவர்கள் 8068.


பெரம்பலூர் மாவட்டத்தில் அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ,மாணவிகள்:

முதல் இடம்:
ராஜதுரை-1180-ராஜவிக்னேஸ் மேல்நிலை பள்ளி.மேலமாத்தூர்.


2-ம் இடம்:
ரேணுகா-1177-ராமகிருஷ்ணா மெட்ரிக்பள்ளி, பெரம்பலூர்.


3-வது இடம்:
மீனா-1176 ராஜவிக்னேஸ் மேல்நிலைப்பள்ளி.மேலமாத்தூர் பெரம்பலூர் மாவட்டம்



இதனிடையே, பெரம்பலூர் மாவட்டத்தை தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்தில் இரண்டாவது இடத்திற்கு கொண்டு வந்ததற்காக அம்மாவட்டத்தின் ஆட்சியர் தரேஸ் அகமதுக்கும், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.


ஆனால், கடைசி 10 இடங்களில் உள்ள மாவட்டங்களில் அரியலூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி , திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்கள் வடதமிழகத்தைச் சேர்ந்தவையாகும். இந்த ஆண்டுதான் இந்த நிலை என்று இல்லை. பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இன்று வரையிலான 36 ஆண்டுகளாகவே இதேநிலைதான் நீடிக்கிறது.

-ர.ரஞ்சிதா ( மாணவ பத்திரிகையாளர்)

பிளஸ் 2 தேர்வில் துபாய் வந்தது எப்படி? ருசிகர தகவல்கள்!

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் தமிழகத்தின் மாவட்ட வாரியாக மாணவ மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறித்த பட்டியல் பற்றிய தகவல்கள் வெளியாகின.

அதில் ‘ துபாய் ’ என்ற பெயரும் இடம் பெற்றிருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

கேலியும் கிண்டலுமாக நம்ம 'நெட்டிசன்கள்' வடிவேல் பாணியில் துபாய் எங்கே இருக்கிறது...? அது தூத்துக்குடி பக்கம் ... உசிலம்பட்டி பக்கம் இருக்கு... என்று கிண்டல் அடித்து வருகின்றனர்.


அத்தோடு வாட்ஸ் அப் மூலம் அரசுத் தேர்வுத்துறையைக் கிண்டல் அடித்து கலாய்க்கிறார்கள்.

ஆனால் இதில் பலருக்கு தெரியாத உண்மை இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை துபாயில் வாழும் தமிழர்களின் வாரிசுகள் நமது அரசு தேர்வுத்துறை மூலம் எழுதுகிறார்கள் என்பதே அது.

இந்த சுவாரஸ்ய தகவல்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரி, டாக்டர் ராஜராஜேஸ்வரியைத் தொடர்பு கொண்டு கேட்டோம்.

"இந்தியா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பலர் வேலை நிமித்தமாக துபாய்க்கு போய் செட்டில் ஆகிறார்கள். ஆனால் துபாய் நாட்டில் பாடத்திட்டங்கள் அனைத்தும் அரேபிய மொழி மற்றும் உருது மொழியில் இருப்பதால் தமிழர்கள் பலரும் நம் தமிழ்நாட்டு பாடத்திட்டத்தைப் பின்பற்றி தங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். துபாயில் ‘ கிரசண்ட் ’ என்ற தனியார் பள்ளி ஒன்று அங்குள்ள தமிழர்களால் நடத்தப்படுகிறது. அங்கு ஆங்கில மீடியம் மூலம் தமிழ் பாடங்களை நடத்துகிறார்கள். கடந்த 2007 ஆம் ஆண்டு வரை கிரசண்ட் பள்ளி உயர்நிலைப்பள்ளியாக இருந்து வந்தது.

இப்போது மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே அங்கு படிக்கும் தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வை ஆண்டு தோறும் அரசுத்தேர்வுத்துறை மூலம் எழுதுகிறார்கள். இங்கே எப்படி தமிழகம் தவிர பாண்டிச்சேரிக்கும் நாம் தேர்வு நடத்துகிறோமோ, அதே மாதிரிதான் துபாய் பள்ளி மாணவர்களுக்கும் தேர்வு நடத்துகிறோம். துபாயில் பள்ளி தொடங்கியதுமே நமது ஆங்கிலம் மீடியம் பாட நூல்களை கூரியர் மூலம் அனுப்பி வைத்து விடுவோம்.

அதே நேரம் அந்தப் பள்ளியில் ஆர்ட்ஸ் குரூப் படிப்புக்கு மட்டுமே அனுமதி. அறிவியல் பாடத்திட்டத்திற்கு அனுமதி கிடையாது. ஏனென்றால் அறிவியல் பாடத்திட்டம் என்றால் பிளஸ் 2 தேர்வின் போது சயின்ஸ் பிராக்டிக்கல் செய்முறைத்தேர்வு நடத்த வேண்டும்.

அதைக் கண்காணிக்க இங்கிருந்து அதிகாரிகளை அனுப்பி வைக்க வேண்டும். இதுவெல்லாம் சாத்தியம் இல்லை என்பதால் கணக்கு, வரலாறு, வணிகவியல் பாடத்திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி. எனவே பொதுத்தேர்வு எழுத துபாயில் இருந்து பள்ளி மூலம் மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள். இங்கிருந்து ஹால் டிக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்படும். பிறகு எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வு வினாத்தாள்களை இந்திய தூதரகத்திற்கு கூரியர் மூலம் அனுப்பி வைப்போம்.

தமிழகத்தில் தேர்வு தொடங்கும் அதே நாளில் இந்திய தூதரகக் கண்காணிப்பாளர் கண்காணிப்பில் தேர்வுகள் நடக்கும். விடைத்தாள்களை இந்திய தூதரக அதிகாரிகள் தமிழக அரசு தேர்வுத்துறைக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை துபாய் கிரசண்ட் பள்ளி மூலம் 20 மாணவர்கள் எழுதினர். அதில் 19 பேர் மட்டுமே பாஸ் ஆனார்கள். ஒருவர் தோல்வி அடைந்து விட்டார். எனவே இந்த ஆண்டு துபாய் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 95 சதவீதம். இந்திய தூதரகம் மூலம் அவர்களுக்கான மார்க் சீட்டுக்கள் அனுப்பி வைக்கப்படும்" என்றார் அவர்.
எம்.கார்த்தி.

தேர்வு முடிவை பார்ப்பதற்கு முன்பே தீ குளித்த பிளஸ் 2 மாணவி உயிர் ஊசல்!


விழுப்புரம்: தோல்வி பயத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பார்ப்பதற்கு முன்பே மாணவி ஒருவர் உடலில் மண்எண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் விழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. விழுப்புரம் தோகைப்பாடியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி தேவதர்ஷனி, கடந்த இரண்டு நாட்களாகவே தான் தேர்வில் வெற்றி பெறுவது கடினம் என்று தனது நண்பர்களிடம் கூறியிருக்கிறார்.

இன்று காலை பதற்றத்தில் இருந்த அவர், தனது மதிப்பெண்களை பார்ப்பதற்கு முன்பே தோல்வி பயத்தில் வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துள்ளார்.

தேவதர்ஷினியின் அலறல் சத்தத்தை கேட்டு சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த அவரது தாயார் அதிர்ச்சியுடன் வந்து பார்த்தபோது, மகளின் உடல் முழுவதும் தீ பரவியிருக்கிறது. அருகில் இருந்தவர்களில் உதவியுடன் உடலில் எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தீக்காயங்கள் அதிகம் இருப்பதால், மேல் சிகிச்சைகாக தேவதர்ஷினி புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தேவதர்ஷினியின் உடலில் எரிந்த தீ, அவர்களில் குடிசை வீட்டிலும் பரவியதால் வீடு முழுவதும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. தேவதர்ஷியின் குடும்பத்தினர் தேர்வு முடிவுகளை பார்த்தபோது, அவர் கணக்கு பாடத்தில் தோல்வியடைந்திருப்பது தெரியவந்துள்ளது.

-ஆ.நந்தகுமார்

படங்கள்: தே.சிலம்பரசன்

Photographs of Gandhi, Ambedkar stolen from health university

When officials of the Rajiv Gandhi University of Health Sciences (RGUHS) opened the doors of their offices on Tuesday morning, they found something was amiss.

Among the things missing were photos of Gandhiji and B.R. Ambedkar.

Further enquiries revealed that a mobile phone and an audio recording device too were stolen. But no files or important documents were touched. The university has registered a complaint with the Tilak Nagar police station.

S. Sacchidananda, Registrar (Evaluation), RGUHS, said they were suspecting the involvement of insiders. “The locks were not damaged. Gold medals were untouched, so was a small amount of cash. It almost looks like a mischief,” he said.

This unusual robbery has prompted the varsity authorities to beef up security near their premises, with entry from the hospital side being tightened.

'மாணவர்களுக்கு கடும் தண்டனை கூடாது': ஐகோர்ட் கிளை உத்தரவு


மதுரை: 'கல்வி நிறுவனங்களில், ஒழுக்கம் முக்கியம்; மாணவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை, மிகக் கடுமையாக இருக்கக்கூடாது' என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தேர்வு எழுத தடை:

மதுரை மாவட்டம், சோழவந்தான், திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில், பி.ஏ., (பொருளியல்) மூன்றாமாண்டு படித்த மாணவர் ஒருவர், கடந்த, மார்ச், 15ம் தேதி, மது அருந்தியதாக கூறி, வகுப்பிற்கு வரவும், இறுதி பருவத் தேர்வு எழுதவும் தடை விதித்து, நிர்வாகம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, 'தேர்வு எழுத அனுமதிக்காவிட்டால், என் எதிர்காலம் பாதிக்கப்படும். வகுப்பில் பங்கேற்கவும், தேர்வு எழுத அனுமதித்தும் உத்தரவிட வேண்டும்' என, மாணவர் மனு செய்தார். விசாரணை நடத்திய தனி நீதிபதி, 'மாணவர்கள், எதிர்காலத்தில் தேசத்தை வழி நடத்தக்கூடியவர்கள்; அவர்களுக்கு, ஒழுக்கம் முக்கியம். மனுதாரர், தவறை ஒப்புக்கொண்டுள்ளார்; மனுவை தள்ளுபடி செய்கிறேன்' என்றார். இதை எதிர்த்து, மாணவர் மேல்முறையீடு செய்தார். இம்மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எஸ்.மணிக்குமார் ஆகியோர் அடங்கிய, 'பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: கல்லூரி நிர்வாகம், 'மனுதாரரை, ஓராண்டிற்கு தேர்வு எழுத அனுமதிக்க முடியாது' என்ற தடையை நீக்குகிறோம். 'மாணவரை, வகுப்பில் பங்கேற்க அனுமதிக்க மாட்டோம். ஜூனில் சிறப்புத் தேர்வு நடத்தி முடிவை வெளியிடுவோம்' என, இறுக்க மனப்பான்மையுடன் நடந்துகொள்வதாக கூறியுள்ளது. இதன் மூலம், மனுதாரர், மேற்படிப்பை தொடர முடியும்.

ஒழுக்கம் முக்கியம்:

கல்லூரி நிர்வாகத்தின் கருத்து ஏற்கும்படி உள்ளது. கல்வி நிறுவனங்களில், ஒழுக்கம் முக்கியம். தற்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியானது, மாணவர்களிடம் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் நன்மை, தீமைகளை அறிந்து கையாளத் தெரிய வேண்டும். ஒழுக்கம் முக்கியம் என்பதையும் தாண்டி, வெளி உலக சூழ்நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும். அதே சமயம், தங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.

கடுமை கூடாது:

மாணவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையும் மிகக் கடுமையாக இருக்கக்கூடாது. கல்லூரி நிர்வாகத்தின் நல்ல முடிவை பாராட்டுகிறோம். தனி நீதிபதியின் உத்தரவு மாற்றியமைக்கப்படுகிறது; வழக்கு முடிக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

NEWS TODAY 04.10.2026