தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. விழுப்புரம் தோகைப்பாடியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி தேவதர்ஷனி, கடந்த இரண்டு நாட்களாகவே தான் தேர்வில் வெற்றி பெறுவது கடினம் என்று தனது நண்பர்களிடம் கூறியிருக்கிறார்.
இன்று காலை பதற்றத்தில் இருந்த அவர், தனது மதிப்பெண்களை பார்ப்பதற்கு முன்பே தோல்வி பயத்தில் வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துள்ளார்.
தேவதர்ஷினியின் அலறல் சத்தத்தை கேட்டு சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த அவரது தாயார் அதிர்ச்சியுடன் வந்து பார்த்தபோது, மகளின் உடல் முழுவதும் தீ பரவியிருக்கிறது. அருகில் இருந்தவர்களில் உதவியுடன் உடலில் எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தீக்காயங்கள் அதிகம் இருப்பதால், மேல் சிகிச்சைகாக தேவதர்ஷினி புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தேவதர்ஷினியின் உடலில் எரிந்த தீ, அவர்களில் குடிசை வீட்டிலும் பரவியதால் வீடு முழுவதும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. தேவதர்ஷியின் குடும்பத்தினர் தேர்வு முடிவுகளை பார்த்தபோது, அவர் கணக்கு பாடத்தில் தோல்வியடைந்திருப்பது தெரியவந்துள்ளது.
-ஆ.நந்தகுமார்
படங்கள்: தே.சிலம்பரசன்
No comments:
Post a Comment