Friday, May 29, 2015

ஜூலை 1 முதல் அறிமுகமாகிறது சுவிதா எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட் திட்டம்

ரயில் டிக்கெட் முன்பதிவில் பயணிகளின் வசதிக்காக ஜூலை 1ம் தேதி முதல் அறிமுகமாக உள்ளது சுவிதா எக்ஸ்பிரஸ் என்ற ரயில் டிக்கெட் திட்டம்.

டைனமிக் டிக்கெட் முன்பதிவு முறையில், தேவைக்கு ஏற்ப ரயில் டிக்கெட் விலை பல மடங்கு உயர்வதால், பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களைத் தடுக்கும் வகையில் சுவிதா ரயில் டிக்கெட் முறை அறிமுகமாகிறது.

இந்த திட்டத்தின் கீழ், ரயில் டிக்கெட், தேவைக்கு ஏற்ப உயரும். ஆனால், இரண்டு மடங்கை விட அதிகமாக இருக்காது என்பதால், பயணிகளுக்கு சிரமம் ஏற்படாது.

எனவே, ப்ரீமியம் ரயிலுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு திட்டமே இதன் மூலம் மாற்றியமைக்கப்படுகிறது. ஆன்லைன் மூலமாக மட்டும் அல்லாமல், ரிசர்வேஷன் கவுண்டர்களிலும் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024