சென்னை,
முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்பதையொட்டி, சென்னையில் உள்ள அனைத்து ‘அம்மா’ உணவகங்களிலும் 3 வேளை உணவுகளும் மேயர் சைதை துரைசாமி ஏற்பாட்டில் இன்று(சனிக்கிழமை) இலவசமாக வழங்கப்படுகிறது.
‘அம்மா’ உணவகம்
சென்னை மாநகராட்சியில் 207 ‘அம்மா’ உணவகங்கள் உள்ளன. இங்கு 1 ரூபாய்க்கு 1 இட்லியும், 5 ரூபாய்க்கு சாப்பாடும் என மலிவான விலையில், தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் மகத்தான திட்டத்தில் ‘அம்மா’ உணவகமும் ஒன்றாக உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கடந்த 11-ந்தேதி ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார்.
அவருடைய விடுதலையை வரவேற்று சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, அன்றைய தினம் தனது சொந்த செலவில் சென்னையில் உள்ள 207 அம்மா உணவகங்களிலும் லட்டு வழங்கினார்.
இலவச உணவு
இந்தநிலையில் ஜெயலலிதா தமிழகத்தின் முதல்-அமைச்சராக இன்று(சனிக்கிழமை) பதவி ஏற்க உள்ளார். இதை கொண்டாடும்விதமாக மேயர் சைதை துரைசாமி சென்னையில் உள்ள 207 ‘அம்மா’ உணவகங்களிலும் இன்று காலை, மதியம், இரவு என மூன்று வேளை உணவுகளையும் இலவசமாக வழங்குகிறார். இதற்கு ஆகும் மொத்த செலவையும் மேயர் சைதை துரைசாமியே ஏற்றுக்கொள்கிறார்.

No comments:
Post a Comment