Sunday, May 31, 2015

தடம் மாறி பல ஊர்களை சுற்றிய ஆம்னி பஸ்:பயணிகள் எரிச்சலால் டிரைவர் 'எஸ்கேப்'

திருப்பூர்:சென்னையில் இருந்து கோவை செல்ல வேண்டிய ஆம்னி பஸ், நான்கு மணி நேரம் தாமதமாக, பல ஊர்களை சுற்றி, தேவையில்லாமல், திருப்பூர் சென்றதால், பயணிகள் எரிச்சல் அடைந்து, பஸ்சை சிறைபிடித்தனர். இதனால், பஸ்சை அப்படியே விட்டு விட்டு, டிரைவர் ஓட்டம் பிடித்தார்.சென்னை, கோயம்பேட்டில் இருந்து கோவைக்கு, நேற்று முன்தினம் இரவு, ஆம்னி பஸ் புறப்பட்டது. சென்னையிலேயே, இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

டவுன் பஸ்சா இருக்குமோ?மேலும், பஸ், பைபாஸ் ரோட்டில் வராமல், பல ஊர்களை சுற்றிக்கொண்டு, நேற்று காலை, 10:00 மணிக்கு, திருப்பூர் வந்தது.

ஈரோட்டில் இருந்து அவினாசி வழியாக, நேராக, கோவைக்கு செல்ல வேண்டிய பஸ், தேவையில்லாமல், திருப்பூர் நகருக்குள் நுழைந்ததால், பயணிகள்

ஆத்திரம் அடைந்தனர்.பயணிகள், டிரைவருடன் வாக்குவாதம் செய்தனர். அதிர்ச்சி அடைந்த டிரைவர், பஸ்சை, அறிவொளி ரோடு அருகே நிறுத்திவிட்டு, கூலாக இறங்கிச்

சென்றுவிட்டார்.பஸ்சில், அவர் ஒருவர் தவிர, வேறு ஊழியர் இல்லை. பஸ்சை சிறைபிடித்து, பயணிகள் போராட்டம் நடத்தினர். தெற்கு போக்குவரத்து போலீசார், ஓட்டம் பிடித்த டிரைவரை கண்டுபிடித்து, அழைத்து வந்தனர். பஸ், தெற்கு போலீஸ்

ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டது. நீண்ட நேரம் கழித்து, போலீசார் சமாதானம் செய்து, பஸ்சை அனுப்பினர்.




சரமாரி குற்றச்சாட்டு:

பயணிகள் கூறியதாவது:l நாங்கள் அனைவருமே, வெவ்வேறு நிறுவனங்களில், டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள். ஆனால், 30 பேரையும் ஒருங்கிணைத்து, இந்த பஸ்சில் அனுப்பினர்.

l 'புக்கிங்' செய்த பஸ்சில், எங்களை அனுமதிக்கவில்லை. 1,000 ரூபாய் டிக்கெட், ஸ்லீப்பர், செமி ஸ்லீப்பர், 'ஏசி' என, பல விதங்களில், கதைவிட்டு, எங்களை ஏமாற்றி உள்ளனர்.

l காலை, 6:30 மணிக்கு, கோவை வர வேண்டிய பஸ், டவுன் பஸ் போல், பல ஊர்களை

சுற்றிவிட்டு, திருப்பூர் வந்தது.

l சென்னையில் இருந்து, இரவு முழுவதும், ஒரே டிரைவர், உதவியாளர் கூட இல்லாமல், பஸ்சை ஓட்டி வந்தார். உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் பயணித்தோம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.




நடவடிக்கை பாயுமா?

ஆம்னி பஸ்கள், விதம் விதமாக, பயணிகளை ஏமாற்றுகின்றன. இது, அரசுக்கு தெரியாத விஷயமாக இருக்க முடியாது.

பல நிறுவனங்களில் பதிவு செய்தவர்களை, ஒரு பஸ்சில்

அனுப்பியது, எந்த வகையில் நியாயம்?

அதிலும், மாற்று டிரைவர், உதவியாளர் என, யாருமே

இல்லாமல், டிரைவரை மட்டும் அனுப்பியது எப்படி?

குறிப்பிட்ட பஸ் நிறுவனத்திடம், அரசு விசாரணை நடத்தி,

இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படாதபடி தடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024