Wednesday, May 27, 2015

பி.இ. சேர்க்கை; விண்ணப்பிப்போர் எண்ணிக்கை குறைந்தது: கால அவகாசம் நீட்டிப்பு இல்லை

பெறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு விண்ணப்ப விநியோகம் கடந்த ஆண்டுகளை விட குறைந்திருப்பதோடு, பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் இந்த முறை குறைந்து காணப்படுகிறது.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில் 80 ஆயிரம் பேர் மட்டுமே சமர்ப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், விண்ணப்ப விநியோகமும் இதுவரை 2 லட்சத்தை எட்டவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

2013-14 கல்வியாண்டில் 2.35 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகமாகின. இதில், 1.90 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். 2014-15 கல்வியாண்டில் 2.13 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகமாகின. 

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 1.75 லட்சம் பேர் சமர்ப்பித்திருந்தனர். ஆனால், இந்த முறை பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில் 80 ஆயிரம் பேர் மட்டுமே சமர்ப்பித்துள்ளனர். இதுபோல, விண்ணப்ப விநியோகம் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 27-ஆம் தேதியும், சென்னை மையங்களில் 29-ஆம் தேதியும் முடிவடையவுள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை வரை 1.87 லட்சம் என்ற அளவுக்கே விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளன.

கால அவகாசம் நீட்டிப்பு இல்லை: இந்த நிலையில், கடந்த 2014-15 கல்வியாண்டில் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் குறைவாக இருந்ததால், விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதுபோல, இந்த முறையும் கடைசித் தேதி நீட்டிப்பு செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.இதுகுறித்து அண்ணா பல்
கலைக்கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:
இந்த முறை போதிய கால அவகாசம் இருப்பதால், விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பே இல்லை. மேலும், புதன்கிழமை முதல் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024