Sunday, May 31, 2015

'புளூடூத்' வசதியுடைய குடை:கேரளாவில் விற்பனை ஜோர்

கோட்டயம்:மொபைல் போனில் பேசுவதற்கும், பாடல்கள் கேட்பதற்கும் வசதியான நவீன குடைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, விற்பனையில் சக்கை போடு போடுகின்றன.

கேரளாவில், பருவமழை காலங்களில், பெரும்பாலான நாட்கள், பலத்த மழை பெய்யும். அதனால், இங்குள்ள வீடுகளில், ஐந்து உறுப்பினர்கள் இருந்தால், கண்டிப்பாக ஐந்து குடைகள் இருக்கும். கேரளாவுக்கும், டீக்கடைக்கும் உள்ள தொடர்பு போல், குடைகளுக்கும் அதுபோன்ற தொடர்பு உண்டு.

கேரளாவில் வசிப்பவர்களை பற்றி கார்டூன் போட்டால், கண்டிப்பாக அந்த கார்டூனில் இருப்பவரின் ஒரு கையில் மலையாள நாளிதழும், மற்றொரு கையில் குடையும் இருக்கும். அந்த அளவுக்கு கேரள மக்களுடன், குடை கலாசாரம் பின்னிபிணைந்துள்ளது. இதை பயன்படுத்தி, கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும், லட்சக்கணக்கான குடைகள் விற்பனையாகின்றன. 'மழ மழ, குட குட; மழை வந்தால் குட குட' என்ற விளம்பர பாடல் கேரளாவில் மிகவும் பிரபலம். இந்தாண்டு குடை விற்பனையில், நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள குடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த குடைகள், 'புளூடூத்' அல்லது 'வை - பை' வசதியுடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

மழை பெய்யும்போது, இந்த குடையுடன் சென்றால், பாக்கெட்டில் இருக்கும் மொபைல் போனில் உள்ள, 'புளூடூத்' தொழில்நுட்பத்தை குடையில் உள்ள, 'புளூடூத்' உடன் இணைப்பை ஏற்படுத்தலாம். இதன்மூலம், பாக்கெட்டில் இருந்து மொபைல் போனை வெளியில் எடுக்காமலேயே, மற்றவர்களை போன் மூலம் தொடர்பு கொள்ளவும், அதில் உள்ள இசையை கேட்டு ரசிக்கவும் முடியும். இந்த நவீன குடைகள் விற்பனை, கேரளாவில் தற்போது சக்கை போடு போடுகிறது.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...