Saturday, May 23, 2015

எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர முடியுமா? சி.பி.எஸ்.இ., மாணவர்கள் குழப்பம்

சென்னை: சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில், தாமதம் ஏற்பட்டுள்ளதால், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு மாணவ, மாணவியர், விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப வினியோகம் நடந்து வருகிறது. விண்ணப்பிக்க, வரும் 29ம் தேதி கடைசி நாள். மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள், இந்த படிப்புகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், சி.பி.எஸ்.சி., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள், வெளியாவதில் தாமதம் ஆகி வருகிறது. இதனால், தாங்கள் விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்படுமோ என, சி.பி.எஸ்.இ., மாணவ, மாணவியர் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, மருத்து மாணவர் சேர்க்கை செயலர் சுகுமார் கூறியதாவது:


முடிவுகள் தாமதம்:


சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் தாமதம் ஏற்படுவதால், எந்த சிக்கலும் இல்லை. வரும் 28ம் தேதி வரை, விண்ணப்பங்கள் கிடைக்கும்; விண்ணப்பத்தை வாங்கி வைத்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்க, 29ம் தேதி வரை அவகாசம் உள்ளது; அதற்கு முன், தேர்வு முடிவுகள் வந்து விடும்; மேலும், தாமதம் ஏற்படும் என்றால், மாற்றாக என்ன செய்வது என்பது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

T.N. govt. to launch health insurance for the elderly

T.N. govt. to launch health insurance for the elderly The Hindu Bureau CHENNAI. 18.08.2026 Tamil Nadu will launch the ‘Chief Minister’s Elde...