தமிழகத்தில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம், வண்டலூர் தாகூர் பொறியியல் கல்லூரி, கேளம்பாக்கம் செட்டிநாடு பல் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 14 கல்வி நிறுவனங்களுக்கு "ஏ' கிரேடு தரச் சான்றிதழை மத்திய தர மதிப்பீடு மற்றும் அங்கீகார அமைப்பு (நாக்) வழங்கி உள்ளது.
ஜஸ்பால் சந்து தலைமையிலான குழு, நாடு முழுவதும் உள்ள 275 கல்வி நிறுவனங்களில் தர மதிப்பீடு ஆய்வு நடவடிக்கை மேற்கொண்டது.
இதில் சென்னை பாரதி மகளிர் கல்லூரி, பேட்ரீசியன் கலை அறிவியல் கல்லூரி, காஞ்சிபுரம் ஆதி பராசக்தி பொறியியல் கல்லூரி, ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி, திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி உள்ளிட்ட 14 கல்வி நிறுவனங்களுக்கு "ஏ' கிரேடு தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தாகூர் பொறியியல் கல்லூரி முதல்வர் பி.காசிநாத பாண்டியன் கூறியதாவது:
"ஏ' கிரேடு தரச் சான்றிதழ் பெற்றுள்ள கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்து திறன்சார் பயிற்சி நடத்துவதற்கான நிதி பெறும் தகுதியைப் பெற்றுள்ளன.
பயிற்சி வகுப்புகள் தொடங்கும் அரசு கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு தேசிய திறன்சார் தகுதி மேம்பாட்டு மையம் பரிந்துரையின்படி நிதி வழங்க முடிவு செய்துள்ளது. திறன்சார் பயிற்சி வகுப்புகள் தொடங்க விரும்பும் "ஏ' கிரேடு தரச் சான்றிதழ் பெற்ற கல்வி நிறுவனங்கள் தாங்கள் சார்ந்த பல்கலைக்கழகங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தி உள்ளது' என்றார்.

No comments:
Post a Comment