Wednesday, May 20, 2015

ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்பதில் பிரச்னையில்லை: சுப்பிரமணியன் சுவாமி

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பதில் பிரச்னையில்லை என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசின் முடிவுக்காக காத்திருக்கிறேன். அம்மாநில அரசு எந்த முடிவை எடுத்தாலும் நான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன். பாஜக ஜனநாயகக் கட்சி. ஆகவே அதில் கருத்துக்கூறும் சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது. ஜெயலலிதாவை நன்கு தெரிந்தவர் என்ற ரீதியிலே பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றுவதே கட்சி கருத்தாகும். ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை.

திமுக தலைவர் கருணாநிதியை நம்பமுடியாது. பாஜகவுடன் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அமைய சாத்தியமில்லை. ஜெயலலிதாவுக்கு பாஜகவுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்ற நிர்பந்தம் உள்ளது. பாஜக தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் அளவுக்கு வலிமை பெற்றுள்ளது. திமுக, அதிமுக ஆட்சியின் அவலத்தைக் கண்டு அதிருப்தியடைந்த மக்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024