Wednesday, May 20, 2015

சொந்த ஊரில் பணிபுரிந்தால் எல்.டி.சி., சலுகை கிடையாது

புதுடில்லி: மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், ஒவ்வொரு ஆண்டும் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வர, எல்.டி.சி., எனப்படும், விடுமுறை கால பயணச் சலுகை வழங்கப்படுகிறது. இதன்படி, வெளியூர்களில் பணியாற்றும் ஊழியர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருவதற்கான விடுப்பு, அதற்கு ஆகும் பயணச் செலவு போன்றவற்றை பெற முடியும். இந்நிலையில், தங்கள் சொந்த ஊரில், தலைமை அலுவலகம் அல்லது பணியாற்றும் அலுவலகங்களை உடைய மத்திய அரசு ஊழியர்கள், இனி, எல்.டி.சி., சலுகையை பெற முடியாது என, மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேநேரத்தில், வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு - காஷ்மீர் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் சுற்றுலாவை மேம்படுத்துவது அவசியம் என்பதால், அங்கு சென்று வரும் மத்திய அரசு ஊழியர்கள், எல்.டி.சி., சலுகையை அனுபவிக்கலாம் என, சமீபத்தில் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனால், பல ஊழியர்கள் இந்தப் பகுதிகளுக்கு பயணித்து, எல்.டி.சி., சலுகை பெற்று வந்தனர். தற்போது, அந்த சலுகையும் வாபஸ் பெறப்பட்டு உள்ளது. இதனால், பல ஊழியர்கள் இந்தப் பகுதிகளுக்கு பயணித்து, எல்.டி.சி., சலுகை பெற்று வந்தனர். தற்போது, அந்த சலுகையும் வாபஸ் பெறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024