Sunday, May 31, 2015

தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க நுழைவுக் கட்டணம் உயர்கிறது

ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மகாலை சுற்றிப் பார்ப்பதற்கான நுழைவுக் கட்டணத் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்த மத்திய சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது.

தற்போது இந்தியர்களுக்கு நுழைவுக் கட்டணமாக ரூ.20ம், வெளிநாட்டினருக்கு ரூ.750ம் வசூலிக்கப்படுகிறது.

இதனை முறையே ரூ.40ம், ரூ.1,250ம் என உயர்த்த மத்திய சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது. இந்த கட்டண உயர்வு அடுத்த மாதத்திலேயே கூட அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024