Sunday, May 31, 2015

விடாமல் அழுதது குழந்தை 'கட்' ஆனது விமான பயணம்

ஒட்டாவா:கனடாவைச் சேர்ந்த, பிரபல பாடகரும், பாடலாசிரியருமான சாரா பிளாக்வுட்டின், 2 வயது குழந்தை, விமானத்தில் தொடர்ந்து அழுததால், யுனெடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து, அவர் குழந்தையுடன் இறக்கி விடப்பட்டார். சான் பிரான்சிஸ்கோவில் நடந்த இந்த சம்பவம், அவரது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சாரா பிளாக்வுட்டின், 'வாக் ஆப் தி எர்த்' சர்வதேச அளவில், புகழ்பெற்ற ஆல்பம். இப்போது, ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கும் சாரா, சான் பிரான்சிஸ்கோவிலிருந்து வான்கூவருக்கு போக, தன் ௨ வயது மகன் ஜியார்ஜியோவுடன் யுனெடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறி உட்கார்ந்தார்.உடனே அழ ஆரம்பித்த ஜியார்ஜியோ, அழுகையை நிறுத்துவதாய் தெரியவில்லை, இதனால், எரிச்சலடைந்த ஏர்லைன்ஸ் ஊழியர்கள், விமான ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்த விமானத்தை, பாதுகாப்பு காரணங்களுக்காக என சொல்லி நிறுத்தினர்.

அடுத்து, சாராவை அவரது மகனோடு சேர்த்து விமானத்திலிருந்து இறக்கி விட்டனர். அந்த சமயத்தில், ஜியார்ஜியோ துாங்கி விட்டான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், விமானம் மீண்டும் கிளம்ப 75 நிமிடங்கள் தாமதமானது. இதை, சாரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, 'விமானங்கள் தாய்மார்களை வெறுக்கின்றன' என, குற்றம்சாட்டியிருந்தார். சக பயணிகளும், விமான நிறுவனத்தின் செயலை கண்டித்து கருத்து தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவத்தால், சாராவின் ரசிகர்கள் கொதித்துப் போய், விமான நிறுவனத்தை திட்டி தீர்க்கின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024