Friday, May 29, 2015

மாணவிக்கு ஜாதிச் சான்று மறுப்பு மருத்துவ விண்ணப்பம் ஏற்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு



மதுரை:'மாணவிக்கு ஜாதிச் சான்று மறுக்கப்பட்டதை காரணமாகக்கூறி மருத்துவப் படிப்பு விண்ணப்பத்தை நிராகரிக்கக்கூடாது' என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.அழகர் என்பவர் தாக்கல் செய்த மனு:துாத்துக்குடி விமான நிலையத்தில் பியூனாக வேலை செய்கிறேன். நான் பழங்குடியினர் (இந்து- மலைக்குறவன்) வகுப்பை சேர்ந்தவன் என தாசில்தார், உதவி -கலெக்டர் சான்று அளித்துள்ளனர். எனது மனைவிக்கும் அதே ஜாதிச் சான்று உள்ளது. பள்ளியில் எனது மகன், இரு மகள்கள் படிக்கின்றனர்.

இவர்களுக்கு ஜாதிச் சான்று கோரி திருநெல்வேலி ஆர்.டி.ஓ.,விடம் 2013ல் விண்ணப்பித்தோம். துாத்துக்குடி உதவி கலெக்டரிடம் மனு அளிக்குமாறு கூறினார். அவரிடம் 2015 பிப்.,25 ல் மனு அளித்தோம்.உதவி கலெக்டர், ஸ்ரீவைகுண்டம் தாசில்தாருக்கு பரிந்துரைத்தார். வல்லநாடு வி.ஏ.ஓ., மூலம் விசாரணை நடந்தது. ஜாதிச்சான்று வழங்க உதவி கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். ஆனால் ஜாதிச்சான்று வழங்கவில்லை.

துாத்துக்குடி கலெக்டரிடம் புகார் செய்தேன். கோபம் அடைந்த உதவி கலெக்டர், மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.எனது பெற்றோர் பழங்குடியினர் ஜாதிச்சான்று வைத்துள்ளனர். எனது மகள் புவனேஸ்வரி பிளஸ் 2 தேர்வில் 1123 மதிப்பெண் பெற்றார்.

பொறியியல், மருத்துவப் படிப்புகளில் விண்ணப்பிக்க கடைசிநாள் மே 29. ஜாதிச்சான்று வழங்காவிடில் புவனேஸ்வரியின் எதிர்காலம் பாதிக்கப்படும்.பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டின் கீழ் புவனேஸ்வரிக்கு ஜாதிச்சான்று சமர்ப்பிப்பதில் தற்காலிகமாக விலக்கு அளிக்க வேண்டும். மருத்துவம், பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்க மாணவர் சேர்க்கை மற்றும் தேர்வுக்குழு செயலர்களுக்கு உத்தரவிட வேண்டும். எனது வாரிசுகளுக்கு ஜாதிச் சான்று வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசு கூடுதல் வழக்கறிஞர் பாஸ்கர பாண்டியன், மனுதாரர் வழக்கறிஞர் ஆதித்ய விஜயாலயன் ஆஜராகினர்.நீதிபதிகள் ஆர்.மாலா, வி.எம்.வேலுமணி கொண்ட அமர்வு உத்தரவு:

ஜாதிச்சான்று சமர்ப்பிக்கவில்லை என்பதை காரணமாகக்கூறி புவனேஸ்வரியின் விண்ணப்பத்தை பொறியியல், மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை மற்றும் தேர்வுக்குழு செயலர்கள்

நிராகரிக்கக் கூடாது. தகுதி அடிப்படையில் மனுவை பரிசீலித்து ஜூன் 12 க்குள் ஜாதிச் சான்று வழங்குவதாக அரசுத் தரப்பில் தெரிவித்துள்ளனர். அவ்வாறு வழங்காத பட்சத்தில் மாணவர் சேர்க்கை செயலர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்கலாம்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...