Sunday, May 24, 2015

வங்கிகளுக்கு மாதத்தில், இரண்டு மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க, ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

வங்கிகளுக்கு மாதத்தில், இரண்டு மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க, ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி சீனிவாசன் கூறியதாவது: இந்திய வங்கிகள் சங்கத்துக்கும், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்புக்கும், ஊதிய உயர்வு ஒப்பந்தம், இரு மாதங்களுக்கு முன் ஏற்பட்டது. இதையடுத்து, தொடர் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது. இந்நிலையில், இரு தரப்புக்குமான விரிவான ஒப்பந்தம், மும்பையில் திங்கட்கிழமை கையெழுத்தாகிறது. புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம், 2017 அக்டோபர், 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். வங்கிகளுக்கு, மாதத்தில், இரண்டு மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை அளிக்க, ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு, ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு, இதற்கான ஆணையை விரைவில் வெளியிடும். அதைத் தொடர்ந்து, வங்கிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை நடைமுறைக்கு வரும். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024