Thursday, May 21, 2015

சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு அரசு அனுமதி அளிப்பதில் காலதாமதம்: விண்ணப்பம் வழங்க முடியாமல் திணறும் சட்ட பல்கலைக்கழகம்

சட்டப் படிப்பு மாணவர் சேர்க் கைக்கு அரசு அனுமதி அளிக்காத காரணத்தால் விண்ணப்பம் வழங்க முடியாமல் சட்டப் பல்கலைக் கழகம் திணறுகிறது. இதனால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய 7 இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் உள்ளன. சென் னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரி இயங்குகிறது.

அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு கால இளங்கலை சட்டப் படிப்புகளும் (பிஏ.எல்எல்பி), சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் ஐந்தாண்டு கால ஆனர்ஸ் சட்டப் படிப்பு களும் உள்ளன. இந்த ஆண்டு புதிதாக பிசிஏ.எல்எல்பி படிப்பும், பிபிஏ.எல்எல்பி படிப்பும் அறிமுகப் படுத்தப்பட உள்ளன.

இந்நிலையில், ஆனர்ஸ் சட்டப் படிப்புக்கான விண்ணப்பம் மே 8-ம் தேதி முதலும் சாதாரண சட்டப் படி ப்புக்கான விண்ணப்பம் மே 14-ம் தேதி முதலும் வழங்கப்படும் என்று சட்டப் பல்கலைக்கழகம் கடந்த 4-ம் தேதி அறிவித்தது. ஆனால் இன்றுவரை விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை. நிர்வாக காரணங்களுக்காக விண்ணப்பம் வழங்குவது தள்ளிவைக்கப் பட்டுள்ளதாக சட்டப் பல்கலைக் கழகத்தில் தற்போது அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் அச்சடிக்கப் பட்டு வரவில்லை என்று ஆரம்பத்தில் காரணம் கூறப்பட்டது. விண்ணப்பத்தில் எழுத்துப் பிழைகள் அதிகமாக இருப்பதால் அவற்றை சரிசெய்ய தாமதம் ஆவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு அரசு இன்னும் அனுமதி அளிக்காத காரணத்தால்தான் விண்ணப்பம் வழங்க முடியாமல் சட்டப் பல்கலைக்கழகம் திணறுவதாக தற்போது தெரிய வந்துள்ளது.

பொதுவாக, பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம் உள்ளிட்ட தொழில்கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு அரசிடம் முன்அனுமதி பெறுவது வழக்கம். ஆனால், அத்தகைய முன் அனுமதியை சட்டத்துறையிட மிருந்து சட்டப் பல்கலைக் கழகம் இந்த ஆண்டு பெறவில்லை. அதற்குள் விண்ணப்பம் விநியோ கம், கலந்தாய்வு உள் ளிட்ட மாணவர் சேர்க்கை க்கான அறிவிப்புகள் வெளியிடப் பட்டு விட்டன.

முன்அனுமதி பெறாத காரணத் தால் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க சட்டத்துறை தாமதம் செய்துவருவதாக சட்டப் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு அவற்றை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் நெருங்கிவிட்ட நிலையில், சட்டப் படிப்புக்கு இன்னும் விண்ணப்பம் வழங்கா ததால், சட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் கவலை அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024