Thursday, May 21, 2015

கணக்கு ஆசிரியர் இல்லாததால் தயவு செய்து ‘பாஸ்’ போடுங்கள்: கர்நாடகத்தில் தேர்வுத் தாளில் எழுதி வைத்த மாணவர்

கர்நாடகத்தில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு தேர்வில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு சில மாணவர்கள் எழுதிவைத்த சுவை யான கடிதங்கள் சமூக வலை தளங்களில் வெளியாகியுள்ளன.

வேடிக்கைக்காக பகிரப்பட்ட அந்த கடிதங்கள் அரசுப் பள்ளி களின் யதார்த்த நிலையை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கர்நாடகத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகள் முடிந்து, முடிவுகளும் வெளியாகிவிட்டன. இந்நிலையில் ஒரு மாணவர் தனது விடைத் தாளில் ''எனக்கு கணக்கு வாத்தி யார் இல்லை. மார்ச் மாதத்தில் திடீரென வந்த ஒருவர் அடுத்த 15 நாட்களில் அனைத்து பாடத்தை யும் சூறாவளி வேகத்தில் முடித்து விட்டார். அவர் நடத்திய பாடம் யாருக்கும் புரியவில்லை. எனவே தயவு செய்து எனக்கு 'பாஸ்' போடுங்கள்'' என கோரிக்கை வைத்துள்ளார்.

மற்றொரு மாணவர், “எனது பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாத தால், ஆங்கில மீடியத்தில் சேர்ந் தேன். கன்னட மீடியத்தில் படித்த எனக்கு, ஆங்கிலம் கொஞ்சம்கூட புரியவில்லை. உங்களுடைய பிள்ளையாக நினைத்து என்னை பாஸ் செய்துவிடுங்கள். ப்ளீஸ்!” என்று எழுதியுள்ளார்.

ஒரு மாணவரோ, “என்னை பாஸ் செய்யாவிட்டால் உங்களுக்கு செய்வினை செய்து விடுவேன்” என மிரட்டிள்ளார். மற்றொருவர், 'சிக்கன் குழம்பு செய்வது எப்படி?' என சமையல் குறிப்பை எழுதி வைத்துள்ளார்.

இந்த தேர்வுத்தாள்கள் ஃபேஸ் புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன.

விடைத்தாள் திருத்தும் அறை யில் ஆசிரியர்கள் உட்பட யாருக் கும் செல்போன் கொண்டுசெல்ல அனுமதி இல்லை. அப்படியிருக்க, இந்தப் படங்கள் யாரால் எடுக்கப்பட்டது என கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் “இந்தப் படங் களை கேலியாகவும் விளையாட் டாகவும் கருதாமல் அரசுப் பள்ளி களின் யதார்த்த நிலையை காட்டு வதாக கருதவேண்டும். அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தரமான கல்வி வழங்க வேண்டும்” என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கர்நாடகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த திங்கள்கிழமை வெளியாயின. பெங்களூருவில் கடந்த மார்ச் 31-ம் தேதி பள்ளி விடுதியில் ஊழியரால் சுட்டுக்கொல்லப்பட்ட க‌வுதமி 525-க்கு 472 மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்துள்ளார். இந்த செய்தியை அறிந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர்.

12-ம் வகுப்பு தேர்வை முடித்துவிட்டு நுழைவுத் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த கவுதமியை அதே பள்ளியில் பணிபுரிந்த மகேஷ் என்பவர் ஒருதலைக் காதல் காரணமாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் மகேஷ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக் கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024