Tuesday, May 19, 2015

மகப்பேறு விடுப்புக்கான நெறிமுறைகள்: தமிழக அரசு சுற்றறிக்கை!

சென்னை: அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்புக்கான நெறிமுறைகள் பற்றி தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிப்பதில் பல்வேறு சந்தேகமும் குழப்பங்களும் நிலவி வருகிறது. அதைத் தீர்க்கும் வகையில் துறைச் செயலாளர்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் (பயிற்சி) முதன்மைச் செயலாளர் அனிதா பிரவீன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், ''அரசு பெண் ஊழியர்கள் ஆறு மாதத்துக்கு பேறுகால விடுப்பு அளிக்கப்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்கு குறைவாக இருந்தால் இந்த விடுப்பைப் பெறலாம். தற்காலிகமாக பணியாளருக்கு நிபந்தனைகளின்படி விடுப்பு தரப்படும்.

கரு முன்னதாக கலைந்துவிட்டால், அவர்களுக்கு சராசரி ஊதியத்துடன் ஆறு வாரங்களுக்கு விடுப்பு தரப்படும். பேறுகால விடுப்பு, 12 வாரம் முதல் 20 வாரங்கள் வரை இருக்க வேண்டும். பிறக்கும்போது குழந்தை இறந்தால், அவர்களுக்கு 90 நாள்கள் வரை விடுப்பு தரலாம்" என்று கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024