சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுதலை செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்' என மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார் அம்மாநில அரசுக்கு நேற்று பரிந்துரை செய்தார்.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், நால்வரையும் கடந்த 11-ம் தேதி விடுதலை செய்தது. நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வழங்கிய இந்த தீர்ப்பில் பல்வேறு பிழைகள் இருப்பதாக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா உட்பட பல்வேறு மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
'ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மேல்முறையீட்டுக்கு தகுதி யானது' என கர்நாடக அரசுக்கு ஆச்சார்யா, கடந்த 14-ம் தேதி 3 பக்க கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில் ரவி வர்ம குமார் கர்நாடக சட்டத்துறை அமைச்ச ருக்கு நேற்று 6 பக்கங்கள் கொண்ட கடிதத்தை அனுப்பினார். அதில் “சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் மேல்முறையீடு செய்வதற் கான சட்ட ரீதியான சாத்தியக் கூறுகள் நிறைய இருக்கின்றன.
வழக்கில் கர்நாடக அரசை சேர்க்காமல் விசாரணையை முடித்தது, அரசு வழக்கறிஞரை வாதிட அனுமதிக்காதது, ஜெய லலிதா தரப்பு வாங்கிய கடனின் கூட்டுத் தொகை, அரசு தரப்பு சாட்சி யங்களை பரிசீலிக்காதது உள் ளிட்ட பல்வேறுபிழைகள் இருக் கின்றன. எனவே கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறை யீடு செய்யலாம்” என குறிப் பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயசந்திரா நேற்று சட்ட நிபுணர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் தலைமை செயலர் கவுசிக் முகர்ஜி, சட்டத் துறை செயலர் சங்கப்பா, கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் ரவி வர்ம குமார், அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா உட்பட குற்றவியல் வழக்குகளில் அனுபவம் வாய்ந்த 10 மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து சட்ட அமைச்சகம் சார்பாக மேல்முறை யீடு செய்ய வலியுறுத்தி கர்நாடக அரசுக்கு பரிந்துரை வழங்க முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனிடையே வரும் 21-ம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அம்மாநில அமைச் சரவை கூட்டம் பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத் தில் கர்நாடக உயர் நீதிமன்றத் தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய் வது குறித்து முடிவெடுக்கப்படும்.
No comments:
Post a Comment