Thursday, May 21, 2015

மத்திய அரசு ஊழியர்களின் பணிப் பதிவேட்டில் ஆதார் கட்டாயம்

மத்திய அரசு ஊழியர்களின் பணிப் பதிவேட்டில் ஆதார் எண் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய பணியாளர், பயிற்சித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் புதன்கிழமை கூறியதாவது:
அரசு ஊழியர்களின் பணிப் பதிவேட்டில் தற்போது ஊழியரின் சுய விவரக் குறிப்பு, பணியிட விவரம், பணித் தகுதி, மத்திய அரசின் சுகாதாரத் திட்டம், குழு காப்பீட்டுத் திட்டம், பயணச் சலுகை விடுப்பு உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், பணிப் பதிவேட்டில் ஆதார் எண்ணும் இடம்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை, அமைச்சகங்களிடம் இருந்து கேட்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024