Friday, November 10, 2017


ரூ.1.50 கோடி மோசடி : போலி அதிகாரி மீது புகார்


சேலம்: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, 1.50 கோடி ரூபாய் மோசடி செய்த போலி அதிகாரி குறித்து, அரசு ஊழியர்கள், எஸ்.பி.,யிடம் புகார் அளித்தனர்.
சேலம் மாவட்டம், தும்பலை சேர்ந்தவர் சசிகுமார், 41; இவர், சென்னையில், மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையில் இயக்குனராக உள்ளதாகவும், மத்திய, மாநில அரசுகளில், வேலை வாங்கித் தருவதாகவும் பலரிடம் கூறி உள்ளார்.
இதை நம்பி, அரசு ஊழியர்கள் பலர், தங்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைக்காக, ஐந்து முதல், 20 லட்சம் ரூபாய் வரை, சசிகுமார் மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட ஏஜன்ட்களிடம், 2016 செப்டம்பரில் வழங்கி உள்ளனர்.
ஆனால், சசிகுமார், வேலை வாங்கித் தரவில்லை; பணத்தையும் திருப்பி தரவில்லை. அவரிடம் ஏமாந்த, 20 பேர், சசிகுமார், 1.50 கோடி ரூபாய் வரை வாங்கி, மோசடி செய்து விட்டதாக, எஸ்.பி., ராஜனிடம் நேற்று புகார் அளித்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க, எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.

அங்கீகரிக்கப்படாத மருத்துவமனை சிகிச்சை : ஓய்வூதியருக்கு சிகிச்சை கட்டணம் வழங்க உத்தரவு


மதுரை: 'மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் ஓய்வூதியர் சிகிச்சை பெறவில்லை எனக்கூறி, செலவு தொகையை நிராகரித்ததை ஏற்க முடியாது. தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை செல்லுாரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கோதண்டராமன், மருத்துவமனையில் 2015ல் இடுப்பில் அறுவைச் சிகிச்சை நடந்தது. ஒரு லட்சத்து 7,690 ரூபாய் செலவானது. ஓய்வூதியருக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சிகிச்சை கட்டணத்தை வழங்கக் கோரி தமிழக அரசிடம், அவரது மனைவி சாரதா விண்ணப்பித்தார்.
'காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை' என ஓய்வூதிய இயக்குனர், மதுரை கலெக்டர், மாவட்ட கருவூல அதிகாரி நிராகரித்தனர். இதை எதிர்த்து உயர்நீதிமன்றக் கிளையில் சாரதா மனு செய்தார்.
தனி நீதிபதி, 'சிகிச்சை கட்டணத்தை 9 சதவீத வட்டியுடன் மனுதாரருக்கு வழங்க வேண்டும்' என உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓய்வூதிய இயக்குனர், கலெக்டர் மேல்முறையீடு செய்தனர்.
நீதிபதிகள் எம்.வேணுகோபால், அப்துல் குத்துாஸ் அமர்வு உத்தரவு:
குடிமக்களின் அடிப்படை வாழ்வுரிமைகளில், மருத்துவ வசதி பெறும் உரிமை அடங்கியுள்ளது. அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியர்கள் சிகிச்சை பெற்றதற்குரிய ஆதாரங்களை சமர்ப்பித்தால், தொகையை வழங்க வேண்டியது அரசின் கடமை. காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை எனக்கூறி நிராகரித்ததை ஏற்க 
முடியாது. தனி நீதிபதியின் உத்தரவை உறுதி 
செய்கிறோம். 9 சதவீத வட்டி 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
இவ்வாறு 
உத்தரவிட்டார்.

பி.இ., மாணவர்கள் தேர்வு எழுத சலுகை


சென்னை: அண்ணா பல்கலை கல்லுாரிகள் மற்றும் இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேரும் மாணவர்கள், ஏழு ஆண்டுகளுக்குள், தேர்ச்சி பெற
வேண்டும். தேர்ச்சி பெறாதவர்களுக்கு, சலுகை வழங்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை கல்லுாரிகளில், 2000க்கு மேல் படிப்பில் சேர்ந்தவர்கள், 2018 மற்றும், 2019ல் தேர்வுகள் எழுதலாம். 
கூடுதல் விபரங்களை, http://coe1.annauniv.edu/, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

செங்கோட்டை ரயில் நேரம் மாற்றம்



சென்னை: தாம்பரம் - செங்கோட்டை சிறப்பு ரயில், மூன்று நாட்களுக்கு, நேரம் மாற்றி இயக்கப்படுகிறது.
● தாம்பரத்தில் இருந்து, செங்கோட்டைக்கு, காலை, 7:00 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், நாளை முதல், 13 வரை, காலை, 8:30 மணிக்கு இயக்கப்படும்
● செங்கோட்டையில் இருந்து, காலை, 6:00 மணிக்கு புறப்பட வேண்டிய சிறப்பு ரயில், நாளை, 12, 14ல், காலை, 7:15 மணிக்கு இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சபரிமலை மண்டல கால பூஜை ஆயத்தம் : ஆன்லைனில் 4.50 லட்சம் பேர் முன்பதிவு

சபரிமலை: சபரிமலையில் மண்டல காலம் நவ. 15-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தரிசனத்திற்காக 4.50லட்சம் பேர் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.

பத்தணந்திட்டை மாவட்ட கலெக்டர் கிரிஜா கூறியதாவது: மண்டல கால சீசன் தொடங்குவதற்கு முன்பாக மாதா அமிர்தானந்தமயி மடத்தின் ஒத்துழைப்புடன் 11, 12 தேதிகளில் சன்னிதானம் மற்றும் பம்பையில் துப்புரவு பணி நடைபெறும். 500 பேர் சன்னிதானத்திலும், 600 பேர் பம்பையிலும் பணியில் ஈடுபடுவர்.நவ.,15 முதல் ஜன., 20 வரை சன்னிதானத்திலும், பம்பை
யிலும் துப்புரவு பணிக்கான தமிழக தொழிலாளர்கள் 14-ம் தேதி முதல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பாலிதீன் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதால், கண்ணமலை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் வாகனங்கள் சோதனை செய்து பாலிதீன் பைகள் பறிமுதல் செய்து துணிப்பை வழங்கப்படும். பாதுகாப்பான மலை பயணத்துக்காக பம்பை முதல் சன்னிதானம் வரை 15 இடங்களில் அவசர சிகிச்சை மையம் தொடங்கப்படும். பெருவழிப்பாதையில் கரிமலை
யிலும் முதலுதவி சிகிச்சை மையம் தொடங்கப்படும். ஓட்டல்களில் உணவு பொருட்களுக்கு அதிக விலை வசூலிப்பதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக இலவச தொலை பேசி அழைப்பு வசதி ஏற்படுத்தப்படும். பேரழிவு நிவாரண படையினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருப்பார்கள். பம்பையில் நதியில் குளிக்கும் போது விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டுகளை விட முன்னதாகவே பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். மண்டல மகரவிளக்கு காலத்தில் கேரள போலீசின் விரைவு தரிசனம் வரிசைக்கு ஆன்லைனில் 4.50 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டு இந்த முறையில் 16 லட்சம் பேர் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
ஒரே ஒரு நபருக்காக ஓட்டுச்சாவடி

ஒரே ஒரு நபருக்காக ஓட்டுச்சாவடி
ஆமதாபாத்: குஜராத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும், ஒரே ஒரு நபருக்காக, ஓட்டுச்சாவடி அமைக்கப்படுகிறது. குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, டிச., 9, 14ல், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. 
அனைத்து தொகுதிகளிலும், ஓட்டுச்சாவடி அமைக்கும் பணிகள் நடக்கும் நிலையில், அடர்ந்த கிர் வனப்பகுதியில் வசிக்கும் ஒருவருக்காக, ஓட்டுச்சாவடியை, மாநில தேர்தல் கமிஷன் அமைக்கிறது. 

இது குறித்து, மாநில தேர்தல் கமிஷனின் ஓட்டுச்சாவடி அதிகாரி, சிமன்பாய் ருபாலா கூறியதாவது: சோம்நாத் மாவட்டத்தில், அடர்ந்த கிர் சரணாலயத்தின் மத்தியில், பானேஜ் கிராமம் உள்ளது. இங்கு, வரலாற்று சிறப்புமிக்க, பானேஷ்வர் மஹாதேவ் கோவிலில், பாரத்தாஸ் குரு தர்ஷன் தாஸ் என்பவர், பல ஆண்டுகளாக பூசாரியாக உள்ளார்.
மக்கள் வசிக்க அனுமதி இல்லாத, அடர்ந்த வனப்பகுதியில், பூசாரி மட்டும் தனியாக, கோவிலிலேயே தங்கி உள்ளார். இவருக்காக, ஓட்டுச்சாவடி அமைக்கப்படுகிறது. மற்ற ஓட்டுச்சாவடிகளை போல, இந்த சாவடியிலும், தேர்தல் அதிகாரி, ஓர் அலுவலக உதவியாளர், இரண்டு போலீசார், ஒரு மத்திய ரிசர்வ் படை வீரர் ஆகியோர், தேர்தல் பணியில் ஈடுபடுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

ரெய்டு பற்றி ஒன்னுமே தெரியாது' : சீனிவாசன் பேட்டி


திண்டுக்கல்: ' ஜெயா 'டிவி', மற்றும் தினகரன் வீட்டில் வருமான வரி ரெய்டு நடப்பது குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது' எனக் கூறிய அமைச்சர் சீனிவாசன் பேட்டியால் சிரிப்பலை எழுந்தது.

திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா வரும் டிச.9ல் நடக்கிறது. இதற்கான கால்கோள் விழா அங்கு விலாஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர்கள் சீனிவாசன், செங்கோட்டையன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், செல்லுார் ராஜூ, தங்கமணி, காமராஜ், உதயக்குமார், சேவூர் ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

பின்னர், அமைச்சர் சீனிவாசன் கூறியதாவது: பாரத பிரதமர்... மன்னிக்கவும் 'பாரத ரத்னா' எம்.ஜி.ஆரின் நுாற்றாண்டு விழா 22வது மாவட்டமாக திண்டுக்கல்லில் டிச.,9ல் நடக்க உள்ளது. எம்.ஜி.ஆரின் அரசியல் வளர்ச்சிக்கு அச்சாரம் போட்டது, திண்டுக்கல் என்பதால் வெகு சிறப்பாக நடத்த உள்ளோம், என்றார்.
உடனே நிருபர்களை பார்த்து, ''அவ்வளவுதான் எல்லோரும் சாப்பிட்டு போங்கள்'' என்றார். 
நிருபர்கள், ''சசிகலா அணியின் தினகரன் வீட்டிலும், ஜெயா டிவி., அலுவலகத்திலும் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்துகிறார்களே,'' என கேடடனர். 
அதற்கு அவர், ''நான் இப்போதுதான் துாங்கி எழுந்தேன். எனக்கு ஒன்னுமே தெரியாது,'' எனக் கூறி நழுவினார்

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்! Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு தமிழக...