Monday, November 20, 2017

அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன்

Published : 19 Nov 2017 15:15 IST

சென்னை


அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யும், ஆனால், கொளுத்தும் வெயிலுக்கு இடையே எப்போது மழை பெய்யும் என்று உங்களுக்கு ஒருபோதும் தெரியாது என்று தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தன் ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ''கிழக்குதிசையில் இருந்து வீசும் காற்றின் காரணமாக அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு தென் தமிழகம், கடற்கரைப்பகுதிகள், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆதலால், வரும் வாரத்தில் வெளியே செல்லும் போது 'குடை' அல்லது 'ரெயின்கோட்' உடன் எடுத்துச் செல்லவும். கொளுத்தும் வெயிலுக்கு இடையே எப்போது மழை பெய்யும் என்று உங்களுக்கு ஒருபோதும் தெரியாது.

கடந்த வாரத்துக்கு முன் பருவமழை தொடங்கி, தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த வாரம் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த முறை டெல்டா பகுதிகளான நாகை, திருவாரூர், தஞ்சை, காரைக்கால், பெரம்பலூர், அரியலூர், தென் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த வாரத்தில் மழை பெய்யக்கூடும்.

திருச்சி, நாமக்கல் மாவட்டங்களிலும் அடுத்த நான்கு நாட்கள் வரை மழை இருக்கும்.மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை இருக்கும்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் அவ்வப்போது திடீர் மழை பெய்யும்.வடகடலோர மாவட்டங்களாகன சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய பகுதிகளிலும் மழை இருக்கும். உள்மாவட்டங்களிலும் ஒரு சில நாட்களுக்கு மிதமான மழை பொழிய வாய்ப்பு உண்டு. வடக்கு உள்மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் பகுதிகளிலும் ஒரிருமுறை மழை இருக்கும்.

மிதமான மழைமட்டுமே இருக்குமே என்பதால், வெள்ளத்துக்கு வாய்ப்புகள் ஏதும் இல்லை. நன்றாக புரிந்துகொள்ளுங்கள்… இந்த மழை என்பது ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் பெய்யாது. அடுத்த 4 நாட்களில் வெள்ளம் வரும் அளவுக்கும் மழை பெய்யப் போவதில்லை. ஆதலால், மழையை அனுபவியுங்கள்.

வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதியில் இருந்து மீண்டும் தீவிரம் அடைந்துவிடும். ஆதலால், இந்த மாதத்தின் கடைசி நாட்களும், டிசம்பர் மாதத்தின் முதல்பாதியும் மழையோடு மகிழ்ச்சியாக இருக்கப் போகிறோம். சென்னை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகமும் மழையை எதிர்நோக்கி இருக்கிறோம் என்பதால், நல்ல மழைப்பொழிவுக்கு வாய்ப்பு உள்ளது'' என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
போனில் திட்டினாலும் வன்கொடுமை சட்டம் பாயும்

புதுடில்லி:'போனில் பேசும் போது, வேறொரு இடத்தில் உள்ள ஒருவரை, ஜாதியின் பெயரைக் கூறி திட்டினாலும், வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்' என, உச்ச நீதி
மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.



உத்தரப் பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இம்மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், ஒரு பெண்ணிடம் தொலைபேசியில் பேசும்போது, ஜாதியின் பெயரைக் கூறி திட்டியதாக, எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.இந்த சட்டத்தின்படி, அதிக பட்சம், ஐந்து ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப் படும். தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து, அந்த நபர் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த, அலகாபாத் உயர் நீதிமன்றம், அவரது மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அந்த நபர்மேல்முறையீடு செய்தார். 'பொது இடத்தில் ஒருவரை ஜாதியின் பெயரைக் கூறி திட்டினால் தான் வழக்கு பதிவு செய்ய முடியும். தொலை பேசியில் பேசியது, இரு நபர்களுக்குஇடையேயான உரையாடல்; அது பொது இடமாகாது' என, அந்த நபர் வாதிட்டார். ஆனால், அதை ஏற்காத, நீதிபதிகள், ஜே.சலமேஸ்வர், எஸ்.அப்துல் நசீர் அமர்வு, அவரது மனுவைத் தள்ளுபடி செய்தது. 'தொலைபேசியில் பேசும்போது, ஜாதியின் பெயரில் திட்டினாலும், அது குற்றமாகும்' என, அமர்வு கூறியுள்ளது.
குற்றவாளிகள் நாடாளக்கூடாது: - கமல் கொதிப்பு

Added : நவ 20, 2017 02:52



சென்னை: ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம் தான், என நடிகர் கமல் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆக வேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய். இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

சிங்கப்பூரிலும் கால் பதிக்குது ஆவின்

Added : நவ 20, 2017 02:15

ஆவின் நிறுவனத்தின், 'டெட்ரா பேக்' பால் பாக்கெட்டுகள், சிங்கப்பூரில், நவ., 25ல் அறிமுகம் செய்யப்பட உள்ளன. தமிழகத்தில், பால் கொள்முதல் மற்றும் விற்பனையில், ஆவின் நிறுவனம் பிரதானமாக உள்ளது. சந்தையில் நிலவும் போட்டிகளுக்கு சவால் விடும் வகையில், விதவிதமான பால் பொருட்களையும் அறிமுகம் செய்து வருகிறது.

அவை, மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில், விற்பனை நடைமுறைகளிலும் மாற்றம் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் கோலோச்சிய ஆவின், கடல் கடந்தும் தன் விற்பனையை விரிவாக்க திட்டமிட்டுள்ளது.இதன்படி, சிங்கப்பூரில், வரும், 25ல், ஆறு மாதங்களுக்கு கெடாத, 'டெட்ரா பால்' பாக்கெட்டுகளை, ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்கிறது. 


இதற்காக, ஆவின் நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட, உயர் அதிகாரிகள் குழு, சிங்கப்பூருக்கு செல்ல உள்ளது. அடுத்த கட்டமாக, மலேஷியாவிலும், பால் விற்பனை துவக்கப்படும் என, ஆவின்
அதிகாரிகள் கூறினர்.

- நமது நிருபர் -
சிறுபான்மை இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு உத்தரவு

Added : நவ 20, 2017 00:27

சென்னை: 'சிறுபான்மை இன்ஜி., கல்லுாரிகள், சிறுபான்மை அந்தஸ்து பெற்றதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், அண்ணா பல்கலை இணைப்பில், 50க்கும் மேற்பட்ட சிறுபான்மை இன்ஜி., கல்லுாரிகள் செயல்படுகின்றன. அதேபோல், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் அங்கீகாரம் பெற்று, 50க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக்குகள் இயங்குகின்றன.
அவற்றில் சில கல்லுாரிகள், சிறுபான்மை பெயர் வைத்திருந்தாலும், சிறுபான்மை அந்தஸ்து பெறாமல் சலுகை பெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன.


இதை தொடர்ந்து, முறையாக சிறுபான்மை அந்தஸ்து பெற்ற கல்லுாரிகளின் தகுதி, அங்கீகார காலம் போன்றவற்றை ஆய்வு செய்ய, உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, 'சிறுபான்மை இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகள், சிறுபான்மை அந்தஸ்து பெற்றதற்கான ஆவணங்களை, வரும், 20க்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
கொட்டி தீர்த்த மழை 

Added : நவ 20, 2017 03:16

சபரிமலை: சபரிமலையில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் மலையேறும் பக்தர்கள் சிரமப்பட்டனர்.மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நவ.,15-ம் தேதி திறந்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் பகலில் அதிக வெயிலும், இரவில் கடும் குளிரும் இருந்தது. நேற்று முன்தினம் இரவு சில நிமிடம் மட்டும் மழை பெய்தது. நேற்று மதியத்துக்கு பின் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. 2:00 மணிக்கு துவங்கிய மழை ஒரு மணி நேரம் பெய்த தால் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடியது.18-ம் படி ஏறிய பக்தர்கள் மழையில் நனைந்தபடியே தரிசனம் செய்தனர். மலை ஏறிய பக்தர்கள் சிரமப்பட்டனர்.

Sunday, November 19, 2017

54 DMCH girls fined Rs 25,000 each for ragging

| Nov 19, 2017, 02:00 IST
 
DARBHANGA: As many as 54 girl students of the Darbhanga Medical College and Hospital

(DMCH) have been fined Rs 25,000 each in connection with incidents of ragging.

This is the second instance of medical students being fined for ragging in the state within a fortnight.

The fined Darbhanga students include both second-year and first-year students. While the seniors have been fined for their alleged involvement in ragging, the juniors have been financially punished for refusing to identify their tormentors.

DMCH principal Dr R K Sinha on Saturday said a first-year student had sent a complaint to the Medical Council of India (MCI) about the ragging. "The MCI on Friday informed my office and sought action against the culprits," he said and added he immediately convened a meeting of the college's anti- ragging committee on Friday.

The committee members went to the girls' hostel for investigation, but neither the seniors nor the juniors confirmed incidents of ragging.

"As per the MCI rule in such a case, all the girls of the hostel have been fined Rs 25,000 each," the principal said, adding the penalty was to be deposited by November 25 or else further action would be taken.

Earlier this month, the administration of Jawaharlal Nehru Medical College and Hospital in Bhagalpur imposed a fine of Rs 25,000 each on 33 second-year students for ragging juniors.

NEWS TODAY 06.07.2026