Monday, November 20, 2017


சிங்கப்பூரிலும் கால் பதிக்குது ஆவின்

Added : நவ 20, 2017 02:15

ஆவின் நிறுவனத்தின், 'டெட்ரா பேக்' பால் பாக்கெட்டுகள், சிங்கப்பூரில், நவ., 25ல் அறிமுகம் செய்யப்பட உள்ளன. தமிழகத்தில், பால் கொள்முதல் மற்றும் விற்பனையில், ஆவின் நிறுவனம் பிரதானமாக உள்ளது. சந்தையில் நிலவும் போட்டிகளுக்கு சவால் விடும் வகையில், விதவிதமான பால் பொருட்களையும் அறிமுகம் செய்து வருகிறது.

அவை, மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில், விற்பனை நடைமுறைகளிலும் மாற்றம் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் கோலோச்சிய ஆவின், கடல் கடந்தும் தன் விற்பனையை விரிவாக்க திட்டமிட்டுள்ளது.இதன்படி, சிங்கப்பூரில், வரும், 25ல், ஆறு மாதங்களுக்கு கெடாத, 'டெட்ரா பால்' பாக்கெட்டுகளை, ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்கிறது. 


இதற்காக, ஆவின் நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட, உயர் அதிகாரிகள் குழு, சிங்கப்பூருக்கு செல்ல உள்ளது. அடுத்த கட்டமாக, மலேஷியாவிலும், பால் விற்பனை துவக்கப்படும் என, ஆவின்
அதிகாரிகள் கூறினர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024