Monday, November 20, 2017

சிறுபான்மை இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு உத்தரவு

Added : நவ 20, 2017 00:27

சென்னை: 'சிறுபான்மை இன்ஜி., கல்லுாரிகள், சிறுபான்மை அந்தஸ்து பெற்றதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், அண்ணா பல்கலை இணைப்பில், 50க்கும் மேற்பட்ட சிறுபான்மை இன்ஜி., கல்லுாரிகள் செயல்படுகின்றன. அதேபோல், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் அங்கீகாரம் பெற்று, 50க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக்குகள் இயங்குகின்றன.
அவற்றில் சில கல்லுாரிகள், சிறுபான்மை பெயர் வைத்திருந்தாலும், சிறுபான்மை அந்தஸ்து பெறாமல் சலுகை பெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன.


இதை தொடர்ந்து, முறையாக சிறுபான்மை அந்தஸ்து பெற்ற கல்லுாரிகளின் தகுதி, அங்கீகார காலம் போன்றவற்றை ஆய்வு செய்ய, உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, 'சிறுபான்மை இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகள், சிறுபான்மை அந்தஸ்து பெற்றதற்கான ஆவணங்களை, வரும், 20க்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024