Monday, January 22, 2018


CALLS ASKING CASH FOR NEET PG RANKS; PROBE INITIATED.

by Admin | Jan 20, 2018 | IMA, NBE, NEET PG

Medicalreportertoday

East Singhbhum deputy commissioner Amit Kumar ordered a probe into dubious phone calls asking local NEET PG candidates, who appeared for NEET PG in the first week January, Rs 5 lakh cash for better ranks. The complaint is lodged by Indian Medical Association’s city chapter secretary Mrityunjay Singh. At least 10 candidates seeking entry into postgraduate medical courses in private and government institutions had received the call from the same district.

“The IMA secretary filed a complaint with evidence in a CD. People claiming to be data entry operators with the exam authorities (National Board of Examinations) in Delhi were heard asking for Rs 3-7 lakh in lieu of better ranks for easy admission into various medical colleges. The deputy commissioner has asked SSP Mathew to get call detail records (CDRs) of the four mobile phone numbers from which calls were made to the candidates.

“The caller identified himself as one Yashwant Sinha, a data entry operator with NEET in New Delhi. He asked for 50 per cent of the said amount in advance and the remaining money after the results were declared. He shared a bank account number too,” said the candidate, requesting anonymity. The youth said his batchmate too got a similar call 15 minutes before him. “Gradually, we found out eight more candidates like us. One of the callers identified himself as Gopal Madhav,” said the aspirant.

The caller was pint blank correct in telling the candidate ID, Fathers name, Center and other confidential details which are available only with the National Board of Examinations. Puzzled, the candidates contacted IMA secretary Singh. “Some of the students had recorded the conversations and I quickly made a CD before lodging a complaint. We need to unveil the scam. The sanctity of NEET and medical education is at stake,” Singh said.

புலிக்குமா அச்சுறுத்தல்?

By ஆசிரியர்  |   Published on : 20th January 2018 01:35 AM
கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 115 புலிகள் மரணமடைந்திருக்கின்றன. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நூறுக்கும் மேற்பட்ட புலிகள் இறந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 2016-இல் வேட்டையாடுபவர்களால் 50க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டபோது தேசமே அதிர்ச்சியில் உறைந்தது. அதற்குக் காரணம் அதற்கு முந்தைய 15 ஆண்டுகளில் இந்த அளவுக்குப் புலிகள் கொல்லப்படவில்லை என்பதுதான். கடந்த ஆண்டிலாவது நிலைமை மாறும் என்று பார்த்தால் அப்படி மாறியதாகத் தெரியவில்லை.
போபாலிலுள்ள இந்திய வன மேலாண்மை நிறுவனமும், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையமும் 2015-இல் இணைந்து ஓர் ஆய்வை நடத்தின. புலிகள் சரணாலயங்களின் பொருளாதாரப் பங்களிப்பு குறித்தும் அந்த ஆய்வு பல விவரங்களைத் திரட்டியுள்ளது. இமயமலைச் சாரலிலுள்ள 'கார்பெட்' புலிகள் சரணாலயத்தின் பங்களிப்பால், தில்லிக்கு வருகின்ற குடிநீர் பாதுகாக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட பல ஆச்சரியமான முடிவுகளை அந்த ஆய்வு தெரிவித்திருக்கிறது.
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை ஆசியாவின் வனங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான புலிகள் வாழ்ந்து வந்தன. ஐரோப்பியர்களால், துப்பாக்கியின் மூலம் புலிகளை வேட்டையாடும் வழக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு புலிகளின் எண்ணிக்கை சரசரவென சரியத் தொடங்கியது. ஐரோப்பிய துரைமார்களுக்கும், சமஸ்தான ராஜாக்களுக்கும், ஜமீந்தார்களுக்கும் புலி வேட்டை என்பது அவர்களது வீர, தீர சாகசத்தை வெளிப்படுத்தும் விளையாட்டானது. அதன் விளைவாக லட்சங்களில் இருந்த புலிகளின் எண்ணிக்கை ஆயிரங்களாகக் குறைந்துவிட்டது.
இந்தியாவைப் பொருத்தவரை, புலிகள் சரணாலயங்கள் அமைக்கப்பட்டு, புலிகளைப் பாதுகாப்பதற்கான திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட்டன. அதற்காக மத்திய-மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடுகள் செய்தன. 2006-இல் 1411ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2016-இல் 3891ஆக அதிகரித்தது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் முனைப்பாலும் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள் மேற்கொண்ட கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளாலும்தான் இந்தியாவில் வாழும் புலிகளின் எண்ணிக்கையை நம்மால் இரட்டிப்பாக்க முடிந்தது.
மேலே குறிப்பிட்ட மாநிலங்களில் புலிகள் வாழும் பகுதிகளை அதிகரிப்பதற்கு வழியில்லை என்பது மட்டுமல்ல, இப்போதிருக்கும் புலிகளின் எண்ணிக்கையை கணிசமாகக் கூட்டுவதும் உடனடி சாத்தியமில்லை. அதனால், ஒடிஸா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகம், வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட புலிகள் வாழும் பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
இந்த மாநிலங்களில் புலிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழலும், புலிகள் மிக அதிகமாக வாழ்ந்த வரலாறும் இருந்தும்கூட, போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளும், புலி சரணாலய நிர்வாக மேலாண்மையும் மேற்கொள்ளப்படாததால்தான் இந்த மாநிலங்களில் கணிசமான அளவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்கிற கருத்து நிலவுகிறது. அது மட்டுமல்லாமல், மேலே குறிப்பிட்ட மாநிலங்களில் புலி வேட்டைக்காரர்களை முழுமையாகத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். 
இந்தியாவில், புலிகள் சரணாலயங்கள் 50 இருக்கின்றன. கடந்த ஆண்டில் மட்டும் 115 புலிகள் கொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றில் 90 புலிகள் கொல்லப்பட்டது எப்படி என்று இப்போது வரை முழுமையான தகவல் இல்லை. புலி வேட்டைக்காரர்கள் மட்டுமல்லாமல், புலிகள் நடமாடும் வனப்பகுதிகளுக்கு அருகிலுள்ள தோட்டங்களில் போடப்பட்டிருக்கும் மின் வேலிகளும்கூட புலிகளின் மரணங்களுக்குக் காரணம்.
புலிகள் வாழும் பகுதிகள் குறைந்து வருகின்றன. வனப்பகுதிகளில் குடியிருப்புகளும், தோட்டங்களும், எஸ்டேட்டுகளும் அதிகரித்து வருகின்றன. இதனால், புலிகள் வனங்களை விட்டு வெளியே வருகின்றன. அதன் விளைவாக மனிதர்களுக்கும் புலிகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. இதைத் தடுப்பதற்கு ஒரே வழி, புலிகள் சரணாலயங்களின் சுற்றளவை மேலும் அதிகரிக்காவிட்டாலும்கூட, புலிகள் நடமாடும் வனப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு நிகழாமல் தடுப்பதுதான்.
அதேபோல, அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நாட்டின் கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்துவதால், வனவிலங்குகள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. வனப்பகுதிகள் வழியாக சாலைகள் அமைக்கப்படுவதால் வாகனங்களில் சிக்கி மடியும் வன விலங்குகளில் புலிகள் முக்கியமானவை. சாலை விபத்துகளில் இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கையைப் போல புலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
சீன மருத்துவத்தில் புலிகளின் உறுப்புகளுக்கு மிகப்பெரிய தேவை இருக்கிறது. உலகளாவிய அளவில் புலிகள் தொடர்பான வணிகத்தின் அளவு ஆண்டொன்றுக்கு 1,900 கோடி டாலர் (ரூ.1.23 லட்சம் கோடி) என்று கூறப்படுகிறது. இதனால்தான் புலி வேட்டைக்காரர்கள் தீவிரமாகச் செயல்படுகின்றனர். வனக்காவலர்களுக்கும் புலி வேட்டையாளர்களுக்கும் இடையேயுள்ள புரிதலும், தொடர்பும் புலிகள் கொல்லப்படுவற்கு மிகப்பெரிய காரணம். இதைத் தடுப்பது எளிதல்ல என்றாலும், இயலாததல்ல.
நமது சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும். பல்லுயிர் பெருக்கம் தடையில்லாமல் நடைபெற வேண்டும், வனங்கள் காக்கப்பட வேண்டும் என்று சொன்னால், அச்சுறுத்தல் இல்லாமல் புலிகள் காடுகளில் உலவ வழிகோல வேண்டும்!
 

டோல் கேட் ... எரிச்சலடையத் தேவையில்லை!

By -வி.குமாரமுருகன்  |   Published on : 22nd January 2018 11:41 AM  
tollgate
தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் செல்லும் போது ஏகப்பட்ட டோல் கேட்டுகள் வரிசையாக வருவதைப் பார்த்து எரிச்சலடையும் நிலை நம் எல்லாருக்குமே ஏற்படுவதுண்டு. ஏனென்றால் டோல்கேட்டுகளில் வரிசையில் நின்று பணத்தை கொடுத்து ரசீதைப் பெற்று செல்வதற்குள் போதும்,போதும் என்றாகிவிடும்.

மேலும் இரு வழிக்கான ரசீதைப் பெற்றால் அதை பாதுகாப்பாக வேறு வைத்திருக்க வேண்டும்.

அந்த சிரமங்களைப் போக்க ndian Highways Management Company Limited (IHMCL)  Utßm National Payment Corporation of India (NPCI) ஆகியவை இணைந்து புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளன. Radio frequency Identification (RFID) technology என்ற நவீன தொழில்நுட்பத்தில் இது செயல்படுகிறது. இதன் மூலம் நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் கேட்டுகளில் நாம் நேரத்தை விரயம் செய்யாமல் விரைவாக சென்று இலக்கை அடைய முடியும். மேலும் டோல் கேட்டுகளில் காத்திருக்கும் காலத்தில் ஏற்படும் எரிபொருள் விரயமும் தவிர்க்கப்படும். தற்போது 180 - க்கும் மேற்பட்ட டோல்கேட்டுகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெறுவது எப்படி?
டோல்கேட்டுகளில் உள்ள Point of Sale (POS) மையங்களிலோ, அல்லது அதற்கென உள்ள ஏஜென்சிகள் மூலமாகவோ நாம் பாஸ்டேக் அட்டைகளைப் பெற முடியும். இந்த மையங்கள் குறித்த பட்டியல் இணைய தளத்தில் உள்ளது (http://www.fastag.org/). மேலும் வங்கிகள் மூலமும், ஆன்-லைன் மூலமும் 
FASTag அட்டைகளைப் பெற முடியும்.

இந்த FASTag கணக்கை தொடங்குவதற்கு ரூ.200 பெறப்படுகிறது. அதன் பின் நாம் பயன்படுத்தும் அளவுக்கு ஏற்ப கைபேசிகளுக்கு ரீசார்ஜ் செய்வது போல் தேவைக்கேற்றவாறு நாம் டாப்-அப் செய்து தொள்ளலாம்.

வாகனத்தின் Registration Certificate (RC), வாகன உரிமையாளரின் மார்பளவு புகைப்படம் மற்றும் வாகன உரிமையாளரின் KYC விவரங்கள் தேவை. தனி நபரின் சொந்த வாகனம் என்றால் அவரின் அடையாளம் மற்றும் முகவரி தொடர்பான விபரங்கள் அடங்கிய ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றின் நகல் தேவை. FASTag பெற்ற பின்னர் வாகனம் ஓட்டும் பொழுது டோல்கேட்டுகளில் சரிபார்த்தலுக்காக கேட்கப்படக்கூடும் என்பதால் அசலையும் வைத்திருக்க வேண்டியது அவசியம். வாகனம் கார்ப்பரேட் நிறுவனத்துக்குரியது என்றால் FASTag பெறுவது தொடர்பாக இணையத்தை பார்வையிடலாம். 

உரிய முறைகளை பயன்படுத்தி FASTag கணக்கைத் தொடங்கியவுடன், நிறுவன பிரதிநிதி FASTag வில்லையை நமது வாகனத்தின் கண்ணாடியில் பொருத்தி விடுவார். இனி நாம் எந்தவொரு டோல்கேட்டிலும் வரிசையில் நிற்காமல் அதற்கென்று உள்ள எலக்ட்ரானிக் தானியங்கி டோல்கேட்டுகள் வழியாக விரைவாக சென்று விடலாம். அந்த டோல் கேட்டில் செலுத்த வேண்டிய பணம் நமது பாஸ்டேக் கணக்கிலிருந்து உடனடியாக கழிக்கப்பட்டு அது தொடர்பான விபரம் நமது கைபேசிக்கு வந்துவிடும். அதே சாலையில் நாம் 24 மணி நேரத்துக்குள் திரும்ப வந்தால் தானாகவே 2 வழித்தொகை (2 Way) கழிக்கப்படும். மேலும், இது தொடர்பான ஸ்டேட்மென்ட்டும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நமக்கு அனுப்பப்படும். அல்லது இணையதளத்துக்குள் சென்று நமது கணக்கை திறந்து பார்த்தால் முழு விவரத்தையும் அறிய முடியும். 

காசோலை, ஆன்-லைன்(through Credit Card/ Debit Card/ NEFT/ RTGS or through Net Banking.) மூலம் ரீசார்ஜ் செய்ய முடியும். குறைந்த பட்சம் ரூ. 100 முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை ரீ-சார்ஜ் செய்து கொள்ளலாம். மாதம் முழுவதும் பயன்படுத்துவோருக்கு என சில சலுகைகள் உள்ளன. அதை வாடிக்கையாளர் சேவை மையம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் வைத்திருப்போர் ஒவ்வொரு வாகனத்துக்கும் தனித்தனியான FASTag கணக்கை தொடங்க வேண்டும். ஒரு வாகனத்துக்கு இரண்டு FASTag கணக்கு வைக்கக் கூடாது. டோல் கேட்டில் சரியாகத்தான் பணம் கழிக்கப்பட்டுள்ளதா என்பதை www.nhtis.org என்ற இணையத்தில் சரி பார்த்துக் கொள்ளலாம்.

இது போன்ற நவீன வசதிகளுடன் கூடிய FASTag  டோல்கேட்களை மாநில சாலைகளிலும் விரிவுபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு

By DIN  |   Published on : 22nd January 2018 10:54 AM  | 
chennai_HC

சென்னை: அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தியதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்குரைஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் முறையிட்டார்.
இதனை ஏற்ற உயர் நீதிமன்றம், இது குறித்து மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாகவும், தலைமை நீதிபதியின் அமர்வில் மனு விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பொதுவாக பொது நல மனுக்கள் திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் விசாரிக்கப்படுவது வழக்கம் என்றாலும், இந்த மனு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணக்கு ஏற்கப்படும் என்று கூறப்படுகிறது.
பொதுமக்கள் படும் இன்னல்களைக் கருத்தில் ஏற்று இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஜார்ஜ் வில்லியம் விடுத்த கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பஸ் டிக்கெட்: கூடுதல் கட்டணம் கேட்ட கண்டக்டர் மீது கத்தியை வீசிய பயணி!

 Posted By: Shyamsundar Updated: Sunday, January 21, 2018, 17:32 [IST]

 தருமபுரி: புதிய கட்டணம் கேட்டதால் தருமபுரியில் பேருந்து நடத்துனருக்கும், பயணிக்கும் இடையில் பிரச்சனை உருவாகி இருக்கிறது. இதனால் பேருந்தில் இருந்த அந்த பயணி நடத்துனர் மீது கத்தியை தூக்கி வீசி இருக்கிறார். தருமபுரியில் இருக்கும் தொட்டம்பட்டி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அங்கு சென்ற பேருந்தில் மாத்தூர் என்ற இடத்தில் வெற்றிவேல் மற்றும் வேலன் ஆகியோர் ஏறியுள்ளனர். அவர்களிடம் நடத்துனர் டிக்கெட்டிற்கு பணம் கேட்டு இருக்கிறார். இவர்கள் எப்போதும் கொடுக்கும் பணத்தையே கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் நடத்துனர் புதிய கட்டண விவரத்தை கூறி கூடுதல் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் கூடுதல் பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் இவர்களுக்கும் நடத்துனருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த பிரச்சனை பெரிதாகி இருக்கிறது. உடனே வேலன் தன் பையில் இருந்த கத்தியை எடுத்து வீசி இருக்கிறார். கத்தி நேராக நடத்துனரை நோக்கி சென்று இருக்கிறது. ஆனால் நடத்துனர் சாமர்த்தியமாக விலகி தப்பினார். வேலன் உடனே ஜன்னல் வழியாக குதித்து ஓடினார். ஆனால் மக்கள் வெற்றிவேலை பிடித்துவிட்டனர். வெற்றிவேல் போச்சம்பள்ளி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். ஆனால் இவர் மீது எந்த தவறும் இல்லை என்று கூறி புகார் இல்லாமல் விடுவிக்கப்பட்டார்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/a-man-throws-knife-at-conductor-asking-bus-fare-309013.html
வசதியா தொல்லையா... உங்கள் வாட்ஸ்அப் வாழ்க்கை எப்படியிருக்கிறது? 

கார்க்கிபவா



சென்ற மாதம் நண்பர்களுடன் ஒரு பயணம் சென்றிருந்தேன். அப்போது, ஒரு நண்பர் எடுத்த புகைப்படத்தைக் காட்டுவதற்காக மொபைலை தந்தார். படங்களைப் பார்த்துகொண்டிருந்த போதே, மேலே நோட்டிஃபிகேஷனில் வாட்ஸ்அப் மெஸெஜ் ஒன்று வந்தது. மெஸெஜை அனுப்பியவர் எங்கள் குழுவில் இருக்கும் ஒருவருக்கு ஆகாதவர். அவர் அனுப்பிய தகவலையும் நாங்கள் படிக்க வேண்டியதானது. அவ்வளவுதான். பிரச்னை ஆரம்பமானது.


“நீ எதுக்கு அவன் கூட பேசுற... பேசுறது கூட உன் இஷ்டம். இந்த விஷயத்தையெல்லாம் ஏன் சொல்ற” என மொபைல் ஓனரிடம் சண்டை பிடிக்கத் தொடங்கினார் இன்னொரு நண்பர். அதுவரை மகிழ்ச்சியாக சென்ற பயணம், அதன் பின் மாறிப்போனது. எல்லோரும் எப்போது ஊருக்குத் திரும்புவோம் என நினைக்க வேண்டியானது. ஊருக்குத் திரும்பியதும் மொபைலைக் காட்டிய நண்பர் அழைத்தார்.


“எல்லோருக்கும் தான ரகசியம் இருக்கும்? ரகசியம் இல்லாத மனுஷன் யாராச்சும் இருப்பானா? என்னோட ஒரு ரகசியம் தெரிஞ்சதால என்னை குற்றவாளி ஆக்கிட்டீங்க. உங்களோட ரகசியத்தை யோசிச்சு பாருங்க. அது வெளிய தெரிஞ்சா என்ன ஆகும்” என குமுறித் தீர்த்தார்.

எனக்கு அந்தச் சம்பவம் மறந்துபோனது. ரகசியம் என்பது மட்டும் மனதில் நின்றது. வாட்ஸ்அப் என்ற ஒரு தொழில்நுட்பம் எவ்வளவோ நன்மைகளை நமக்கு தந்திருந்தாலும் உறவுகளிடையே அது உருவாக்கியிருக்கும் சிக்கல்கள் ஏராளம். இது தொடர்பான ஏராளமான செய்திகளை ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் நேர்ப்பேச்சிலும் எதிர்கொண்டிருக்கிறேன். எல்லாவற்றிலும் வாட்ஸ்அப் தான் பிரச்னை என்றே சொல்லப்பட்டாலும், நிஜமான காரணம் அது நம் ரகசியத்தை யாருக்கோ சொல்லிவிடுகிறது. அதுதான் பிரச்னை. எப்படி?

ஸ்டேட்டஸ்:

முன்பெல்லாம் டென்ஷன் அதிகமானால் தண்ணீர் குடிப்போம்; தரையை ஓங்கி குத்துவோம். இப்போதெல்லாம் அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆக வைத்துவிடுகிறோம். “மனுஷனை நம்பறதுக்கு மரத்தை நம்பலாம்” என ஸ்டேட்டஸ் வைத்தால் “நான் என்னடா பண்ணேன்?” என 4 பேராவது ரிப்ளை போடுகிறார்கள். அடுத்தவர்கள் வாழ்க்கையிலிருந்து கிடைக்கும் கிசுகிசு எப்போதுமே ருசிகரமானதுதான். ஸ்டேட்டஸ் தான் ”கேட்வே ஆஃப் காஸிப்”


இரவின் நடுவில் தண்ணீர் குடிக்க எழுந்திருப்போம். அனிச்சையாகவே கை வாட்ஸ்அப்பைத் திறந்திருக்கும். அவ்வளவுதான். “காலைல 4 மணிக்கு என்ன பண்ற?” என அக்கறை, கோபம், நக்கல் எல்லாம் கலந்து கேள்வி ஒன்று வரும். “நீ என்ன பண்ற” என திரும்பக் கேட்க அப்போது தோன்றாது. எதோ பெரிய தவறைச் செய்து மாட்டிக்கொண்டோமோ என்ற குற்றவுணர்வே மேலோங்கியிருக்கும். ஏனெனில், நம் ரகசியம் ஒன்று வெளியே போய்விட்டது.

தவறாக அனுப்பப்பட்ட மெஸெஜ்:

“லவ் யூ பேபி” என்பதை தவறுதலாக வேறொருவருக்கு அனுப்பும் சாத்தியங்களும் வாட்ஸ்அப்பில் உண்டு. அதுவும் க்ரூப்புக்கு போய்விட்டால் அவ்வளவுதான்.

க்ரூப்ஸ்:

உங்கள் மொபைலை எடுத்து எத்தனை வாட்ஸ்அப் க்ரூப்பில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள். அந்த க்ரூப்பில் இருக்கும் அத்தனை பேரையும் உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் அனைவருக்கும் உங்கள் எண் கிடைத்துவிட்டது. இனி உங்களால் டி.பி.யை கூட உங்கள் விருப்பப்படி வைக்க முடியாது. அப்படி வைத்தால் “Hi" என 10 பேராவாது மெஸெஜ் அனுப்புவார்கள்.

ஒவ்வொரு மனிதனைச் சுற்றியுமே வட்டங்கள் உண்டு. யார் யாரை எந்த வட்டம் வரை அனுமதிக்கலாம் என்பது அவரவர் விருப்பம். ஆனால், வாட்ஸ்அப் அந்த வட்டத்துக்குள் நுழையும் அனுமதியை நம்மை அறியாமலே நமக்கு தெரியாதவருக்கும் தந்துவிடுகிறது. ரகசியங்கள் வெளிப்படும்போதும் அதை எதிர்கொள்ளும் சக்தி பெரும்பாலான மனிதர்களுக்கு இருப்பதில்லை.

இனிவருங்காலத்தில் வாட்ஸ்அப் தான் ஒவ்வொரு குழுவினர் பேசும் தலைப்புகளை முடிவு செய்யும். அனைவரது சிந்தனையையும் வாட்ஸ்அப்பில் வரும் ஒரு ஃபார்வர்டு மாற்றி அமைக்கும். நம்மை சொந்தமாக யோசிக்கவே விடாது. உண்மையையும் பொய்யையும் மாற்றி மாற்றி நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும். எது சரி எது தவறு என யோசிக்கக்கூட நேரம் தராது. ”உடனே பகிரவும்...அவசரம்” என்பதைப் படித்ததும் அந்தச் செய்தி உண்மையா பொய்யா என்று கூட யோசிக்காமல் ஃபார்வர்டு செய்கிறோமே... அதற்கு காரணம் அந்த அவசரம்தான்.

முத்து படத்தில் வைரமுத்து இப்படி எழுதியிருப்பார்.


“கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன்...
கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்..!”
 காசு எப்படியோ. வாட்ஸ்அப்புக்கு இந்த வரி அப்படியே பொருந்தும். இப்போதே கொஞ்சம் நேரமெடுத்து உங்கள் வாட்ஸ்அப் வாழ்க்கையை பரிசீலியுங்கள். எதையாவது மாற்ற வேண்டும் என தோன்றினால் அதை மாற்ற முயலுங்கள். நீங்கள் என்பது நீங்கள்தான்; உங்கள் வாட்ஸ்அப் புரொஃபைல் அல்ல என்பதை உணருங்கள்.
குட்கா விவகாரம்- `கவுண்ட் டவுன்' ஆரம்பம்...! பலிகடாவாகப்போகும் அதிகாரிகள்

அ.சையது அபுதாஹிர்

கடந்த ஒரு ஆண்டாக தமிழகத்தை உலுக்கிய குட்கா விவகாரம் சமீபத்தில் ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. இந்த முறை சி.பி.ஐ. விசாரணையை நோக்கி குட்கா விவகாரம் செல்வதால், அதற்கு முன்பே இதில் சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் தயாராகிவருகிறார் என்ற தகவல் இப்போது கோட்டை முழுவதும் எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது.

குட்கா விற்பனை மீதான தடைச்சட்டத்தை 2013-ம் ஆண்டு அன்றைய முதல்வரான ஜெயலலிதா 110 விதியின் கீழ் கொண்டுவந்த பிறகு, குட்காவுக்கான தடை தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது. குட்கா விற்பனை செய்த கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தி குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்தனர். இதனால் குட்கா பொருள்களுக்கு டிமாண்ட் ஏற்படவே விலை ஏற்றமும் அதிகரித்தது. பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்ட குட்கா பொருள்களை கூடுதல் விலைக்கு விற்க ஆரம்பித்தனர். வடநாட்டில் இருந்து வரும் குட்கா பொருள்களுக்கும் கடும் கட்டுப்பாடு நிலவியதால், கடத்தல் முறையில் குட்கா பொருள்களை தமிழகத்துக்குள் கொண்டுவந்தனர் குட்கா வியாபாரிகள். இந்த குட்கா விற்பனையை வெளிமாநிலங்களைச் சேர்நதவர்களே செய்துவந்ததால், அவர்களால் அரசின் நெருக்கடிக்கு தாக்குப்பிடிப்பது கடினமாகிவிட்டது.




ஒருகட்டத்தில் அரசு அதிகாரிகளையும், ஆளும் வர்க்கத்தையும் சரிகட்டினால் மட்டுமே தொழிலை நடத்த முடியும் என்ற முடிவுக்கு வந்த குட்கா வியாபார புள்ளிகள் அதற்கான வேலைகளில் இறங்கினார். அரசு தரப்பை சரிகட்டும் இடைத்தரகர்களை முதலில் சந்தித்தனர். அவர்கள் கொடுத்த நெட்வொர்க்படி அரசின் உயர் பதவிகளில் இருந்தவர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து மீண்டும் குட்கா விற்பனையை அங்கீகாரம் இல்லாமல் நடத்தும் ஆணையை பெற்றனர். இந்த லஞ்சப் பணப்பரிமாற்ற விவகாரம் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் கவனத்துக்கும் சென்றது. அந்தப் புகாரை கொடுத்தது, அன்றைய போலீஸ் டி.ஜி.பி.யான அசோக்குமார்தான் என்ற தகவலும் வெளியானது.

அவர் எழுதியக் கடிதத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் முதல் குறிப்பிட்ட முன்று காவல்நிலைய இன்ஸ்பெக்டர்கள் வரையில் மாதந்தோறும் வாங்குகிற லஞ்சத் தொகை குறித்தும் அதில் சொல்லப்பட்டிருந்த தகவலும் வெளியில் கசிந்தது. டி.ஜி.பி. அசோக்குமார் எழுதியதாகச் சொல்லப்பட்ட கடிதம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்புக்கும் கிடைத்துள்ளதாக சில ஐ.பி.எஸ்.கள் மூலம் முதல்வர் ஜெயலலிதா கவனத்துக்குப் போகவே டி.ஜி.பி. அசோக்குமார், கட்டாய விடுப்பில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அசோக்குமாரின் கடித விவகாரம் பெரிதாகக் கிளம்பி, பின்னர் அதே வேகத்தில் அமுங்கியும் போய்விட்டது. பழைய டி.ஜி.பி. அசோக்குமார், ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியதாக சொல்லப்பட்ட விவகாரம் மறப்பதற்குள் ஜார்ஜ் எழுதியதாக ஒரு கடிதம் சுற்ற ஆரம்பித்தது. அந்தக் கடிதத்தில் முன்னாள் டி.ஜி.பி. அசோக்குமார் உள்ளிட்ட பல ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பெயரை, ஜார்ஜ் எழுதி இருந்ததாக வெளியான தகவல் மீண்டும் பரபரப்பைப் பற்ற வைத்தது. இரண்டு ஐ.பி.எஸ்.கள் எழுதியதாகச் சொல்லப்பட்ட கடிதங்களுக்கே விடை கிடைக்காத சூழ்நிலையில் மூன்றாவது சுற்றலாக ஒரு டைரியின் சில பக்கங்கள் வெளியானது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டம்- ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், கமிஷனர் ஜார்ஜ் மற்றும் சில ஐ.பி.எஸ்.களுக்கு மாதந்தோறும் கொடுக்கப்பட்ட லஞ்சத் தொகை எவ்வளவு என்று குறிப்பிட்டிருக்கும் பக்கங்கள் வெளியானது.

இந்தக் கடிதம் குட்கா அதிபர் மாதவராவ் என்பவரின் டைரியில் இருந்து எடுக்கப்பட்ட கடிதம் என்று தகவல்கள் வெளியானது. இந்த டைரியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் இருப்பதால், இந்த விவகாரத்தை அமுக்குவதற்கு ஆளும் தரப்பு தயாராகிவிட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. ஆனால், “மாதவராவ் யார் என்றே எனக்குத் தெரியாது” என அப்போது விஜயபாஸ்கர் தரப்பிலிருந்து தன்னிலை விளக்கமும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில்தான், "குட்கா விவகாரத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதால், அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை, அதே வேளையில் அமைச்சர்மீது நடவடிக்கை எடுத்தால் ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும்" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு "மேலிட" ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.




குட்கா விவகாரம் தொடர்ந்து சர்ச்சையாகிவரும் நிலையில்தான் தி.மு.க -வைச் சேர்ந்த திருவல்லிகேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த வழக்கில் ``குட்கா விவாரத்தில் சி.பி.ஐ.விசாரணை வேண்டும்” என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கில் வருமானவரித்துறை சார்பில் அஃபிடவிட் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ``குட்கா அதிபர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கின. தமிழகத்தில் தடையை மீறி குட்கா விற்பனை செய்வதற்காக பல்வேறு நபர்களுக்கு பணம் கொடுத்த விவரங்கள் அந்த ஆவணங்களில் இருந்துள்ளன. குறிப்பாக சுகாதாரத்துறை அமைச்சர், அப்போதைய சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டவர்களுக்கு மாதவராவ் பணம் கொடுத்த விஷயம் அதில் இருந்துள்ளது. மேலும், முன்னாள் டி.ஜி.பி அசோக்குமார் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தின் நகலும் வருமான வரித்துறையின் சோதனையில் சிக்கியது” என்று அந்த அஃபிடவிட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தொடர்ச்சியாக குட்கா விஜயபாஸ்கர் என்றே அமைச்சர் விஜயபாஸ்கரை அழைத்து வருகிறார். ஏற்கெனவே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ரூ.89 கோடி பணப் பரிமாற்றத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயரை வருமான வரித்துறை தேர்தல் ஆணையத்துக்கு அளித்த ரிப்போர்ட்டில் குறிப்பிட்டதால் இடைத் தேர்தலே ரத்து செய்யப்பட்டது.



இந்நிலையில்தான், குட்கா விவகாரத்தில் தமிழக அரசின் முதற்கட்ட நடவடிக்கையாக, உயர் ஐ.பி.எஸ். அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இடமாற்றம், காத்திருப்போர் பட்டியலில் வைப்பு முதல் நடவடிக்கையாகவும் துறை ரீதியிலான விசாரணை அடுத்தகட்ட நகர்வாகவும் முதல்வர் மேற்கொள்ள உள்ளதாக அந்தத் தகவல் உறுதிப்படுத்துகிறது. டி.ஜி.பி. அந்தஸ்து மற்றும் இணை, துணை, உதவி போலீஸ் கமிஷனர் அந்தஸ்து கொண்ட அதிகாரிகள் 23 பேர் குட்கா லஞ்சத் தொடர்பில் இருப்பதாகக் கருதப்படுவதால், முக்கிய சில அதிகாரிகளை மட்டும் இப்போது காவு கொடுக்க அரசு தயாராகிவிட்டது என்கிறார்கள். முக்கிய அதிகாரிகள் சிலரின் பதவிகள் இன்னும் சில தினங்களில் பறிக்கப்பட உள்ளன. மேலும், முன்னாள் சென்னை ஆணையாளர் ஜார்ஜிடமும் விசாரணை நடத்த அவருக்கு எதிரான அணியினர் முதல்வரிடம் துாபம் போட்டு வருகின்றனர். ஆனால், இந்த விவாகரத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்கிறார்கள். ``போலீஸார்மீது நடவடிக்கை எடுத்து தற்போது இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவே முதல்வர் திட்டமிடுகிறார். அதற்கான கோப்புகள் தயாராகிவருகின்றன. விரைவில் அறிவிப்பு வரும் பாருங்கள் என்கிறார்கள்” காவல்துறையின் உயர் அதிகாரிகள் சிலர். குட்கா விவகாரம் மீண்டும் தமிழக அரசியல் களத்தில் அனலை கிளப்பப் போவது மட்டும் நிச்சயம்.

NEWS TODAY 12.06.2026

  Staff dismissal only for grave violations like corruption: SC  Insubordination, Indiscipline Not Reasons Enough For Sacking’ Dhananjay.Mah...