Tuesday, April 3, 2018

Denied check-in, latecomer official gets flight searched

TIMES NEWS NETWORK   03.04.2018

Chennai: A Chennai-Mumbai IndiGo flight (6E 654) was delayed by 10 minutes after the aircraft which was ready to depart was subjected to a check by customs officials on Sunday morning, allegedly after the airline refused to check in a customs officer who reached late.

The flight was scheduled to depart at 5.20am, but could leave only at 5.30am. Two customs officials entered the plane at 5.08am and left at 5.24am after inspection.

Airline sources and some airport officials said the “search” was more than a coincidence as it came after the customs officer was not allowed to check in.

The officer, of the rank of inspector, arrived almost 10 minutes after the counter had closed, said an airport source. “When not allowed to check in, the officer walked away in a huff saying the flight would not take off for the next 30 minutes, and walked into the boarding area,” he said.

When the officer identified himself, the airline staff referred him to the duty manager, who tried to help him but could not as a majority of passengers had boarded the aircraft. The airline staff, instead, offered a seat on the next flight scheduled to leave at 6.45am.

Check-in counters close 45 minutes before departure and airlines are not supposed to allow check-in after that since they have to follow ‘on time performance’ rules.

Sources said the officer called up his colleagues and soon two customs officers boarded the flight and carried out a check. They checked the lavatories and the holds, besides inspecting the cargo documents. The officer who could not travel by the 5.20am flight later accepted the offer to travel by 6.45am flight.

A senior officer of Chennai airport confirmed the sequence of events and said that customs usually do not check domestic flights though they had the authority to check any aircraft. Airport customs said that they were unaware of the incident. IndiGo neither denied the incident nor confirmed it.
PG MED ADMISSION

Plea in high court assails govt order on maternity leave for in-service doctors

TIMES NEWS NETWORK   03.04.2018

Chennai: Maternity leave might be a statutory right for women employees, but the state government has refused to consider such leave availed by undergraduate government doctors as continuous service period, while calculating the total service period for admission to PG medical courses. Assailing the decision, seven woman doctors have approached the Madras high court.

Justice S Vaidyanathan orally instructed the director of medical education not to precipitate the matter further and adjourned the hearing to April 3. The court passed the oral instruction, as the directorate is expected to release the merit list for PG medical admission 2018-19 any time soon.

According to Dr Aruna and six others, they were all undergraduate government doctors and were aspiring to undertake PG courses under in-service category.

“They have all cleared NEET. While so, the TN health secretary issued a prospectus dated March 15 based on the recommendations of the selection committee. In the said prospectus, through clause 9

(a) (i), the government has excluded female doctors who have taken maternity leave in the previous two years from being eligible to apply for seats. The action of the government was illegal and unconstitutional,” senior counsel P Wilson for the petitioners said.

The government has also excluded those doctors who have taken ‘earned leave’ from the purview of continuous service. Earned leave was a right bestowed on doctors who have worked for a particular number of days in a year. The government, while giving the option to the petitioners of taking earned leave, has not put the petitioners on notice that the same would be excluded from the period of continuous service. If the government had given prior notice at the beginning of the year that taking up the option of ‘earned leave’ will be considered as break in service, and equated to unauthorised absence, then the petitioners would not have taken up the earned leave option. Hence, the authorities were stopped from now putting ‘earned leave’ against the petitioners, Wilson added. Pointing out that the high court has already recognised the right of female doctors to maternity leave in a connected case arising out of similar facts, Wilson said, “In view of the court’s stand, clause 9 (a) (i) cannot be countenanced in law.”

He further added that availing of maternity leave was a constitutional right of women, falling under the right to health enshrined under Article 21 of the Constitution, which is also recognised as a statutory right under the Maternity Benefits Act.
இணையவழிக் கல்வியின் சூப்பர் ஸ்டார்

Published : 27 Mar 2018 13:40 IST

ஷங்கர்



அமெரிக்கா தொடங்கி ஆப்கானிஸ்தானின் குக்கிராமத்துக் குழந்தைகள்வரை கணிதப் பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை வீட்டிலிருந்தபடியே தீர்த்துக்கொள்ளலாம். பள்ளிக் கணிதம் முதல் சாட் தேர்வுவரை இலவசமாக இணையத்தில் 5,000 வீடியோ பாடங்களைக் கொண்ட கான் அகாடமியைத் தொடங்கிய சல்மான் கானின் கல்வி மாதிரி இன்று உலகம் முழுவதும் கல்வியாளர்களால் வியக்கப்படுகிறது.

உலகக் கல்விச் சூழலையே மாற்றிய சல்மான் கான், கல்வியில் புரட்சி ஏற்படுத்தும் எண்ணத்தையெல்லாம் ஆரம்பத்தில் கொண்டிருக்கவில்லை. இன்னொரு நாட்டில் வசித்த அல்ஜீப்ரா கணிதப் பாடங்களில் சிரமப்பட்ட தன் உறவுக்காரச் சிறுமி நாடியாவுக்கு, யாஹூ மெசஞ்சர் வழியாகச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார் நிதி ஆலோசகராக இருந்த சல்மான் கான். மைக்ரோசாப்ட் பெயிண்ட் மென்பொருளைக் கரும்பலகைபோல ஆரம்பத்தில் பயன்படுத்தினார்.

ஒரு நாள் சல்மானின் பாடங்களை வீடியோவாகப் பதிவுசெய்து அனுப்பச் சொன்னாள் நாடியா. சந்தேகம் வரும்போது திரும்ப ஓடவிட்டு, தெரிந்த விஷயங்களை மீண்டும் பார்த்துக்கொள்ள முடியும் என்று நினைத்தாள். கான், நாடியாவுக்காகப் பாடம் எடுத்த வீடியோவை யூட்யூபில் போட்டார். கானின் பாடங்கள் நாடியாவுக்கு மட்டுமல்ல; இன்னும் பலருக்கும் தேவையாக இருந்தது பின்னூட்ட நன்றிகளிலிருந்து தெரியவந்தது. இப்போது சல்மான் கானின் பாடங்களைப் பார்த்து லட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்கின்றனர்.

பள்ளிக்குச் சென்று மற்றவர்களுடன் சேர்ந்து கற்கும் குழந்தைகள் ஒவ்வொருவரும் பாடங்களைக் கற்பதில் வெவ்வேறு விதமான வேகத்தையும் திறன்களையும் கொண்டிருப்பார்கள். ஒரு குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட பாடத்தில், பிரிவில் இடறும் சந்தேகம் இன்னொரு குழந்தைக்கு இருக்காது.

இச்சூழ்நிலையில் குழந்தைகள் அவரவர் வேகத்திலேயே கற்கவும் தங்கள் திறன்களை மேம்படுத்தவும் உதவும் 5,000-க்கும் மேற்பட்ட பாடங்கள் இந்த இணையத்தளத்தில் உள்ளன. பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி, மாணவர்களின் திறன்களை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு உதவும் மதிப்பீட்டு முறைகளும் இந்த இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

பில்கேட்ஸின் குழந்தைகளை எட்டிய கான்

சல்மான் கான், 2009-ம் ஆண்டு தனது வீடியோ பாடப் பொழுதுபோக்கை முழுநேரத் தொழிலாக மாற்றினார். சிலிகான் பள்ளத்தாக்கைச் சேர்ந்த முதலீட்டாளர்களில் ஒருவரான ஜான் டோயரின் மனைவி ஆன் டோயர் அளித்த சிறு நன்கொடையின் கீழ் பணியாற்ற ஆரம்பித்தார். ஒவ்வொரு மாதமும் அவரது வீடியோக்களை இணையத்தில் பார்க்கும் ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருந்தது.

2010-ம் ஆண்டு, ஆஸ்பன் ஐடியாஸ் பெஸ்டிவல் நிகழ்வில் பங்குபெற்ற ஆன் டோயரிடமிருந்து வந்த குறுஞ்செய்தி சல்மான் கானின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த நிகழ்வில் பேசிய பிரபல தொழிலதிபர் பில் கேட்ஸ், தன் குழந்தைகள் கான் அகாடமியின் வீடியோக்களைத் தங்கள் சந்தேகங்களைத் தீர்க்க பயன்படுத்துவதாகக் கூறி பாராட்டிய செய்திதான் அது. வெகு விரைவிலேயே பில் கேட்ஸை சல்மான் கான் சந்தித்தார்.


பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளையிலிருந்து 1.5 மில்லியன் டாலர்களை நன்கொடையாகப் பெற்றார். கூகுள் நிறுவனம் 2 மில்லியன் டாலரை அளித்தது.

தன் உறவினர் பெண்ணுக்கு உதவுவதற்காகக் கணிதப் பாடங்களை எடுக்க ஆரம்பித்த சல்மான் கான், 2012-ம் ஆண்டு டைம்ஸ் இதழ் வெளியிட்ட 100 சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றார். அவரைப் பற்றி பில் கேட்ஸ் வெளியிட்ட குறிப்பில், “ஒரு கணக்குப் பாடத்தை வீடியோவில் போஸ்ட் செய்யத் தொடங்கினார். ஆனால், அவர் கல்வியுலகில் ஏற்படுத்திய தாக்கம் அளவிட முடியாதது” என்று கூறியுள்ளார்.


இப்படித்தான் பாடம் நடக்கிறது

அல்ஜீப்ராவோ கால்குலசோ திரிகோணமிதியோ எதுவாக இருந்தாலும் சல்மானின் குரல் அதைச் சிறுகுழந்தைக்கும் புரிவதுபோல விளக்குகிறது. அதற்குப் பிறகு ஆன்லைன் சோதனைகளும் இருக்கின்றன. குறிப்பிட்ட நேரமும் கொடுக்கப்படுகிறது. ஒரு குழந்தை செய்யும் தவறுகளும் சுட்டிக்காட்டப்படும்.

ஏற்கெனவே செய்த தவறை குழந்தை செய்யாதபோது அதற்கு ஊக்கமும் கொடுக்கப்படும். ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட கணக்கில் அந்தக் குழந்தை நம்பிக்கை பெற்ற பிறகு அதற்கடுத்த நிலையில் உள்ள கணக்குக்கும் செல்ல வழிகாட்டும் வகையில் வீடியோ மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

cos-1(1) = ? என்று ஒரு நேர்மாறு திரிகோணமிதி சார்புக் கணக்கு இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒரு மாணவர் அதற்கு 0 டிகிரி என்று பதிலளித்தால், கணிப்பொறி அவர் சொல்வது சரி என்று சொல்லும். அந்த மென்பொருள் இன்னொரு கணக்கையும் தரும். இப்படியாகப் பத்துக் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்களும் தரப்படும். ஒரு கட்டத்தில் மேல்நிலைப் பள்ளி மாணவருக்கே இன்னமும் சிரமத்தைத் தரும் திரிகோணமிதியை உயர்நிலைப் பள்ளி மாணவரும் கற்றுத் தேறும் அளவுக்கு எளிதாக இருக்கின்றன கான் அகாடமியின் பாடங்கள்.

கான் அகாடமி சார்பில் கலை, அறிவியல், கணிப்பொறி தொடர்பான பாடங்கள் வீடியோக்களாக இருந்தாலும் பள்ளிக் கணிதப் பாடங்களே உலகம் முழுவதும் அதிகமானவர்களால் பார்க்கப்படுகின்றன. மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி தமது குழந்தைகளுக்குப் பாடங்கள் சார்ந்து உதவும் பெற்றோருக்கும் இந்த வீடியோக்கள் ஆதரவாக உள்ளன. அவர்கள் கணிதத்தில் புலிகளாக இருக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை.



10 கோடி பார்வைகள்

சல்மானின் கான் அகாடமி இணையதளம் பத்து கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் 190 நாடுகளில் பார்க்கப்படுகிறது. தமிழ் உட்பட 18 மொழிகளில் மொழிபெயர்த்தும் காணப்படுகிறது.

கல்வியை எல்லாருக்குமானதாக மாற்றி ஜனநாயகப்படுத்தியவராக சல்மான் கான் கொண்டாடப்படுகிறார். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமி, கான் அகாடமி இணையதளத்தில் எஸ்ஏடி (Scholastic AssessmentTest) தேர்வுக்காகத் தயாராகி, பாகிஸ்தானுக்கு சென்று தேர்வெழுதினார். தற்போது அமெரிக்காவில் ஒரு கல்லூரியில் உயர்கல்வி படிக்கும் யுவதி அவர். இந்த வெற்றிக் கதையைச் சந்தோஷத்துடன் எல்லாரிடமும் பகிர்ந்துகொள்ளும் சல்மான் கானுக்குத் தற்போது 41 வயது.

சல்மான் கான் அமர்ந்திருக்கும் அவரது அலுவலக அறையில் அவரைச் சுற்றிலும் கரும்பலகைகள் அடுத்தடுத்த திட்டங்கள், பாடங்களால் நிரம்பியுள்ளன. “இந்த உலகம் நம்ப முடியாத அளவு ஒன்றுக்கொன்று தொடர்புடையது” என்று கூறிச் சிரிக்கிறார்.

ஆம், அந்தத் தொடர்பை வைத்தே கல்வியை எல்லாருக்குமானதாக மாற்றியவர் அவர்.
‘உயர்ந்த’ பாதசாரிகள் கவனத்துக்கு…

Published : 31 Mar 2018 11:37 IST

டாக்டர் பி. ராதாகிருஷ்ணன்

THE HINDU TAMIL


மனித உடலில் மிக அற்புதமான படைப்பு, பாதங்கள்! நரம்புகள், தசைகள், எலும்புகள் போன்றவை எல்லாம் மிக நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டுள்ள உறுப்புகள் அவை. நம்முடைய எடை எவ்வளவு அதிகரித்துக்கொண்டே போனாலும் நம்மைத் தூக்கிச் சுமக்க வேண்டும் என்பதற்காக, குழந்தைப் பருவம் முதல் முதுமைக் காலம்வரை பாதங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், அத்தகைய சிறப்பு வாய்ந்த பாதங்களைச் சிறப்பாகப் பராமரிக்கிறோமா? வலியும் பிரச்சினைகளும் தோன்றும்போதுதான் அந்தக் கேள்விக்கான பதில் ‘இல்லை’ என்பது புரியும்.

‘பாதங்களைப் பாதுகாக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என்று பொதுவாகக் கேட்டால், எல்லோருமே ‘செருப்பு அணிகிறோம்’ என்பார்கள். ஆனால், அளவு சரியில்லாத செருப்புகளை அணிந்துகொண்டு சிறிது தூரம் நடப்பதுகூடப் பாதங்களின் ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்பது பலருக்குத் தெரிவதில்லை. அந்தச் செருப்புகளை அணிந்து நடந்தால் நரம்புகள், தசைகள், எலும்புகள் எல்லாவற்றுக்குமே நெருக்கடி ஏற்படும். அதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு, அன்றாட வாழ்க்கையே முடங்கும் நிலைகூட ஏற்படலாம்.

தற்போது கால் பாதங்களில் ஏற்படும் பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்! அதிலும் ‘ஹை ஹீல்ஸ்’ எனப்படும் உயர் குதிகால் செருப்பு அணிந்த பெண்களே, பாதிப்பின் உச்சத்தைத் தொடுகிறார்கள். குறிப்பாக 20 முதல் 30 வயது வரையுள்ள பெண்களே குதிகால் செருப்புகளை அணிவதால், அவர்களே பெருமளவு ஆரோக்கியப் பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள்.

செருப்பால் வருமா சிறப்பு?

இந்த உயர் குதிகால் செருப்புகள் பெண்களைக் கவர என்ன காரணம்? அவற்றின் அழகும் வடிவமைப்பும்தான். தவிர, எப்போதும் தட்டையான செருப்புகளை அணியும் பெண்கள், உயர் குதிகால் செருப்புகள் தங்களுக்குக் கம்பீரத்தைத் தருவதாக நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை தங்கள் தன்னம்பிக்கையை அதிகரிப்பதாகவும் சொல்கிறார்கள்.

மேலும் வயதுக்கேற்ற, எடைக்கேற்ற சராசரியான உயரம் கொண்ட பெண்கள்கூட, தங்களைக் குட்டையாகக் கருதிக்கொள்கிறார்கள். அவர்களெல்லாம் குதிகால் செருப்பு மூலம் தங்கள் தாழ்வு மனப்பான்மை நீங்குவதாகவும், தன்னம்பிக்கை மேம்படுவதாகவும் நம்புகிறார்கள். இப்படிப்பட்ட தவறான எண்ணங்களால்தான் உயர் குதிகால் செருப்பு அணியும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. அதனால் அவர்களுக்குப் பாதங்களில் ஏற்படும் பிரச்சினைகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

பாதத்துக்குப் பாதிப்பு

உயர் குதிகால் செருப்புகளைத் தொடர்ந்து அணியும்போது, விரல் பாதத்தோடு சேரும் பகுதி வளைந்துபோகும். அதோடு தசை அழுத்தத்தால் அந்தப் பகுதி கெட்டியாகி ஒருவிதக் கட்டிபோல் தோன்றும். அதற்கு ‘பூனியன்’ என்று பெயர். சிலருக்குப் பெருவிரல் வளைந்து பக்கத்து விரலின் மேல் பகுதிக்குப் போய்விடும். இதனால் பயங்கர வலி தோன்றும். குதிகால் உயர்ந்து, முனை கூர்மையாக இருக்கும் செருப்புகளை அணியும் பெண்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

குதிகால் செருப்பணியும் பெண்களில் 60 சதவீதம் பேர் காலில் சுளுக்காலும், குதிகால் வலியாலும் அவதிப்படுகிறார்கள். குதிகாலின் பின்பக்கம் சிலருக்கு சிவந்து வீங்கியிருக்கும். அவர்களது காயம் வெளியே தெரியாவிட்டாலும் குதிகாலின் உள்ளெலும்பில் கீறலோ அல்லது முறிவோ ஏற்பட்டிருக்கலாம். இயல்பு நிலை பாதிக்கப்பட்டு குதிகால் நரம்பு ‘விண்விண்’ எனத் தெறிக்கிற மாதிரி ‘நியுரோமா’ எனப்படும் கடுமையான வலி ஏற்படலாம். இந்த வலி அவர்களது அன்றாடச் செயல்பாடுகளை முடக்கிப்போட்டுவிடும்.

நீண்ட நேரம் ‘ஹை ஹீல்ஸ்’ செருப்புகளை அணியும்போது குதிகால் தசைநார்கள் சுருங்கிப் போகும். மேலும், முதுகுத் தண்டில் விரிசல் ஏற்பட்டு அதிக அழுத்தம் ஏற்படுவதுடன், முழுங்கால் மூட்டுவலியும் ஏற்படும்.

மசாஜ்… சுடுநீர்… வேண்டாம்!

உயர் குதிகால் செருப்புகள் அணிந்துகொண்டு அன்ன நடை நடப்பவர்களில் பெரும்பாலானவர்கள் குதிகால் வலியால் அவதிப்படுகிறார்கள். இதை ‘பிளான்டர் ஃபேசிட்டீஸ்’ என்று குறிப்பிடுகிறோம். இதற்கு அளவு சரி இல்லாத செருப்புகளும் தவறான வாழ்க்கை முறையும் காரணங்களாக இருக்கின்றன. உயர் குதிகால் செருப்புகள் குதிகாலைப் பொதிந்திருக்கும் தசைகளில் கீறலை ஏற்படுத்தும். அதோடு கால் பாதங்களில் முறிவையும் ஏற்படுத்தும். இதைத் தொடக்கத்திலே கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம். பாதிப்பு முற்றிவிட்டால்,‘கீ ஹோல் சர்ஜரி’ தேவைப்படும்.

இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்கள், பாதப் பகுதியை மென்மையாகக்கொண்ட செருப்புகளையும், ‘ஹீல்ஸ்’ உயரமற்ற செருப்புகளையும் அணிய வேண்டும். அதோடு கால் பாதங்களுக்கும் மூட்டுக்கும் தேவையான பயிற்சிகளையும் அன்றாடம் செய்துவர வேண்டும். பல ஆண்டுகளாக உயர் குதிகால் செருப்பு அணிந்து நடக்கும் பெண்கள் கணுக்கால் வலியால் அவதிப்படுகிறார்கள். அவர்கள், பாதங்களுக்குத் தேவையான அளவு ஓய்வு கொடுக்கவேண்டும். அவர்கள் வலி ஏற்படும் பகுதியில் ‘ஐஸ் பேக்’ மூலம் ஒத்தடம் கொடுக்கலாம். வலி ஏற்பட்ட பகுதியில் சுடுநீரை ஊற்றுவதும், எண்ணெய் மூலம் ‘மசாஜ்’ செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

எந்தத் துறையிலும் உச்சத்தை அடையவும் தன்னம்பிக்கை அவசியம் , ‘ஹை ஹீல்ஸ்’ செருப்புகள் தேவையா என்ற கேள்விக்கு நாமே பதில் அளித்துக்கொள்வோம்.
‘ஹை ஹீல்ஸ்’ பெண்கள் கவனிக்க வேண்டியவை

# குதிகால் செருப்பின் உள்ளிருக்கும் ‘சோல்’ (உள்ளங்கால் பகுதிக்கானது) ரப்பரில் ஆனதுதானா என்று பார்த்து வாங்குங்கள். ரப்பர் சோல்தான் கால் வழுக்காமல் சிரமமின்றி நடக்கப் பாதுகாப்பானதாக இருக்கும்.

# குதிகால் செருப்பின் அடிப்பாகம், மேற்பகுதி, ஓரங்களில் ‘லைனிங்’ செய்யப்பட்டிருக்கும். அது வினைல் போன்ற செயற்கை இழையால் செய்யப்படாமல், இயற்கையான தோலால் செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும். தோல் செருப்புகளே ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவைதான் காலுக்குக் காற்றோட்டம் தந்து பாதுகாப்பைத் தரும்.

# உயரமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக அரை அடி உயரமுள்ள குதிகால் செருப்புகளை வாங்காதீர்கள். மிக உயரமான குதிகால் செருப்புகளே அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும். 2 அங்குல உயரம் கொண்ட குதிகால் செருப்புகளே ஆபத்தில்லாதவை, பாதுகாப்பானவை.

# செருப்பின் முன் பகுதியில் மேற்புறம் முழுவதும் மூடி இருக்காமல் ஆங்காங்கே காற்று புகும்படி, திறந்தபடி இருக்க வேண்டும். அதையும் குறைந்த நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். குதிகால் செருப்பு காலில் நன்றாகப் பொருந்தும் வண்ணம் வடிவமைப்பைப் பெற்றிருக்க வேண்டும். அதுவே ஆரோக்கியமானது.

# குதிகால் செருப்பணிந்தவர்கள் கால்களை எட்டி நடக்காமல் குறுகிய இடைவெளியில் கால்களை எடுத்துவைக்க வேண்டும். மாடிப் படி ஏறும்போது முன்னங்காலையும் குதிகாலையும் படியில் ஒன்றுபோல் சமமாகப் பதித்து ஏற வேண்டும். மாடிப் படியிலிருந்து கீழிறங்கும்போது காலின் முன் பாதம் மட்டும் படியில் பதியும்படி கவனமாக நடந்து கீழிறங்க வேண்டும்.

# குதிகால் செருப்புடன் கார் ஓட்டும்போது கார் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வராது. எனவே, குதிகால் செருப்புடன் கார் ஓட்டுவதைத் தவிர்த்துவிடுங்கள்.

# குதிகால் செருப்பணிந்து நடப்பவர்கள், அவ்வப்போது காலை நீட்டி கீழே உட்கார்ந்து 10 அல்லது 15 நிமிடங்கள் ஓய்வு எடுப்பது அவசியம். இப்படி ஓய்வெடுக்கும்போது கால்களிலிருந்து ரத்த ஓட்டம் மற்ற இடங்களுக்குப் பரவி குதிகாலில் ஏற்படும் வீக்கம் குறையும்.

# கால் அளவைச் சரியாகக் கணித்து அதற்குப் பொருத்தமான, அதிக உயரமில்லாத குதிகால் செருப்புகளைத் தேர்ந்தெடுங்கள். பிரபலமான கம்பெனி, செருப்பின் புற அழகில் மயங்கி கால் அளவுக்குப் பொருந்தாத குதிகால் செருப்புகளை ஒருபோதும் வாங்காதீர்கள்.

# பகல் முழுவதும் நடந்து, வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பும்போது உங்கள் கால் சற்று வீக்கத்துடன் காணப்படும். எனவே, செருப்பு வாங்குவதற்கு காலை நேரத்தைவிட இரவு நேரம் ஏற்றது.

# அழகைவிட, கம்பீரத்தைவிட ஆரோக்கியம் உடலுக்கு அவசியம். அதனால் ‘ஹை ஹீல்ஸ்’ செருப்புகளை முடிந்த அளவு தவிர்த்துவிடுங்கள். அணிய ஆசைப்பட்டாலும்கூட ஒரு சில மணி நேரத்துக்கு மட்டுமே அணியுங்கள்.

கட்டுரையாளர், எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர்
தொடர்புக்கு: radhakrishnan87@yahoo.co.in
அண்ணா பல்கலை நுழைவு தேர்வு அறிவிப்பு

Added : ஏப் 02, 2018 22:42

சென்னை: இளநிலை பட்டம் முடித்தவர்கள், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.டெக் போன்ற, முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர, அண்ணா பல்கலை சார்பில், 'டான்செட்' நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. வரும் கல்வி ஆண்டில், முதுநிலை பட்டப் படிப்புக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும் பட்டதாரிகளுக்கு, மே, 19, 20ல், நுழைவு தேர்வு நடத்தப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. தேர்வுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது. 23க்குள், விண்ணப்பிக்கலாம்.
முதுநிலை படிப்பு நிபந்தனையை எதிர்த்து அரசு டாக்டர்கள் ஐகோர்ட்டில் வழக்கு

Added : ஏப் 02, 2018 22:56


சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையின் போது, பணி காலத்தில் எடுத்த பேறுகால விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு சேர்க்கப்படாததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் டாக்டர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். விசாரணையை, இன்றைக்கு உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.அறந்தாங்கியை சேர்ந்த, டாக்டர் அருணா, சேலம் மாவட்டத்தை சேர்ந்த, டாக்டர் நித்யலட்சுமி, பாளையங்கோட்டையை சேர்ந்த, டாக்டர் ஆனந்தநாராயணி உள்ளிட்ட, ஏழு டாக்டர்கள் தாக்கல் செய்துள்ள மனு:நாங்கள், அரசு டாக்டர்களாக பணியாற்றி வருகிறோம். முதுநிலை படிப்பில் சேர ஆர்வமாக உள்ளோம். மார்ச், ௧௫ல், சுகாதார துறை வெளியிட்ட விளக்க குறிப்பேட்டில், மாணவர்கள் சேர்க்கைக்கான தகுதி பற்றி கூறப்பட்டுள்ளது.

அதில், 'அரசு பணியில் இருக்கும் டாக்டர்கள், குறைந்தபட்சம், இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி இருக்க வேண்டும். 'ஈட்டிய விடுப்பு, பேறுகால விடுப்பு போன்றவை, பணி காலமாக கருதப்படாது' என, கூறப்பட்டுள்ளது.அதனால், இரண்டு ஆண்டுகளில், பேறுகால விடுப்பு எடுத்த பெண் டாக்டர்கள் யாரும், முதுநிலை மருத்துவ படிப்பில் சேர முடியாது; இது, சட்டவிரோதமானது. பேறுகால விடுப்பு, சட்டப்படியான உரிமை. குறிப்பிட்ட நாட்கள் பணியாற்றியதற்காக, ஈட்டிய விடுமுறை அளிக்கப்படுகிறது. இது, எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமை. எந்த முன்னறிவிப்பும் இன்றி, ஈட்டிய விடுப்பு, பணி காலமாக கருதப்படாது என, கூறப்படுவது சரியல்ல.முன்கூட்டியே, 'நோட்டீஸ்' அளித்திருந்தால், இந்த விடுப்பை எடுத்திருக்க மாட்டோம்.எனவே, முதுநிலை மருத்துவ படிப்பு, மாணவர்கள் சேர்க்கைக்கான புதிய நிபந்தனைகளை, ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை, நிபந்தனைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி, வைத்தியநாதன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர், பி.வில்சன் ஆஜரானார். விசாரணையை, இன்றைக்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.

Monday, April 2, 2018

ஆழ்ந்த தூக்கத்துக்கு ஒரு டஜன் யோசனைகள்! #SleepHygiene 

ஜி.லட்சுமணன்

 VIKATAN  

பகல் முழுக்க உழைத்துக் களைத்துப் போவது உடம்பு மட்டுமல்ல... மனமும்தான்! இரண்டையும் ரிலாக்ஸ் செய்வது உறக்கம். நிம்மதியான, போதுமான தூக்கம் இல்லையா? அடுத்த தினம் ஒரு நல்ல தினமாக யாருக்குமே விடியாது! கோபம், எரிச்சல், தேவையற்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும்; உற்சாகம் நம்மைவிட்டுக் கழன்று ஓடியிருக்கும். "தொடர்ச்சியான தூக்கமின்மை மனஅழுத்தம் தொடங்கி இதய நோய்கள் வரை பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்" என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். அதேநேரத்தில், ``நிம்மதியாக தூக்கம் பல நோய்களைத் தீர்க்கும் அருமருந்து" என்று அடித்தும் சொல்கிறார்கள்.




``இரவில் சரியான தூக்கம் இல்லாததற்குச் சில பழக்க வழக்கங்களும், உண்ணும் உணவுகளும்கூட காரணமாக இருக்கலாம். நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்து, சில முறையான பழக்கங்களைக் கடைப்பிடித்தால் நல்ல, நிம்மதியான, ஆழ்ந்த தூக்கம் நிச்சயம் உண்டு" என்கிற தூக்கவியல் நிபுணர் ராமகிருஷ்ணன், அதற்கான சில `ஸ்லீப் ஹைஜீன்’ (Sleep hygiene) வழிமுறைகளையும் விவரிக்கிறார்...

* குறிப்பிட்ட நேரத்துக்கு உறங்குவது குட்... வெரிகுட்!

சிலர் கண்ட நேரத்தில் படுத்து, கண்ட நேரத்தில் எழுந்திரிப்பார்கள். தினமுமே `இந்த நேரத்தில் படுக்கைக்குப் போய்விட வேண்டும்’ என்று ஒரு நேரத்தை ஒதுக்கிக்கொண்டு, சரியாக பெட்டில் ஆஜராகிவிடுவது குட் ஹேபிட். ஓரிரு நாள்களில் சரியான நேரத்துக்குத் தூக்கம் வந்துவிடும். பிறகென்ன... அலாரமே வைத்துக்கொள்ளாமல் குறிப்பிட்ட நேரத்தில் விழிப்பும் தானாகவே வந்துவிடும். மூளை, செரடோனின் (Serotonin), மெலடோனின் (Melatonin) ஆகிய ஹார்மோன்களின் அளவைச் சரிசெய்து, இயல்பான உறக்கத்துக்கு உத்தரவாதம் தந்துவிடும்.

* இரவு இனிக்க உணவில் கவனம்!

தூங்கச் செல்வதற்குக் குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் சாப்பிட்டுவிட வேண்டும். இரவில் எளிதில் செரிமானமாகும் உணவுகளையே சாப்பிட வேண்டும். தயிர், முட்டை, இறைச்சி, எண்ணெயில் பொரித்த சிப்ஸ், ஃபாஸ்ட் ஃபுட், காரமான உணவுகளுக்கு கறாராக `நோ’ சொல்லிவிடுவது பெஸ்ட்.

* ரூமையும் கொஞ்சம் கவனிங்க பாஸ்!

நாம் உறங்கும் அறை, தூங்குவதற்கென ஏற்ற சூழலோடு இருக்கவேண்டியது அவசியம். காற்றோட்டமான அறையாக இருப்பது மிக முக்கியம். படுக்கை அறை ஜன்னல்கள் வழியே பளீரென வெளிச்சம் வந்தால், அங்கு கறுப்பு நிறத் திரைச்சீலைகளைத் தொங்கவிடலாம். வெளிச்சமில்லாத, இருண்ட அறை தடையில்லா தூக்கத்துக்கு உதவும். அவரவர் உடல்வாகுக்கு ஏற்ப அறையின் வெப்பநிலையை வைத்துக்கொள்ளலாம். (ஜிலீர் குளிர் சிலருக்குப் பிடிக்கும்; சிலருக்கு மிதமான குளிர்... இப்படி).



* `இசை’ என்கிற வரம்!

மன அமைதிதான் தூக்கத்துக்கான உண்மையான டானிக். அது கிடைக்க, உறவினர்கள், நண்பர்களுடன் குட்டி அரட்டை அடிக்கலாம். இசையும் தூக்க மருந்தே! மெல்லிய இசை அல்லது பாடல்களைக் கேட்பதும் உறக்கம் வர உதவும்.

* யோகா உதவும்!

தூக்கத்துக்குத் தயாராக, யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி போன்றவற்றைச் செய்யலாம். தியானம், மனதில் உள்ள குழப்பங்களை, அழுத்தங்களை நீக்கி, உடலை ரிலாக்ஸ் ஆக்கும்; ஆழ்ந்த உறக்கம் பெற உதவும்.

* டீ,காபி வேண்டாமே!

தூங்கச் செல்வதுக்கு குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் டீ, காபி, மது போன்றவற்றை அருந்தக் கூடாது. காபியில் உள்ள கஃபைன் புத்துணர்ச்சி கொடுப்பது இருக்கட்டும், தூக்கத்தைக் கெடுத்துவிடும். ஆக, கஃபைன் நிறைந்த காபி, டீயை மாலை 5 மணிக்கு மேல் பருகாதீர்கள்.



* ஒரு டம்ளர் பால் உதவும்!

இரவில் பசும்பால் குடிப்பது ஆரோக்கியம். இதிலுள்ள ட்ரிப்டோபேன் (Tryptophan) நியூரோடிரான்ஸ்மிட்டரின் அளவைச் சீராக்கி, தூக்கத்தை வரவழைக்கும். ஆப்பிள், வாழைப்பழம் போன்ற பழங்களை ஒன்றாகக் கலந்து சாலட் செய்து சாப்பிடலாம். ஃப்ரூட் சாலட்டும் நல்ல தூக்கம் தரும்.

* படுக்கும் நிலையில் (Posture) கவனம்!

மல்லாந்தோ, ஒரு பக்கமாகவோ படுக்க வேண்டும். குப்புறப் படுக்கக் கூடாது. படுக்கையும் தலையணையும் நமக்கு ஏற்றபடி, வசதியானதாக இருக்க வேண்டும். படுக்கைக்குச் செல்லும்போது தளர்வான உடைகளை உடுத்திக்கொள்வது நல்லது. நனைந்த மற்றும் இறுக்கமான உள்ளாடைகளுடன் தூங்கச் செல்லக் கூடாது.

* வாசிப்பைக் கொஞ்சம் தள்ளிவைக்கலாம்!

இரவில் சுய முன்னேற்றப் புத்தகங்கள், ஆழமான கருக்களைக் கொண்ட நாவல்கள் போன்ற நம் சிந்தனையை, ஆர்வத்தைத் தூண்டும் புத்தகங்களைப் படிக்கக் கூடாது. இவை மூளையைச் சுறுசுறுப்பாக்கி, தூக்கத்தைக் கெடுத்துவிடும். இவற்றுக்குப் பதிலாக போர் அடிக்கும் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். இரவில் திகிலூட்டும் த்ரில்லர், ஆக்‌ஷன் படங்களைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம். ஆர்வத்தைத் தூண்டக்கூடிய டி.வி நிகழ்ச்சிகளும் தூக்கத்தைக் கெடுக்கும்.



* மொபைலுக்கு `நோ!’

படுக்கையறையைத் தூங்குவதுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். படுக்கையில் உட்கார்ந்து ஆபிஸ் வேலைகளைச் செய்வதோ, டி.வி., கம்ப்யூட்டர், லேப்டாப் பார்ப்பதோ கூடவே கூடாது. இரவில், படுத்தவாறே குறைந்த வெளிச்சத்தில் மொபைல், ஐபேட் போன்றவற்றில் மின்னணுப் புத்தகத்தை (e book) படிப்பதையும் தவிர்க்கலாம்.

* மதியத் தூக்கம் வேண்டாம்!

மதியத்திலும் மாலை நேரத்திலும் தூங்குவது கூடாது. இது, இரவுத் தூக்கத்தை பாதிக்கும். நள்ளிரவில் விழிப்பு ஏற்பட்டால், இயல்பாக இருங்கள். அடுத்த நாள் பார்க்கவேண்டிய வேலைகளைப் பற்றி யோசிக்கவே யோசிக்காதீர்கள்!

* வாக்கிங் நல்லது!

தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உடற்பயிற்சி செய்யக் கூடாது. மாலை நேரத்தில் ஒரு குட்டி வாக் போவது உறக்கத்துக்கு `வெல்கம்’ சொல்லும்.

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...