Tuesday, April 3, 2018

முதுநிலை படிப்பு நிபந்தனையை எதிர்த்து அரசு டாக்டர்கள் ஐகோர்ட்டில் வழக்கு

Added : ஏப் 02, 2018 22:56


சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையின் போது, பணி காலத்தில் எடுத்த பேறுகால விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு சேர்க்கப்படாததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் டாக்டர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். விசாரணையை, இன்றைக்கு உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.அறந்தாங்கியை சேர்ந்த, டாக்டர் அருணா, சேலம் மாவட்டத்தை சேர்ந்த, டாக்டர் நித்யலட்சுமி, பாளையங்கோட்டையை சேர்ந்த, டாக்டர் ஆனந்தநாராயணி உள்ளிட்ட, ஏழு டாக்டர்கள் தாக்கல் செய்துள்ள மனு:நாங்கள், அரசு டாக்டர்களாக பணியாற்றி வருகிறோம். முதுநிலை படிப்பில் சேர ஆர்வமாக உள்ளோம். மார்ச், ௧௫ல், சுகாதார துறை வெளியிட்ட விளக்க குறிப்பேட்டில், மாணவர்கள் சேர்க்கைக்கான தகுதி பற்றி கூறப்பட்டுள்ளது.

அதில், 'அரசு பணியில் இருக்கும் டாக்டர்கள், குறைந்தபட்சம், இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி இருக்க வேண்டும். 'ஈட்டிய விடுப்பு, பேறுகால விடுப்பு போன்றவை, பணி காலமாக கருதப்படாது' என, கூறப்பட்டுள்ளது.அதனால், இரண்டு ஆண்டுகளில், பேறுகால விடுப்பு எடுத்த பெண் டாக்டர்கள் யாரும், முதுநிலை மருத்துவ படிப்பில் சேர முடியாது; இது, சட்டவிரோதமானது. பேறுகால விடுப்பு, சட்டப்படியான உரிமை. குறிப்பிட்ட நாட்கள் பணியாற்றியதற்காக, ஈட்டிய விடுமுறை அளிக்கப்படுகிறது. இது, எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமை. எந்த முன்னறிவிப்பும் இன்றி, ஈட்டிய விடுப்பு, பணி காலமாக கருதப்படாது என, கூறப்படுவது சரியல்ல.முன்கூட்டியே, 'நோட்டீஸ்' அளித்திருந்தால், இந்த விடுப்பை எடுத்திருக்க மாட்டோம்.எனவே, முதுநிலை மருத்துவ படிப்பு, மாணவர்கள் சேர்க்கைக்கான புதிய நிபந்தனைகளை, ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை, நிபந்தனைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி, வைத்தியநாதன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர், பி.வில்சன் ஆஜரானார். விசாரணையை, இன்றைக்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP Amarjeet.Singh@timesofindia.com 10.04.2025 Bhopal : Twice ‘outsourced’, the ...