வெளிநாட்டு நன்கொடைக்கு கணக்கு எங்கே?
தொண்டு நிறுவனங்களுக்கு அரசு கிடுக்கிப்பிடி
dinamalar 30.04.2018
புதுடில்லி:'நாட்டில் உள்ள, 3,292 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து பெற்ற நன்கொடைகளுக்கு, இன்னும், வரவு - செலவு கணக்கை சமர்ப்பிக்கவில்லை' என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரவு - செலவு
இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட தொண்டு நிறு வனங்கள் மற்றும் கல்வி நிறுவனங் களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. சமூகப் பணி களில் ஈடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனங் கள் மற்றும் முன்னணி கல்வி நிறுவனங் களுக்கு, ஆண்டு தோறும்,வெளிநாடுகளில் இருந்து, கோடிக்கணக்கில் நன்கொடை
குவிகிறது. இது தொடர்பான வரவு - செலவு கணக் குகளை, ஒவ்வொரு நிதி ஆண்டின் இறுதியிலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதி.
கணக்கு தாக்கல் செய்யாதவர்கள்மீது, வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும். இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள, 3,292 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், 2011 - 12 முதல், 2016 - 17 வரையி லான நிதி ஆண்டில் வசூல் செய்த, வெளிநாட்டு நன்கொடைக்கு, இதுவரை கணக்கு காட்டவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம், அந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. 'இந்த நோட்டீஸ் பெறப்பட்ட, 15 நாட்களுக்குள், தங்கள்கணக்குகளை இணையம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்' என, அதில் கூறப்பட்டுள்ளது.
நோட்டீஸ்
இன்போசிஸ் பவுண்டேஷன், சென்னை கிறிஸ்தவ
கல்லுாரி, ஐ.ஐ.டி., - சென்னை மற்றும் டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலை, டில்லி பல்கலை, இந்திய மருத்துவ ஆராய்ச்சிகழகம், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலை, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் பல்கலைக் கழகங்கள் உட்பட, ஏராளமான முன்னணி கல்வி நிறுவனங்களுக்கு, உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஐ.ஐ.டி., மற்றும் இன்போசிஸ் பவுண்டேஷன் ஆகியவை, வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வராது என்ப தால், தங்கள் நிறுவனம், வரவு - செலவு கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என, பதில் அளித்துள்ளன.
No comments:
Post a Comment