Sunday, April 29, 2018

கொலை வழக்கில் அப்பாவி கைது போலீசார் சம்பளத்தில் இழப்பீடு நீதிபதி உத்தரவு

Added : ஏப் 28, 2018 23:18 

  மதுரை, கொலை வழக்கில் அப்பாவியை கைது செய்ததால்அவருக்கு போலீசார் 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.மதுரை விரகனுார் அருகே ஒரு நிறுவனத்தில் டிரைவர்சந்திரசேகரன், கிளீனர்சந்தானகிருஷ்ணன் வேலை செய்தனர். சந்தானகிருஷ்ணனை 2009 ல் கொலை செய்ததாக சந்திரசேகரன் மீது திருநகர் போலீசார் வழக்குப் பதிந்தனர்.மதுரை4 வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சி.சஞ்சய்பாபா உத்தரவு: வழக்கில்,உண்மைக்குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் நோக்கில் போலீசார்செயல்பட்டுள்ளனர். முறையாக விசாரிக்கவில்லை. சந்திரசேகரன் ஒரு அப்பாவி. அவர் மீதான குற்றச்சாட்டைநிரூபிக்கவில்லை. அவரை விடுதலைசெய்கிறேன். அவரை தேவையின்றி இவ்வழக்கில் சேர்த்து, போலீசார் அலையவிட்டுள்ளனர். அவருக்கு போலீஸ் தரப்பில் 1லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர்களில் குலாம், பணி ஓய்வு பெற்று விட்டார்.இன்ஸ்பெக்டர்கள் தங்கவேல், குருவெங்கட்ராஜ் சம்பளத்திலும், குலாம் ஓய்வூதியத்திலும் 1 லட்சம் ரூபாயை டி.ஜி.பி., பிடித்தம்செய்ய வேண்டும். தங்கவேல், குருவெங்கட்ராஜ் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், என உத்தரவிட்டார்.

Advertisement

No comments:

Post a Comment

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...