Sunday, April 29, 2018

டாக்டர் சிவகுருநாதன் மீது மருத்துவ கவுன்சில் நடவடிக்கை

Added : ஏப் 29, 2018 01:15 | 

  சென்னை, ''டாக்டர் சிவகுருநாதன் மீது, போலீசார் தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகை அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழக மருத்துவ கவுன்சில் தலைவர், செந்தில் கூறினார்.திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மயிலாப்பூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அங்கு, அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், ரூதர்புரத்தில் உள்ள, ஆர்.எம்.கிளீனிக்கிற்கு சென்றுள்ளார்.அங்கு, டாக்டர் சிவகுருநாதன், அந்த பெண்ணை பரிசோதிக்கும் போது, அலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார்.புகாரின் படி, நேற்று அவரை கைது செய்த மயிலாப்பூர் போலீசார், அலை பேசியை பறிமுதல் செய்தனர். அதில், பல பெண்களை, அவர் ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்திருப்பது தெரியவந்தது.இந்நிலையில், சிவகுருநாதன் சம்பந்தமான ஆவணங்களை, தமிழக மருத்துவ கவுன்சிலிடம், போலீசார் நாளை தாக்கல் செய்ய உள்ளனர்.தமிழக மருத்துவ கவுன்சில் தலைவர் செந்தில் கூறியதாவது:டாக்டர் சிவகுருநாதன் மீது, போலீசார் தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும்.எம்.டி., படித்துள்ள சிவகுருநாதனிடம், விளக்கம் கோரப்பட்டு, அதன்படி மருத்துவம் பார்க்க, ஓராண்டு தடை அல்லது ஆயுள் தடை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கூறினார்.

No comments:

Post a Comment

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...