Monday, April 30, 2018

சித்ரா பவுர்ணமி கிரிவலம் : தி.மலையில் திரண்ட பக்தர்கள்

Added : ஏப் 30, 2018 02:27

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணா மலையில் நேற்று, லட்சக்கணக்கான பக்தர்கள், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்தனர்.சித்ரா பவுர்ணமி திதி நேற்று காலை, 6:58 மணிக்கு துவங்கி, இன்று காலை, 7:57 வரை உள்ளது. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணி முதலே, பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று காலை, கட்டுக்கடங் காத கூட்ட நெரிசலில், பக்தர் கள் கிரிவலம் சென்றனர்.மெல்ல ஓடினர்காலை, 9:00 மணிக்கு மேல், வெயில் கொளுத்திய நிலையில், பாதங்களை கீழே வைக்க முடியாமல், மெல்ல ஓடியவாறே பக்தர்கள் கிரிவலம் சென்றனர். வெயிலின் தாக்கத்தை தணிக்க, சாலைகளில், லாரி மூலம், தண்ணீர் ஊற்றியவாறே இருந்தனர். கிரிவலப்பாதை முழுவதும் அன்னதானம், நீர் மோர் வழங்கப்பட்டது.பக்தர்கள் வசதிக்காக, 2,825 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கோவில் வெளிப்புறத்தில், பக்தர்கள் அதிகமாக கூடும் இடங்களில், ஷாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.கோவிலில், ஐந்து முதல், ஆறு மணி நேரம் வரை, பக்தர்கள் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை, 4:00 முதல் இன்று இரவு, 11:00 மணி வரை, நடை திறந்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தீர்த்தவாரிஅருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும், சித்திரை மாதம் வளர்பிறையில், வசந்த உற்சவ விழா கொண்டாடப்படுகிறது. 19ம் தேதி, பந்தக்கால் முகூர்த்தத்துடன் விழா துவங்கியது. தினமும் சுவாமிகளுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.நேற்று, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், அய்யங்குளக்கரையில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின், சூல வடிவிலான சுவாமி தீர்த்தவாரி நடந்தது. நள்ளிரவு, மன்மத தகன விழா நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...