Sunday, April 29, 2018

தாசில்தார் தேர்வு எழுத கழுதைக்கு, 'ஹால் டிக்கெட்'

Added : ஏப் 28, 2018 19:18 |

  ஸ்ரீநகர், : ஜம்மு - காஷ்மீரில், தாசில்தார் தேர்வில் பங்கேற்கும்படி, கழுதைக்கு, 'ஹால் டிக்கெட்' அனுப்பிய வினோத சம்பவம், மீண்டும் நடந்துள்ளது.ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயகக் கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, இன்று, தாசில்தார் பதவிகளுக்கான தேர்வு நடக்க உள்ளது. இத்தேர்வை, ஜம்மு - காஷ்மீர் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.இந்நிலையில், இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டு கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில், கச்சுர் கார் என்ற பெயரில், கழுதையின் படம் பதியப்பட்டு, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ஹால் டிக்கெட், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து, மாநில அரசு பணிகள் தேர்வாணைய அதிகாரிகளிடம் கேட்ட போது, பதிலளிக்க மறுத்து விட்டனர்.மாநில அரசின் தேர்வாணைய இணையதளத்துக்குள் புகுந்து, கழுதையின் படத்தை யாராவது பதிவு செய்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Empty chairs greet min on surprise visit to taluk office

Empty chairs greet min on surprise visit to taluk office  TIMES NEWS NETWORK 27.12.2024 Bengaluru : A surprise  visit by revenue minister Kr...