Saturday, April 28, 2018

என் இஷ்டப்படி தான் நீங்க நடக்கணும்’ - நர்சிங் மாணவிகளுக்கு நேர்ந்த கொடுமை... 

நவீன் இளங்கோவன்

ரமேஷ் கந்தசாமி


Erode:

ஈரோட்டில் தனியார் நர்சிங் பயிற்சி நிறுவனம் ஒன்றில் படிக்கும் மாணவிகள், அந்தக் கல்லூரி முதல்வர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களைக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு காந்தி ஜி ரோட்டில் ‘அமானுல்லா ஸ்கூல் ஆஃப் நர்சிங்’ என்ற தனியார் நர்சிங் பயிற்சி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் திருவாரூர், பரமக்குடி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 30 மாணவிகள் நர்சிங் பட்டயப் படித்து வருகின்றனர்.



இதில், மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகளை 6 மாதம் படிப்பு, 6 மாதம் ஏதாவதொரு தனியார் மருத்துவமனைகளில் பயிற்சிக்கு என அனுப்புவது வழக்கம். அந்தவகையில், மூன்றாம் ஆண்டு படிக்கும் 7 மாணவிகளை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நர்சிங் பயிற்சிக்காக அனுப்பியிருக்கின்றனர். பயிற்சியில் ஈடுபடும் மாணவிகளுக்கு தனியார் மருத்துவமனை கொடுக்கும் சம்பளத்தில் பாதியை, நர்சிங் பயிற்சி நிறுவனம் எடுத்துக்கொண்டு மீதத்தை மாணவிகளுக்கு வழங்குவதாக சொல்லியிருக்கின்றனர்.



அப்படியிருக்க, கடந்த 2017 -அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை பயிற்சியில் உள்ள மாணவிகள் யாருக்குமே நர்சிங் பயிற்சி நிறுவனம் சம்பளத்தை கொடுக்கவில்லையாம். இதுகுறித்து பலமுறை மாணவிகள், பயிற்சி நிறுவன முதல்வரிடம் கேட்கையில், பல்வேறு காரணங்களைச் சொல்லி மிரட்டியிருக்கிறார்



இதுகுறித்து பாதிக்கப்பட்ட நூர்ஜகான் என்ற மாணவி கூறுகையில், “கடந்த 6 மாதங்களாக தனியார் மருத்துவமனையில் பயிற்சி செய்து வருகிறோம். ஆனால், இதுவரை எங்களுக்கு சம்பளம் முறையாக தரப்படவில்லை. வருகைப்பதிவு குறைந்ததால் அதற்காக சம்பளத்தை பிடித்துக் கொண்டோம் என பதில் சொல்கிறார்கள். ஜூலை மாதத்தோடு எங்களுடைய படிப்பு முடிகிறது. ஆனால், படிப்பு முடிந்தாலும் அடுத்த 6 மாதத்திற்கு பயிற்சியை தொடர வேண்டும் என பயிற்சி நிறுவன முதல்வர் கட்டாயப்படுத்துகிறார். ஏதாவது எதிர்த்துக் கேள்வி கேட்டால், ‘எங்க இஷ்டப்படி தான் நீங்க நடக்கணும். இல்லாட்டி நீங்க பரீட்சை எழுத முடியாது’ன்னு மிரட்டுறாங்க. பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் பத்மப்ரியா அவர்கள், மாணவிகளை கை, கால்களை அமுக்கச் சொல்லி தொந்தரவு செய்வதும், வகுப்பு நேரங்களில் வகுப்பறையிலேயே படித்துத் தூங்குவதுமாக செயல்களில் ஈடுபட்டு வருகிறார்”என்று குற்றம் சாட்டினார்.

No comments:

Post a Comment

Empty chairs greet min on surprise visit to taluk office

Empty chairs greet min on surprise visit to taluk office  TIMES NEWS NETWORK 27.12.2024 Bengaluru : A surprise  visit by revenue minister Kr...