Monday, April 30, 2018

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவியின் கழுத்தை பிளேடால் அறுத்த இளைஞர்

By DIN  |   Published on : 30th April 2018 12:20 PM  |

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பிளேடால் கழுத்து அறுபட்ட நிலையில் படுகாயத்துடன் மருத்துவமனையில் மாணவி லாவண்யா அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி படித்து வந்த பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு மாணவி லாவண்யா, இன்று காலை விடுதியில் இருந்து கல்லூரிக்குச் செல்லும் போது, நவீன்குமார் என்ற இளைஞர் அவரிடம் பேச முற்பட்டுள்ளார். லாவண்யா அவரிடம் பேச மறுத்ததால் ஆத்திரத்தில் தனது கையில் வைத்திருந்த பிளேடால் லாவண்யாவின் கழுத்தை அறுக்க முற்பட்டுள்ளார்.
இதை அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட பொதுமக்கள் பார்த்து உடனடியாக நவீன்குமாரை தாக்கினர். இதில் லாவண்யாவின் கழுத்தை பாதி அறுத்த நிலையில் நவீன் குமாரின் பிடியில் இருந்து மாணவி மீட்கப்பட்டார்.
பொதுமக்கள் உடனடியாக லாவண்யாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நவீன்குமாரை பொதுமக்கள் கடுமையாக தாக்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், நவீன் குமாரையும் கைது செய்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
பொதுமக்களின் சாமர்த்தியத்தால், மாணவி நூலிழையில் உயிர் தப்பியுள்ளார் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். 

No comments:

Post a Comment

பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு 12.04.2025 மதுரை: பழிவாங்கும் ...