Thursday, May 17, 2018

மாநில செய்திகள்

தொழிற்பயிற்சிக்காக வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் 99 தமிழக மாணவர்களுக்கு பாஸ்போர்ட், விசா, பயணச்சீட்டு




தொழிற்பயிற்சிக்காக வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த 99 மாணவர்களுக்கு பாஸ்போர்ட், விசா, பயணச்சீட்டு ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

மே 17, 2018, 05:31 AM
சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 23.8.2016 அன்று சட்டசபையில் 110-ம் விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், தனியார் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் திறன் மேம்படும் வகையில் வெளிநாட்டில் உள்ள கல்லூரிகளில் குறுகிய காலப் பயிற்சி பெற அந்த கல்லூரிகள் வகை செய்கின்றன.

அதைப்போன்று, அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைத்திடும் வகையில், அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் 15 நாட்கள் தொழில்நுட்ப பயிற்சி பெறும்வகையில், வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் 15 நாட்கள் தொழிற்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு, தங்கள் அறிவுத் திறனை உலகளவில் மேம்படுத்துவதற்கும், சர்வதேச அளவில் தொழில்நுட்ப கல்வியில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியை அறியவும், அவர்களின் ஆய்வு திறனை வளர்க்கவும் வழிவகை ஏற்படும்.

இத்திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தும் விதமாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 10 அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் சிறந்து விளங்கும் 50 பேர்களும், அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் சிறந்து விளங்கும் 49 பேரும், என மொத்தம் 99 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் 15 நாட்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தொழிற்பயிற்சி பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இத்திட்டத்தின் கீழ், 2017-18-ம் கல்வி ஆண்டில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் அறிவியல், மெட்டலார்ஜி, புரடக்‌ஷன் டெக்னாலஜி அண்டு இன்பர்மேஷன் தொழில்நுட்பம் ஆகிய பொறியியல் பாடப்பிரிவுகளைச் சார்ந்த 61 மாணவர்கள் ஆஸ்திரேலியாவின், மெல்போர்னில் உள்ள ஸ்வைன்பர்ன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 19.5.2018 முதல் 2.6.2018 வரை தொழிற்பயிற்சி வகுப்பில் இரு பேராசிரியர்களின் வழிகாட்டுதலுடன் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

சிவில் மற்றும் பி.டெக். பாடப் பிரிவுகளைச் சேர்ந்த 14 மாணவர்கள் ஜெர்மனி நாட்டில் உள்ள லெய்ப்னிஸ் பல்கலைக்கழகத்தில் 18.6.2018 முதல் 2.7.2018 வரை தொழிற்பயிற்சி வகுப்பில் ஒரு பேராசிரியரின் வழிகாட்டுதலுடன் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமெண்டேசன் தொழில்நுட்பம் ஆகிய பொறியியல் பாடப்பிரிவுகளைச் சார்ந்த 24 மாணவர்கள் ஜப்பான் நாட்டில் உள்ள யோகோகாமா தேசிய பல்கலைக்கழகத்தில் 18.6.2018 முதல் 2.7.2018 வரை தொழிற்பயிற்சி வகுப்பில் இரு பேராசிரியர்களின் வழிகாட்டுதலுடன் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 99 மாணவர்கள், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு தொழிற்பயிற்சி பெறுவதற்காக செல்வதற்கு முன்பு, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு பாஸ்போர்ட், விசா மற்றும் பயணச்சீட்டுகளை வழங்கிடும் அடையாளமாக 7 மாணவ, மாணவிகளுக்கு அவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, May 16, 2018

சென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா?!
ரஞ்சித் ரூஸோ

vikatan   16.05.2018

கேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள முக்கியமான மலையக மாவட்டமான வயநாடு, 34 டிகிரி அக்னி வெயில் கொளுத்தும் சென்னையில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ளது. ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை எப்போது சென்றாலும் இதன் செழிப்பைப் பார்க்கலாம், மேகக் கூட்டங்களோடு கைக்குலுக்கலாம், ஏலக்காய் முதல் ஏத்தம்பழம் வரை சுவைக்கலாம், அருவியில் குளிக்கலாம்... என்ஜாய் பண்ணலாம்.



உங்கள் வயநாடு ட்ரிப்பை முழுவதுமாக அனுபவிக்கச் சென்னையில் இருந்து பைக் ரைடு போவது சிறப்பானது. `எவ்வளவோ ரூட் இருக்கப்போ, நான் ஏன்டா பெங்களூர் வழியா பைக்ல போகணும்...' என விடிவி கணேஷ் குரலில் கேட்பது கேட்கிறது. காரணத்தை நீங்கள் ரைடு போனால்தான் உணர முடியும். ஒரு சின்ன பேக்பேக்கை எடுத்து அதில் 2 நாளுக்குத் தேவையானவற்றை மடித்துவைத்துக்கொண்டு கிளம்புங்கள். எந்த பைக்கில் வேண்டுமென்றாலும் ரைடு போகலாம். 200 cc-க்கு மேல் உள்ள பைக்கை தேர்ந்தெடுத்தால் ரைடு இன்னும் சிறப்பானதாக இருக்கும். ரைடிங் ஜேக்கட், பூட்ஸ், கிளவுஸ் அணிவது பாதுகாப்புக்கு மட்டுமல்ல பைக் ரைடில் களைப்பைக் குறைக்கும். நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் போவதால் DOT, ECE சான்றிதழ் ஹெல்மெட் பாதுகாப்பானது. மேற்சொன்ன விஷயங்கள் மிக முக்கியமானவை.



கூகுள் மேப் பேச்சை கேட்காதீர்கள். சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலை வழியாக வேலூர், ஆம்பூரை கடந்து பெங்களூருக்குள் நுழைந்த உடன் எலக்ட்ரானிக் சிட்டி பாலத்தின் மீது ஏறாமல் கீழே சென்றால் கனக்புரா சாலை வரும். அதன் வழியே கனக்புராவை கடந்து மைசூர் நைஸ் ரோடு வழியாகப் போகலாம். மைசூர் நைஸ் ரோடு எக்ஸ்பிரஸ்வேயில் பைக்கின் வேகத்தை அனுபவிக்கலாம். ஆனால், 100 முதல் 120 கி.மீ வேகத்தில் போவது நல்லது. அதற்கு மேல் போனால் இன்ஜின் அதிகமாகச் சூடாகும். பைக்கை அவ்வப்போது நிறுத்தவேண்டியிருக்கும். மாலை 3 மணிக்கு கிளம்பினால், 8 மணிக்கெல்லாம் பெங்களூரை அடைந்துவிடலாம். விடியற்காலையில் பெங்களூரில் இருந்து கிளம்பினால் பயணத்துக்கு சரியாக இருக்கும்.



கனக்புராவைத் தாண்டி அதே சாலையில் மாண்டியா வரை செல்லாமல் மத்துரு, மலவள்ளி, சாமராஜநகர் வழியாகப் பயணித்தால் பெட்ரோல் கொஞ்சம் மிச்சம்பிடிக்க முடியும். மலவள்ளியைத் தாண்டிவிட்டால் சாலை, விவசாய நிலங்கள், கிராமங்கள், மலைக் குன்றுகள், காவல் தெய்வங்கள் தவிர எதுவுமே இருக்காது. இன்னும் கமர்ஸியல் ஆக்கப்படாத இடங்கள் இவை. சில இடங்களில் அவ்வப்போது நின்று இளைப்பாறுவது நல்லது. பெங்களூரில் இருந்து இந்த வழியாக பயணித்தால் 5 முதல் 6 மணிநேரத்தில் பந்திபூரை அடைந்துவிடுவோம். புலி மற்றும் சிறுத்தைகள் வாழும்காடு பந்திபூர். அடர்த்தியாக மரங்கள் இருக்காது. பாதை வளைந்து நெளிந்து பாம்புகள் போல போகும். வளைவான பாதைகள் நெய் ஊற்றிச் செய்த லட்டுபோல. அனுபவித்துக்கொண்டே இருக்கலாம். லட்டில் திராட்சை வருவதுபோல, ஸ்பீடு பிரேக்கரும் இங்கு அதிகம். சில கிலோமீட்டர்களுக்கு ஒரு ஸ்பீடு பிரேக்கர் வரும் பொறுத்துக்கொள்ள வேண்டும்.



போகும் வழியில் மான்கள், புலித்தடங்கள், காட்டு யானை போன்றவற்றை பார்க்கலாம். பார்த்தால் இன்னும் த்ரில் கூடிவிடும். பந்திபூரை தாண்டியதும் முத்தங்கா வன உயிர்க் காப்பகம் உள்ளது. இதில் பாதுகாப்புடன் வனத்தில் சுற்றிவரலாம். வனத்துறையினர் ஏற்பாட்டில் யானைச் சவாரிகூட இங்கு உண்டு. முத்தங்காவை அடுத்து 30 நிமிட பயணத்தில் வயநாடு வந்துவிடும். சுல்தான் பத்தேரி, வயநாடு இரண்டு இடங்களிலும் தங்குவதற்கான வசதிகள் உண்டு. வயநாடு பாதை பல கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. வளைந்து வளைந்து பயணிப்பது செம த்ரில்லிங்காக இருக்கும்.



வயநாடு வருவதற்கு மாண்டியா, ஹன்சூர் வழியாக இன்னொரு பாதையும் உள்ளது. நம் பாதையைவிட அந்தப் பாதையின் தூரம் குறைவு. ஆனால், முழுவதும் நெடுஞ்சாலையில் மட்டுமே பயணிக்க வேண்டும். கர்நாடகாவின் செழுமையைப் பார்க்க குறைவான வாய்ப்புகளே இருக்கும். மோட்டல்கள் அதிகம் என்பதால் பொதுவான உணவுகளே இருக்கும் கர்நாடக கிராமங்களின் உணவுகளை ருசிக்கமுடியாது.



(நாகர்ஹோலே வழியாக வயநாடு போகும் பாதை)






மைசூருக்கு போகும் ஆசை இருந்தால் இந்தப் பாதை வழியாக போகலாம். இந்த வழியில் நாகர்ஹோலே தேசிய பூங்கா உள்ளது. இது பந்திபூர் போல் வளைந்து நெளிந்து போகும் பாதை அல்ல. அடர்த்தியான காடு, அமைதியான நேர் பாதை. இந்தப் பாதையில் பந்திபூரைவிட வாகனங்கள் குறைவு என்பதால் கார் டிரைவிங் அருமையாக இருக்கும். வயநாடை பார்த்துவிட்டு இன்னும் இரண்டு நாள் லீவ் எடுப்போம் என்று முடிவெடுத்துவிட்டால், இங்கிருந்து 100 கி.மீ தொலைவில் கோழிக்கோடு கடற்கரை உள்ளது. 60 கி.மீ தொலைவில் மசினகுடி உள்ளது. அருகிலேயே தெங்குமரஹடா காடு உள்ளது. தெங்குமரஹடாவுக்கு போக வனத்துறை அதிகாரிகளின் ஒப்புதல் வேண்டும். பந்திபூர், நாகர்ஹோலே இரண்டு காடுகளுக்குள்ளும் இரவு 10 மணிக்குமேல் அனுமதி கிடையாது. அதனால், அதற்கேற்ப பயணத்தை திட்டமிட்டால் சரியான நேரத்தில் வயநாடு அடையலாம்.

‘It May Be Morally Wrong To Glorify The Corrupt, But Cannot Interfere’: Madras HC Rejects DMK MLA’s Plea To Remove Jayalalithaa Portrait From TN Assembly [Read Order] | Live Law

‘It May Be Morally Wrong To Glorify The Corrupt, But Cannot Interfere’: Madras HC Rejects DMK MLA’s Plea To Remove Jayalalithaa Portrait From TN Assembly [Read Order] | Live Law: The bar on appointment to a responsible position possibly cannot be stretched to be a bar on display of the photograph of a former Chief Minister charged with a serious offence, the Court said. The Madras High Court has dismissed a plea seeking removal of the portrait of Late J. Jayalalithaa from the precincts of …

`நான் எக்ஸாம் எழுதின பேனாகூட வேற ஒருத்தருது!' -

வறுமையிலும் 1060 எடுத்த திவ்யா

``நான் எக்ஸாம் எழுதின பேனாகூட வேற ஒருத்தருது!  வறுமையிலும் 1060 எடுத்த திவ்யா
ள்ளிச் சீருடை, புத்தகம் எடுத்துச் செல்லத் தேவையான பை, பரீட்சைக்கான பேனா...  இப்படி எதுவுமே இல்லையென்றாலும் நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த பிளஸ்டூ மாணவி திவ்யா.

படித்தது அரசுப் பள்ளி, எடுத்தது 1060 மார்க்... ``எதையாவது சாதிக்கணும்னு மட்டும்தான்கா என் மனசுல ஓடிட்டு இருந்தது. இப்ப செஞ்சுட்டேன் நினைக்கிறேன். ஆனா அடுத்தது...'' என்கிறவருக்கு தொண்டை அடைக்கிறது. 

``ஒரு நாளைல மூணு வேள நல்ல சாப்பாடு கெடைச்சா அதை நாங்க கடவுள் கொடுத்த வரம்னு நினைச்சுப்போம்கா. இந்தச் சூழலுக்கு கடவுளை குத்தம் சொல்ல முடியாது. எங்க அப்பா அம்மாவோட அறியாமைதான் காரணம். வீட்ல என்னையும் சேர்த்து ஆறு பொண்ணுங்க, ஒரு பையன். இத்தனை பேருக்கும் சாப்பாடு போடுறதுக்கு அவங்க எவ்வளவு கஷ்டப்படணும்னு நினைச்சுப் பாருங்க. அப்பாவுக்குக் கூலி வேலை.  அவருக்கு எல்லா நாளும் வேலை இருக்கும்னு எல்லாம் சொல்ல முடியாது. பொழுது விடிஞ்சா அன்னைக்கு என்ன வேலை, யார் கொடுப்பாங்னு அப்பாவும் அம்மாவும் காத்திருப்பாங்க. அம்மா எங்களுக்காக 18 மணி நேரமெல்லாம் வேலை செய்ஞ்சிருக்காங்க.

இதெல்லாம் தாண்டி எங்களையெல்லாம் படிக்க வைக்கணும்ங்கிறதெல்லாம் நெனைச்சே பார்க்க முடியாத விஷயம். நான் கவர்ன்மென்ட் ஸ்கூல்லதான் படிக்குறேன். அதுக்குக் காரணம் எங்கம்மா. நானும் வறுமையில படிக்காம போயிடக் கூடாதுனு என்னை கவர்ன்மென்டு ஸ்கூல்ல படிக்க வெக்கிறாங்க. பத்தாம் வகுப்புல நல்ல மார்க் எடுத்தேன். அதுக்குப் பிறகு `நானும் பாத்திரம் தேய்க்க வரட்டுமா'னு அம்மாகிட்ட கேட்டேன். `என் நிலைமை உனக்கு வரக் கூடாது'னு அம்மா சொன்னதால மறுபடியும் படிக்கப் போனேன். ஆனாலும் மனசு கேட்கலைக்கா. அம்மாவுக்கு உதவி செய்றதுக்காக எங்க தெருவுல உள்ள சில வீடுங்களுக்கு நானும் பாத்திரம் தேய்க்க, வீடு கூட்ட போயிட்டு இருக்கேன். 

அதுல கிடைக்கிற பணத்தை வெச்சு என் தம்பி, தங்கச்சிங்களுக்குத் தேவையான அடிப்படை பொருள்களை வாங்கிக் கொடுக்கிறேன். சில நேரம் வீட்டு வேலையெல்லாம் முடிச்சு ஸ்கூலுக்குப் போக லேட் ஆயிரும். அப்படி லேட்டா போறப்ப கிளாசுக்கு வெளிய நிக்க வெச்சிருவாங்க. என்ன பண்றது என் கஷ்டம் அவங்களுக்கு தெரியாதில்லையா... சகிச்சுப்பேன். வெளிய நின்னபடியே பாடத்த கவனிப்பேன். இதுவரைக்கும் டியூசன் பக்கமெல்லாம் எட்டிப் பார்த்ததில்லைக்கா. பாத்திரம் தேய்க்கிற வேலை முடிச்சுட்டு வீட்டுக்குப் போக ஏழு மணி ஆகிடும். அதுகப்புறம் உக்காந்து பத்து மணி வரைக்கும் படிப்பேன். நாங்க இருக்கிறது ஒரே ஒரு ரூமு. அதுல ரொம்ப நேரம் படிச்சா மத்தவங்க தூங்க முடியாதில்லையா... அதனால சீக்கிரம் தூங்கிடுவேன். 

போன வருஷம் வெள்ளம் வந்தப்ப எங்களோட ஒத்த ரூமுல இருந்த அத்தனை பொருளும் தண்ணியில அடிச்சுட்டுப் போயிருச்சு. புத்தகமெல்லாம் நனைஞ்சு போயிருச்சு. நடுத்தெருவுல நின்னோம். தெரிஞ்சவங்ககிட்ட எல்லாம் போய் உதவி கேட்டேன். அவங்க செஞ்ச உதவியினாலதான் படிக்கவே முடிஞ்சது. அதையெல்லாம் நினைச்சா கண்ணீரை அடக்க முடியலக்கா. கடவுள் எங்களுக்கு கஷ்டத்தைக் கொடுத்தார்... ஆனா அதோட சேர்த்து எனக்கு மனபலத்தையும் கொடுத்தார்னு நம்புறேன். சொன்னா நம்ப மாட்டீங்கக்கா... இந்த வருஷம் நான் பரீட்சை எழுதின பேனாகூட வேற ஒருத்தர் கொடுத்ததுதான். இப்ப அதை என் தம்பி தங்கச்சிங்க பரீட்சை எழுத கொடுத்திருக்கேன்.

பேனாவுக்கே நான் மத்தங்களை எதிர்பார்க்குற நிலைமையில காலேஜ் எல்லாம் எனக்குக் கனவா தெரியுது. அழுகையா வருதுக்கா'' என்ற திவ்யா அழ ஆரம்பித்துவிட்டாள். 

கர்நாடகாவில் யார் ஆட்சி... என்ன செய்யப்போகிறார் ஆளுநர்? சட்டத்தின் பார்வையும்... அரசியல் பார்வையும்....!

கர்நாடகாவில் யார் ஆட்சி... என்ன செய்யப்போகிறார் ஆளுநர்? சட்டத்தின் பார்வையும்... அரசியல் பார்வையும்....!
`காங்கிரஸ் இல்லாத இந்தியா அமைப்போம்' எனச்சொல்லி வரும் பாரதிய ஜனதா கட்சியால், தென்னிந்தியாவில் நுழைவதற்கு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட வாயிலாகப் பார்க்கப்பட்டது கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல். அதேபோல் தொடர் தோல்விகளிலிருந்து மீண்டு, தன் கைவசம் இருக்கும் 4 மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவை தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்தது காங்கிரஸ்.

இப்படி பெரும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து, முடிவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 104 தொகுதிகளில் வென்றிருக்கிறது பி.ஜே.பி. ஆனாலும் தனிப் பெரும்பான்மையை நிரூபிக்க பி.ஜே.பி.க்கு இன்னும் 9 எம்.எல்.ஏ-க்கள் தேவை. காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வென்றிருக்கிறது. எதிர்பாராத திருப்பமாக காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் சேர்ந்திருக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி முதல்வராக ஆதரவு கொடுத்திருக்கிறது காங்கிரஸ்.

104 தொகுதிகளை வென்ற பி.ஜே.பி. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அதேபோல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 78 பேரின் ஆதரவோடு 115 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளதாகக் கூறி, மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவர் குமாரசாமியும் ஆட்சி அமைக்க அழைக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்தச்  சூழலில் ஆளுநர் யாரை அழைக்கப்போகிறார் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அடிப்படையில் பெரும்பான்மை எம்.எல்.ஏ- க்கள் ஆதரவு பெற்றுள்ள குமாரசாமியை ஆட்சி அமைக்க அழைப்பாரா அல்லது தனிப்பெரும் கட்சியாக 104 எம்.எல்.ஏ. ஆதரவு கொண்ட பி.ஜே.பி. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைப்பாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. 

``குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ள நிலையில், அந்தக் கூட்டணியை ஆட்சியமைக்க ஆளுநர் வாய்ப்பளிக்க வேண்டும்," என காங்கிரஸ் தரப்பும், தனிப் பெரும் கட்சி என்ற அடிப்படையில் பி.ஜே.பி.யை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டுமென பி.ஜே.பி. தரப்பும் வேண்டுகோள் விடுத்துள்ளது. 
இந்நிலையில், எடியூரப்பாவை சட்டமன்ற கட்சித் தலைவராக பி.ஜே.பி. எம்.எல்.ஏ-க்கள் தேர்வு செய்துள்ளனர். அவர் மீண்டும் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ள நிலையில், எடியூரப்பாவை ஆளுநர் வாஜுபாய் வாலா ஆட்சியமைக்க அழைப்பார் என்றும், பெரும்பான்மையை நிரூபிக்க ஒருவார கால அவகாசம் அளிக்கக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது. இது சட்டத்துக்குப் புறம்பானது, குதிரைப் பேரத்துக்கு வழிவகுக்கும் என்றும் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
முதலமைச்சரைத் தேர்வு செய்யும் போது ஆளுநர் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து சர்க்காரியா கமிஷன் பரிந்துரை மற்றும் பொம்மை வழக்கு தீர்ப்பு ஆகியவற்றைச் சுட்டிக்கட்டும் அரசியல் நோக்கர்கள், அதை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்கிறார்கள்.

``சட்டமன்றத்தில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மையான பலம் இல்லாத சூழலில், தேர்தலுக்கு முன்பாக கூட்டணி அமைத்த கட்சிகளின் சார்பில் முதல்வரைத் தேர்வு செய்ய முன்னுரிமை தர வேண்டும். இரண்டாவதாக மற்றவர்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்க முன்வரும் அதிக இடங்களில் வென்ற கட்சியின் சார்பில் முதல்வரைத் தேர்வு செய்ய வேண்டும். மூன்றாவதாகத் தேர்தலுக்குப் பின் கூட்டணியில் சேர்ந்த கட்சிகளின் சார்பில் அனைவரும் ஆட்சியில் பங்கேற்கும் நிலையில் முதல்வரை நியமிக்க வேண்டும். இப்படி முன்னுரிமை வரிசையில் முதல்வரைத் தேர்வு செய்யும் போதே யாரால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்பதையும் தீர்மானிக்கும் சக்தியுடையவராக ஆளுநர் இருக்க வேண்டும்," எனப் பரிந்துரைக்கிறது சர்க்காரியா கமிஷன்.

அதன்படி தற்போதைய சூழலில் 104 எம்.எல்.ஏ-க்கள் கொண்ட பி.ஜே.பி.யை வேறு கட்சிகள் ஆதரிக்கவில்லை. இந்தச் சூழலில் அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும் நிலையில், அந்த ஆட்சி நிலையாக இருக்குமா என்பதை ஆளுநர் தன்னளவில் திருப்தியடைய வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், யார் ஆதரவும் இல்லாமல் 104 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட பி.ஜே.பி.யை ஆட்சியமைக்க அழைப்பது என்பது, மற்ற கட்சிகளை உடைக்கவும், நேரடியான குதிரை பேரத்துக்கும் வழிவகுக்கும். பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் ஆதரவில்லாத ஒருவரை ஆட்சியமைக்க அழைப்பது என்பது பெரும் சர்ச்சைகளுக்கே முன்வைக்கும்.
இந்தச் சூழலில் ஆளுநர் எடுக்கும் முடிவு என்பது மிக முக்கியமான ஒன்று. இந்த விவகாரத்தை அரசியல் பார்வையோடு அணுகாமல், சட்டத்தின் பார்வையில் அணுக வேண்டியது மிக அவசியம். ஒருவேளை பி.ஜே.பி.யை ஆட்சியமைக்க அழைத்தால், தங்களுக்குத் தேவையான 9 எம்.எல்.ஏ-க்களை வேறு கட்சியிலிருந்து இழுக்க பி.ஜே.பி. முற்படும். இது கட்சித்தாவல் மற்றும் நேரடி குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும். எந்தக் கட்சியும் பி.ஜே.பி.க்கு ஆதரவளிக்கவில்லை. கட்சியை உடைப்பதை தவிர வேறு எந்த வாய்ப்பும் பி.ஜே.பி.க்கு இல்லை. 

கர்நாடகாவில் தற்போது குதிரைப் பேரம் தொடங்கியிருப்பதை தற்போதைய சூழல் உறுதிப்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ-க்கள் தங்களை ஆதரிப்பார்கள் என வெளிப்படையாகவே பேசத்தொடங்கியிருக்கிறார்கள் பி.ஜே.பி. நிர்வாகிகள். இதேபோல் இருதரப்பிலும் பேச்சுகள் எழுந்திருக்கின்றன.

`கர்நாடகாவில் பி.ஜே.பி. ஆட்சிதான் அமையும். எடியூரப்பாவையே ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பார்' என்ற பேச்சும் பரவலாக எழுகிறது. சட்டத்தின் பார்வையை விட அரசியல் பார்வையோடுதான் ஆளுநர் அணுகுவார் என்ற பேச்சும் பரவலாக எழுந்துள்ளது. சில மாதங்களில் நடக்கும் 3 மாநில சட்டமன்றத் தேர்தல், அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றுக்கு கர்நாடகா தேர்தல் வெற்றி என்பது பி.ஜே.பி.க்கு அவசியம் என்பதால், பி.ஜே.பி.க்கு ஆதரவான முடிவையே ஆளுநர் எடுப்பார் என்ற பேச்சு பரவலாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

`பி.ஜே.பி. ஆட்சிக்கு வராமல் தடுக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம்' என்ற முடிவுடன் குமாரசாமிக்கு ஆதரவளித்திருக்கிறது காங்கிரஸ். `எப்படியேனும் தென்னகத்தில் மீண்டும் கால்பதிக்க வேண்டும்' என்ற முடிவுடன் தீவிரம் காட்டுகிறது பி.ஜே.பி. கர்நாடகாவில் யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள். ஆளுநர் கையில் இருக்கிறது முடிவு.

உங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்! - அதிர்ச்சி ரிப்போர்ட் 

உங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்!  அதிர்ச்சி ரிப்போர்ட் 
உங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார் என்று சொன்னால் நம்ப முடியுமா. ஆனால், அதுதான் உண்மை என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 
செல்போன் இல்லாதவர்களை இன்று விரல்விட்டு எண்ணிவிடலாம். 24 மணி நேரமும் செல்போன்களோடு பேசிக்கொள்ளுபவர்களாகப் பலர் மாறிவிட்டனர். செல்போன்களால் எந்தளவுக்கு நன்மை இருக்கிறதோ அதே அளவுக்கு ஆபத்தும் அதில் நிறைந்துள்ளது. சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் குடியிருக்கும் டாக்டர் ஹரீஷ் வழக்கை விசாரித்த போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 
 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``டாக்டர் ஹரீஷ் கொடுத்த புகார் மற்றும் மிரட்டல் ஆடியோ அடிப்படையில் விசாரணை நடத்தினோம். டாக்டருக்கு வந்த மிரட்டல் போன் நம்பரை ஆய்வு செய்தோம். அந்த நம்பரின் முகவரி, சென்னை பாரிமுனை என்று தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்று விசாரித்தோம். அந்த நபர், மிரட்டலுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார். இதனால் நாங்கள் குழப்பமடைந்தோம். இதையடுத்து அந்த நபரிடம் விசாரித்தபோது தாம்பரத்தில் சிம் கார்டு வாங்கிய விவரத்தை எங்களிடம் தெரிவித்தார். உடனே தாம்பரத்துக்குச் சென்று விசாரித்தோம்.
 மேலும், சிம்கார்டை விற்ற நபர் தெரிவித்த தகவல் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒவ்வொரு செல்போன் நிறுவனமும் சிம் கார்டுகளை விற்க இலக்கு நிர்ணயிக்கிறது. இதற்காக சிம்கார்டு விற்பவர்கள், சிம்கார்டு வாங்க வருபவர்கள் கொடுக்கும் போட்டோ, முகவரி சான்றிதழ்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாமல் அவரின் பெயரில் சிம் கார்டுகளை விற்றதுபோல கணக்கு காட்டுகின்றனர். தற்போது ஆதார் விவர அடிப்படையில்தான் சிம்கார்டுகள் விநியோகிக்கப்படுகின்றன. இதனால் ஆதார் எண்ணைத் தெரிவித்ததும் கைரேகை பதிவு செய்யப்படுகிறது. அப்போது, சரியாக கைரேகை பதிவாகவில்லை என்றுகூறி ஒன்றுக்கு மேற்பட்ட சிம்கார்டுகளை விற்றதுபோல கணக்கு காட்டப்படுகிறது. இந்த சிம்கார்டுகள்தான் சமூக விரோத கும்பலுக்கு விற்கப்படுகிறது. அப்படிப்பட்ட சிம்கார்டுகளை வாங்கும் நபர்கள், அதைச் சமூக விரோதச் செயல்களுக்குப் பயன்படுத்துகின்றனர்.
 டாக்டரை மிரட்டிய இன்ஜினீயர்கள் முருகனும் பாலாஜியும் இந்த முறையில்தான் சிம்கார்டுகளை வாங்கியுள்ளனர். ஒருவருக்குத் தெரியாமல் அவரின் பெயரில் உள்ள சிம்கார்டை  இன்னொருவர் பயன்படுத்துவது தொடர்ந்தால் அது, பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இதே நிலை நீடித்தால் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர்களைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்படும். தற்போது இந்தவகையில், சென்னையில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் உள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதிலும் ஒருவரின் பெயரில் மட்டும் இரண்டுக்கு மேற்பட்ட சிம்கார்டுகள் உள்ளன. அதுதொடர்பாகச் சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனங்களுக்கு புகார் தெரிவித்துள்ளோம்" என்றனர். 
 இதுகுறித்து செல்போன் நிறுவனங்கள் கூறுகையில், "இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுக்கத்தான் சிம்கார்டு வாங்கியதும் நாங்களே சம்பந்தப்பட்டவர்களிடம் போனில் விசாரணை நடத்துகிறோம். அதன் பிறகுதான் அந்த சிம்கார்டை பயன்படுத்த முடியும். சிம்கார்டு விற்பவர்களின் உதவியில்லாமல் இதுபோன்ற தவறுகள் நடக்கவாய்ப்பில்லை. போலீஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இருப்பினும் அத்தகைய சிம்கார்டுகளைக் கண்டறிவதில் பல சிரமங்கள் உள்ளன" என்றனர். 
 இதுகுறித்து நேஷனல் சைபர் சேஃப்டி அண்டு செக்யூரிட்டி ஸ்டாண்டர்டு என்ற தனியார் நிறுவனத்தின்  பொது இயக்குநர் அமர்பிரசாத் ரெட்டி  கூறுகையில், "ஆதார் எண் அடிப்படையில்தான் சிம்கார்டுகள் கொடுக்கப்படுகின்றன. சிம்கார்டு வாங்கும் நடைமுறையில் அரசு கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஆதார் அடிப்படையில் சிம்கார்டுகளைப் பெறும்போது உங்களின் மொபைல் நம்பருக்கு எஸ்.எம்.எஸ் வரும். ஒன்றுக்கும் மேற்பட்ட எஸ்.எம்.எஸ்-கள் வந்தால் சிம்கார்டு வாங்குபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். சிம்கார்டு விற்பவர்களையும் மத்திய அரசு கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். டிஜிட்டல் இந்தியாவில் இதுபோன்ற தவறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க டிராய் (TRAI) அமைப்பும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு ஆதார் எண்களைப் பயன்படுத்துவோருக்கு அதுதொடர்பான தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்"என்றார். 
Co-pilot sucked halfway out of cockpit is alive
16.05.2018............. DH
SHANGHAI, Reuters: The co-pilot of a Sichuan Airlines flight that was forced to make an emergency landing on Monday was “sucked halfway” out of the plane after a cockpit windshield blew out, media reported, citing the aircraft’s captain.

Liu Chuanjian, hailed a hero on social media after having to land the Airbus A319 manually, told the Chengdu Economic Daily his aircraft had just reached a cruising altitude of 32,000 feet when a deafening sound tore through the cockpit. The cockpit experienced a sudden loss of pressure and drop in temperature and when he looked over, the cockpit’s right windshield was gone.

“There was no warning sign. Suddenly, the windshield just cracked and made a loud bang. The next thing I know, my co-pilot had been sucked halfway out of the window,” he was quoted as saying. “Everything in the cockpit was floating in the air. Most of the equipment malfunctioned ... and I couldn’t hear the radio. The plane was shaking so hard I could not read the gauges.”

The co-pilot, who was wearing a seatbelt, was pulled back in. He suffered scratches and a sprained wrist, the Civil Aviation Administration of China said, adding that one other cabin crew member was also injured in the descent.

Escape for 119 passengers

None of the plane’s 119 passengers was injured. The Civil Aviation Administration of China said France’s BEA accident investigation agency and Airbus would send staff to China to investigate. The flight left Chongqing on Monday and was bound for the Tibetan capital of Lhasa. It had to make an emergency landing in the southwest city of Chengdu.

NEWS TODAY 02.01.2026