Tuesday, June 19, 2018


அண்ணா பல்கலையில் இன்று பட்டமளிப்பு விழா

Added : ஜூன் 19, 2018 00:50

சென்னை: அண்ணா பல்கலையின், 38வது பட்டமளிப்பு விழா, இன்று சென்னையில் நடக்கிறது. இதில், 1.94 லட்சம் பேர் பட்டம் பெறுகின்றனர். அண்ணா பல்கலை, அதன் உறுப்பு கல்லுாரிகள், அரசு இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் சுயநிதி கல்லுாரிகள் என, மொத்தம், 550 கல்லுாரிகள், அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படுகின்றன. இவற்றில், இறுதி ஆண்டு படித்து முடித்த மாணவர்களுக்கு, ஆண்டு தோறும் பட்டமளிப்பு விழா நடத்தப்படுகிறது. இதன்படி, 38வது பட்டமளிப்பு விழா, இன்று சென்னையில், அண்ணா பல்கலை வளாகத்தில் நடக்கிறது. பல்கலையின் வேந்தர், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்; இந்திய அறிவியல் உயர்கல்வி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர், பலராம்; பல்கலையின் துணைவேந்தர் சுரப்பா, உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் உள்ளிட்டோர், விழாவில் பங்கேற்கின்றனர்.பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு முடித்த, 1,304 பேரும், அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரி களில், இறுதியாண்டு தேர்வில், முதல் தரவரிசை பெற்ற, 64 பேரும், நேரில் பட்ட சான்றிதழ் பெறுகின்றனர். மற்றவர்களுக்கு, அந்தந்த கல்லுாரிகளில் பட்டமளிப்பு விழா நடத்தி, சான்றிதழ் தரப்பட உள்ளது. இந்த வகையில், 1.94 லட்சம் பேருக்கு, இந்தபட்டமளிப்பு விழா வாயிலாக, பட்டம் வழங்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
 சென்னை,சேலம்,எட்டு வழிச்சாலை திட்டம்,துவக்கம்


சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த, முறைப்படி அறிவிப்பு வெளியிட்ட அதிகாரிகள் நேற்று பணியை துவக்கினர். இதனால் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் செயல்பட்ட போர்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். நில அளவீட்டு பணியின் போது முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்த பலரை போலீசார் சுற்றிவளைத்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

சென்னை - சேலம் இடையே 277 கி.மீ.,க்கு எட்டு வழிச்சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக சேலம் மாவட்டத்தில் 29 கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்த கடந்த மாதம், விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களுக்கு வருவாய்த்துறை சார்பில் 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. அதன்பின் எட்டு தனி தாசில்தார்கள் நியமனம் செய்யப்பட்டு கிராமங்களிலும், தாலுகா அலுவலகங்களிலும் விவசாயிகளை அழைத்து பேச்சு நடத்தினர்.

ஆனால் வடமாநிலத்தைச் சேர்ந்த இயற்கை
ஆர்வலர் என தன்னை கூறிக் கொள்ளும் பியுஷ் மனுஷ், 43, உள்ளிட்ட போர்வையாளர்கள் மேற்கொண்ட மூளைச்சலவையின் காரணமாக விவசாயிகள் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு ஆங்காங்கே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அரசுக்கு எதிராக வன்முறையை துாண்டும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி மற்றும் தி.மு.க.,வைச் சேர்ந்த சிலரையும், நடிகர் மன்சூர் அலிகானையும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட துாண்டும் வடமாநில வாலிபர் பியுஷ் மனுஷையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று சேலம் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிக்காக தனி தாசில்தார்கள் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டனர். தொடர்ந்து சேலம் - அரூர்
சாலையில் மஞ்சவாடி கணவாய் பகுதியில் நில அளவீடு பணியை துவக்கினர். முதலில் வனத்துறை, வருவாய்த் துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் அதிகாரிகள் கற்கள் பதித்தனர். தொடர்ந்து அடிமலைப்புதுார், கத்திரிபட்டி, அரமனுார், ஆச்சாங்குட்டப்பட்டி பகுதிகளில் நேற்று 8 கி.மீ.,க்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்தன.
வருவாய் துறையினர் நிலத்தை அளந்து 70 மீட்டர் அகலத்துக்கு கற்களை பதித்தனர். அடிமலைபுதுார் பகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த் துறை அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் தலையிட்டு சமாதானம் செய்தும் அவர்கள் கலைய மறுத்தனர்.
இதனால் ஏழு பேரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் மாலையில் விடுவித்தனர்.

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்ட பணிகளை முடக்க எடுத்த முயற்சிகள் பலன் அளிக்காமல் போனதால் போர்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

5 பேர் மீது வழக்கு

சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே காமலாபுரத்தில் விமான நிலையம் அமைந்துள்ளது. இதை விரிவாக்கும் பணிகள் துவங்க உள்ளன. இத்திட்டத்திற்கும் நிலம் கையகப்படுத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதையடுத்து அப்பகுதி மக்களிடம் நேற்று வி.ஏ.ஓ., அறிவழகன் தொழில், பொருளாதாரம், கல்வி போன்ற விபரங்களை கேட்டறிந்தார்.
அப்போது அங்கு வந்த ஐந்து பேர் விமான நிலைய விரிவாக்கம் குறித்து யாரையும் சந்திக்கக் கூடாது என மிரட்டினர். அறிவழகன் புகார்படி ஓமலுார் வன்னியர் சங்கத் தலைவர் முருகன் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.

- நமது சிறப்பு நிருபர் -
ஆதரவாளர்கள் எதிர்ப்பு : விழி பிதுங்கும் தினகரன் 
 

dinamalar 19.06.2018

தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 எம்.எல்.ஏ.,க் களில், தங்க தமிழ்செல்வனை தவிர, மற்ற, 17 பேரும், வழக்கை வாபஸ் பெறும் முடிவுக்கு, கடும் எதிர்ப்புத் தெரிவிப்பதால், தினகரன் விழிபிதுங்கி நிற்பதாக, அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



முதல்வர் பழனிசாமியை மாற்ற வேண்டும் என்ற மனுவை, கவர்னரிடம், சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க் கள், 18 பேர் வழங்கினர். இதை தொடர்ந்து, 18 பேரையும், கட்சி தாவல் சட்டத்தில், தகுதி நீக்கம் செய்து,

சபாநாயகர், தனபால் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 18 பேரும் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள், 'பெஞ்ச்'மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. அதனால், மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.இந்நிலையில், மாறுபட்ட தீர்ப்பால், அதிருப்தி அடைந்த தங்கதமிழ்செல்வன், தன் வழக்கை வாபஸ் பெற உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக, வழக்கறிஞர்களுடன் ஆலோசனையும் நடத்தி வருகிறார். இதற்கு,தினகரனும் ஆதரவு தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், தன்னை போல, மற்ற, 17 பேரும், வழக்கை வாபஸ் பெற வேண்டும் என, தமிழ்செல்வன் வலியுறுத்தி வருகிறார். இது,

 தினகரனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக முடிவு எடுக்க, தினகரன், நேற்று தன் ஆதரவாளர்களிடம், ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, வழக்கை வாபஸ் பெறும் முடிவுக்கு, 17 பேரும் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதனால், எந்த முடிவும் எடுக்க முடியாமல், தினகரன் திணறி வருவதாக, தகவல் ெவளியாகியுள்ளது.- நமது நிருபர் -
மருத்துவ படிப்பு விண்ணப்பம்: இன்று கடைசி நாள்

Added : ஜூன் 19, 2018 05:41




சென்னை: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, இன்று(ஜூன் 19) கடைசி நாள்.

இது குறித்து, தேர்வுக் குழு செயலர் செல்வராஜன் கூறுகையில், ''இதுவரை, 36 ஆயிரத்து, 304 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன. ''சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, திட்டமிட்டப்படி, ஜூன், 28ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். ஜூலை, 1 முதல், 5 வரை, முதற்கட்ட கவுன்சிலிங் நடைபெறும்,'' என்றார்.
ஏ.டி.எம்.,மில் எலி நடத்திய 'சர்ஜிகல் ஸ்டிரைக்'; ரூ.12 லட்சத்தை கடித்து குதறியது

Added : ஜூன் 19, 2018 07:04

கவுகாத்தி: அசாமில் ஏ.டி.எம்., மெஷினுக்குள் புகுந்த எலி, 12 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை கடித்து துவம்சம் செய்தது.

அசாம் மாநிலம் டின்சுகியா மாவட்டத்தில் உள்ள லாய்புலி பகுதியை சேர்ந்த எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., கடந்த ஒரு மாதமாக வேலை செய்யவில்லை. மே 20லிருந்து வேலை செய்யாமல் இருந்த இந்த ஏ.டி.எம்.,-ஐ சரிசெய்ய, ஜூன் 11ம் தேதி வேலை ஆட்களை அனுப்பியது வங்கி நிர்வாகம். ஏ.டி.எம்.,-ஐ திறந்து பார்த்த ஊழியர்களுக்கு அங்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

ஏ.டி.எம்.,க்குள் புகுந்த எலி ஒன்று, மெஷினில் நிரப்பப்பட்டிருந்த 2000, 500 ரூபாய் நோட்டுகளை சிறு சிறு துண்டுகளாக கடித்து துவம்சம் செய்திருந்தது. எலி நடத்திய வித்தியாச 'சர்ஜிகல் ஸ்டிரைக்கில்', 12 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் சேதமாகியதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டின்சுகியா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் முதலாக ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி தொடங்குகிறது



என்ஜினீயரிங் கலந்தாய்வு அடுத்த(ஜூலை) மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது.

ஜூன் 19, 2018, 04:15 AM

சென்னை,


தமிழகத்தில் 509 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பி.இ. படிப்பில் சேர அண்ணாபல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது.

இந்த வருடம் ஆன்லைன் மூலம் முதன் முதலாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த மே மாதம் 3-ந்தேதி முதல் கடந்த 2-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்தனர்.

விண்ணப்பித்த மாணவ- மாணவிகள் அனைவருக்கும் ரேண்டம் நம்பர் வெளியீடு வழங்கப்பட்டது. மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். சான்றிதழ் சரிபார்த்தல் 42 மையங்களில் 8-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெற்றது.

அண்ணாபல்கலைக்கழகத்தில் மட்டும் 17-ந்தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அண்ணாபல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சமர்ப்பித்த அனைத்து சான்றுகளும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.

இந்த மாதம் 4-வது வாரத்திற்குள் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். மருத்துவ கலந்தாய்வு நடந்த பின்னர் தான் என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கும். என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு முதல் கட்டமாக 10 ஆயிரம் பேருக்கு இடங்கள் மற்றும் கல்லூரியை தேர்ந்து எடுக்க வாய்ப்பு அளிக்கப்படும். பின்னர் படிப்படியாக மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். கலந்தாய்வு உத்தேசமாக அடுத்த மாதம் (ஜூலை) 7-ந்தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது.

தொழில்கல்வி மாணவர்களுக்கும், மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு கலந்தாய்வு அண்ணாபல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் நடந்தது போல நேரடியாக நடைபெற உள்ளது.
ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டக்கூடாது என்பது எனது தனிப்பட்ட விருப்பம் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கருத்து



இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டக்கூடாது என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட விருப்பமாகும் என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

ஜூன் 19, 2018, 05:15 AM

சென்னை,

சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு, அரசு செலவில் மெரினா கடற்கரையில் நினைவிடம் கட்டக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி உள்பட பலர் வழக்குகள் தொடர்ந்தனர்.

அதில், ‘கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை மீறி மெரினா கடற்கரையில் எந்தக்கட்டிடமும் கட்டக்கூடாது என்று தடை விதிக்க வேண்டும்’ என்றும் கூறியிருந்தனர்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி, ‘மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தின் உள்ளே தான் ஜெயலலிதாவுக்கும் நினைவிடம் அமைக்கப்படுகிறது. கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் உருவாக்கப்படுவதற்கு முன்பே எம்.ஜி.ஆர். நினைவிடம் கட்டப்பட்டு விட்டது. விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இதுதொடர்பான வரைபட அனுமதியை தாக்கல் செய்கிறோம்’ என்று வாதிட்டார்.

அப்போது தலைமை நீதிபதி குறுக்கிட்டு, ‘உலகிலேயே 2-வது மிக நீளமான கடற்கரையாக மெரினா கடற்கரை விளங்குகிறது. இது தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே பெருமையாகும். சாலையில் செல்லும் மக்கள் எந்தவொரு இடையூறுமின்றி கடற்கரையின் அழகை கண்டு ரசிக்க வேண்டும். கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளுக்குப் புறம்பாக மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் உள்பட எந்தவொரு கட்டிடமும் கட்டக்கூடாது என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட விருப்பம். இது என்னுடைய சொந்த விருப்பமாகும். ஆனால், இந்த வழக்கின் இருதரப்பு வாதங்களின் அடிப்படையில், இறுதி முடிவுக்கு வரமுடியும்’ என்று கருத்து கூறினார்.

பின்னர் விசாரணையை வருகிற 25-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...