Monday, September 23, 2019

பூந்தமல்லியில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து தானாக வெளிவந்த ரூ.10 ஆயிரம் ரூபாய்



பூந்தமல்லியில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து தானாக வெளிவந்த ரூ.10 ஆயிரம் நேர்மையுடன் ஒப்படைத்த கல்லூரி மாணவர்.

பதிவு: செப்டம்பர் 23, 2019 03:30 AM

பூந்தமல்லி,

நெல்லையை சேர்ந்தவர் மாடசாமி (வயது 23). இவர், பூந்தமல்லியில் தங்கி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று பூந்தமல்லியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து திடீரென கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகள் வெளியே வந்து விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த பணத்தை எடுத்து எண்ணிப்பார்த்தார். அதில் ரூ.10 ஆயிரம் இருந்தது. உடனடியாக அந்த பணத்தை பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். நேர்மையுடன் பணத்தை ஒப்படைத்த மாணவர் மாடசாமியை போலீசார் பாராட்டினர்.

அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க வந்த யாரேனும் ஏ.டி.எம். எந்திரத்தில் கார்டை சொருகி நீண்டநேரம் ஆகியும் பணம் வராததால், பணம் இல்லை என்று நினைத்து சென்று இருக்கலாம். தாமதமாக அந்த பணம் வெளியே வந்து இருக்கலாம் என தெரிகிறது. இதுபற்றி அந்த ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பக்கவாதம் நோய்க்கு, 'பக்கா' சிகிச்சை: அரை மணி நேரத்தில் மீண்ட நோயாளி

Added : செப் 23, 2019 00:20





கரூர்:பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட துரிதமான சிகிச்சையால், 30 நிமிடங்களில், சகஜ நிலைக்கு திரும்பினார்.

கரூர், நீலிமேட்டைச் சேர்ந்தவர், கருணாநிதி, 40; ஆட்டோ ஓட்டுனர். 20ம் தேதி, இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.உடனடியாக, அரசு மருத்துவக் கல்லுாரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, டாக்டர்கள் துரிதமாக சிகிச்சை அளித்து, பாதிப்பிலிருந்து மீட்டனர். கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன், ரோஸி வெண்ணிலா கூறியதாவது:இந்த மருத்துவமனை, நோயாளிகளுக்கு துரிதமாகவும், துல்லியமாகவும் சிகிச்சையளிக்கும் வகையில், தாய் திட்டத்தில், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள், மாரடைப்பு, வலிப்பு நோய், நச்சு பாதிப்புக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மூளையின் ஒரு பக்கம் ரத்த ஓட்டம் குறைந்து, அப்பகுதி செயல்படாமல் போகும் போது, அதோடு தொடர்புடைய ஒரு கை, ஒரு கால் மற்றும் முகத்தின் ஒரு பகுதி செயலற்று போவது பக்கவாதமாகும்.உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கொழுப்பு, மாரடைப்பு, இதய வால்வு கோளாறு, இதயம் செயலிழப்பு, இதய துடிப்பு கோளாறு போன்றவை, பக்கவாதம் வருவதற்கு அடித்தளம் அமைக்கின்றன. கடந்த, 20ம் தேதி காலை, 11:15 மணிக்கு, பக்கவாதம் அறிகுறியுடன், வலது கை, கால் பாதிக்கப்பட்ட நிலையில், கருணாநிதி என்பவர், இங்கு சேர்க்கப்பட்டார். அவருக்கு, டாக்டர் முரளிதரன் தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.பாதிப்பில் இருந்து மீள, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மருந்து, ஊசி மூலம் செலுத்தப்பட்டது. இதனால், மூளை ரத்த குழாயில் உறைந்திருந்த ரத்தம் விலகி, மீண்டும் ரத்த ஓட்டம் சீரானது. அவருடைய கை, கால், 30 நிமிடங்களில் சகஜ நிலைக்கு திரும்பின.சற்று தாமதமாக வந்திருந்தாலும் அல்லது சிகிச்சை அளிக்க தாமதித்திருந்தாலும், அவர் வாழ்நாள் முழுவதும், ஒரு கை, ஒரு கால் செயலிழந்த நிலையிலேயே வாழ வேண்டி இருந்திருக்கும். இந்த மருந்து விலை அதிகம் என்பதால், தனியார் மருத்துவமனைகளில், இருப்பு வைத்திருப்பது சந்தேகம். ஆனால், அரசு மருத்துவமனைகளில், எப்போதும் இருப்பு வைக்கப்பட்டிருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
5 மணி நேரம் ஏழுமலையான் தரிசனம் ரத்து

Added : செப் 22, 2019 23:09

திருப்பதி:திருமலையில், செப்., 24ல், ஏழுமலையான் தரிசனம் ஐந்து மணிநேரம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலையில், வரும், செப்., 30 முதல் அக்.,8 வரை, வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்கிறது. அதை முன்னிட்டு, அதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமைகளில், ஏழுமலையான் கோவில் சுத்தம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, செப்., 24ம் தேதி, ஏழுமலையான் கோவில் சுத்தம் செய்யப்பட உள்ளதால், காலை, 6:00 முதல் 11:00 மணிவரை, ஐந்து மணி நேரம், தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவில் சுத்தப்படுத்திய பின் பக்தர் கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

பிரிட்டனில் பணியாற்ற 'டோபல்' தேவையில்லை

Added : செப் 22, 2019 23:07

புதுடில்லி:ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பணியாற்றுவதற்கு, டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்டோர், 'டோபல்' மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விசா கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் பணியாற்ற விரும்பும் டாக்டர்கள், நர்சுகள், பல்மருத்துவர்கள், பணிப் பெண்கள் ஆகியோர், ஓ.இ.டி., எனப்படும் தொழிற்முறைஆங்கிலத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதைத் தவிர, டோபல் அல்லது ஐ.இ.எல்.டி.எல்., என்ற மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.ஆக்ஸ்போர்டு பல்கலையின் துணை அமைப்பு நடத்தும், ஓ.இ.டி., தேர்வு, பல்வேறு நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதனால், அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே, பிரிட்டனுக்கான விசாவை பெறலாம். டாக்டர்கள் உள்ளிட்டோர், டோபல் போன்ற தேர்வுகளிலும் தேர்ச்சி பெறத் தேவையில்லை.இதற்கான அறிவிப்பு சமீபத்தில்வெளியிடப்பட்டது. அக்., 1 முதல் இது அமலுக்கு வருகிறது.
ஆராய்ச்சி படிப்புகளில் ஆர்வமில்லை உயர்கல்வி ஆய்வில் புள்ளி விபரம்

Updated : செப் 23, 2019 00:34 | Added : செப் 22, 2019 22:25 |

புதுடில்லி:நாடு முழுவதும், பல்வேறு கல்வி நிறுவனங்களில், பிஎச்.டி., எனப்படும், ஆராய்ச்சி படிப்பின் மீது ஆர்வம் குறைந்து வருவது, ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், அகில இந்திய உயர்கல்வி குறித்து, சமீபத்தில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தெரியவந்துள்ள விபரங்கள்:பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகள் மற்றும் தனிச்சிறப்பு கல்வி நிறுவனங்கள் என்ற மூன்று பிரிவுகளில், உயர்கல்வி குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.

தேர்வு

இதில், 962 பல்கலைக்கழகங்கள்; 38 ஆயிரத்து, 179 கல்லுாரிகள்; 9,190 தனிச்சிறப்பு கல்வி நிறுவனங்கள், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மொத்தமுள்ள கல்லுாரிகளில், 34.9 சதவீத நிறுவனங்களில் மட்டுமே, முதுநிலை படிப்புகள் உள்ளன; 2.5 கல்லுாரிகளில் மட்டுமே, பிஎச்.டி., எனப்படும் ஆராய்ச்சி படிப்புகள் உள்ளன. இவற்றில், பெரும்பாலான கல்லுாரிகளில், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளையே, முதுநிலை மேற்படிப்புக்கு செல்லும் மாணவர்கள் தேர்வு செய்கின்றனர்.

இதற்கு அடுத்தபடியாக, சமூக அறிவியல் மற்றும் மேலாண்மை தொடர்பான படிப்புகள், மாணவர்களின் அடுத்த தேர்வாக உள்ளன. உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள மாணவர்களில், ஒரு லட்சத்து, 69 ஆயிரத்து, 170 மாணவர்கள் மட்டுமே, பிஎச்.டி., படிப்பில் சேர்ந்துள்ளனர். இது, மொத்த மாணவர்களில், 0.5 சதவீதம் மட்டுமே.

34.5 சதவீத மாணவர்கள்

இவர்களில், மாநில அரசு பல்கலைக்கழகங்களில், அதிகபட்சமாக, 34.5 சதவீத மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்கின்றனர். அடுத்ததாக, தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள கல்வி நிறுவனங்களில், 21.6 சதவீதம் பேரும், டீம்டு எனப்படும், தன்னாட்சி அதிகாரம் பெற்ற தனியார் பல்கலைக்கழகங்களில், 21.6 சதவீதம் பேரும், மாநில அங்கீகாரம் பெற்ற தனியார் பல்கலைக்கழகங்களில், 13.4 சதவீதம் பேரும், ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்கின்றனர்.

கல்லுாரி மற்றும் பல்கலைக்கழங்களில் உள்ள மொத்த மாணவர்களில், 79.8 சதவீதம் பேர், இளநிலை பட்டப்படிப்பில் உள்ளவர்கள். இளநிலை படிப்புகளை பொருத்தவரை, பி.ஏ., பட்டப்படிப்பை முதல் தேர்வாகவும், அதைத் தொடர்ந்து, பி.எஸ்சி., மற்றும் பி.காம்., படிப்புகளை அடுத்த தேர்வாகவும் மாணவர்கள் விரும்புகின்றனர். இளநிலை படிப்பை பொருத்தவரை, கலை, சமூக அறிவியல் படிப்புகளில், அதிகளவாக, 35.9 சதவீதம் பேர் சேர்ந்து உள்ளனர்.

தனியார் நிர்வாகம்

அதைத் தொடர்ந்து, அறிவியல் படிப்புகளில், 16.5 சதவீதம் பேரும், வணிகவியல் படிப்புகளில், 14.1 சதவீதம் பேரும், பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளில் 13.5 சதவீதம் பேரும் சேர்ந்துள்ளனர். மொத்தமுள்ள கல்லுாரிகளில், 34.8 சதவீதம், கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்வியில், எதாவது ஒன்றை மட்டுமே, பிரதானமாகக் கொண்டு உள்ளன. இவற்றில், 83.1 சதவீதகல்வி நிறுவனங்கள், தனியாரால் நிர்வகிக்கப்படுகின்றன.

தனியாரால் நிர்வகிக்கப்படும் கல்லுாரிகளில், 38.1 சதவீத நிறுவனங்கள், பி.எட்., படிப்பை மட்டுமே கற்றுத்தருகின்றனர். நாட்டிலேயே அதிகபட்சமாக, ஆந்திரா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில், 88 சதவீத உயர் கல்வி நிறுவனங்கள், தனியாரால் நிர்வகிக்கப்படுகின்றன. இதற்கு அடுத்தபடியாக, மூன்றவது இடத்தில் உள்ள தமிழகத்தில், 87 சதவீத உயர் கல்வி நிறுவனங்கள், தனியாரால் நடத்தப்படுகின்றன. குறைந்த பட்சமாக, அசாமில், 16 சதவீதம் மட்டுமே தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
70 IAS officers transferred in Rajasthan

23/09/2019, PRESS TRUST OF INDIA,JAIPUR

The Rajasthan government has transferred 70 IAS officers, including 10 district collectors, according to an official order.

The Officer on Special Duty to former Chief Minister Vasundhara Raje was among those transferred on Saturday night.

Additional Chief Secretary, Administrative Reforms, Ravishankar Srivastava has been made chairman of the Rajasthan State Road Transport Corporation.

Additional Chief Secretary, Industries, Subodh Agrawal has been given MSME dept. in addition to his existing departments while principal secretary, MSME, Alok was transferred as MD of RSRTC.
4G for BSNL users

23/09/2019, STAFF REPORTER,MADURAI

Customers using BSNL network will now have access to 4G services in Madurai’s urban areas according to a press statement.

Those with 4G handsets can procure 4G sim cards from the BSNL Customer Service Centre in Tallakulam, East Masi street or in Ellis Nagar. Customers need to bring their Aadhaar cards or other documents of proof to change their sim for free. The centres will be open on Sunday as well to allow quick transition.

NEWS TODAY 08.07.2026