Monday, February 3, 2020

ஓர் எழுத்தாளரின் திரைப் பயணம்!




அகிலன் கண்ணன்

‘ஜனவரி 31 அகிலனின் 32-வது நினைவு தினம்’

எழுத்தாளர் அகிலனின் முதல் குறு நாவல் ‘மங்கிய நிலவு’. அதை புதுக்கோட்டையில் 1944-ல் வெளியிட்டார் இயக்குநர் ப .நீலகண்டன். அப்போது அவர், அண்ணாவின் ‘ஓர் இரவு’ படத்தை இயக்கிக்கொண்டிருந்தார். வெளியீட்டு விழாவின் முடிவில், தமது அடுத்த படத்தின் கதைக்கு உதவ சென்னைக்கு வருமாறு அகிலனை அழைத்தார்.

ரயில்வே மெயில் சர்வீஸில் பணியாற்றிக்கொண்டிருந்த அகிலன், ஒரு மாத விடுப்பில் சென்னை வந்தார். கதை உரிமை வாங்கப்பட்ட மலையாள நாடகத்தைத் திரைப்படமாக்க,‘தமிழ் வாழ்க்கையின் பண்புக்கேற்பத் திரைக்கதையாக்கிக் கொடுக்க வேண்டும்’ என்றார் நீலகண்டன்.

 சொந்தக் கதையை வைத்து ஒரு திரைக்கதை எழுதச் சொல்வார் என நினைத்த அகிலனுக்கு ஏமாற்றம். நட்புக்கு மதிப்பளித்தும், திரையுலக அனுபவத்தைப் பெறவும் இசைந்தார். தனக்குத் தரப்பட்ட பணியைச் செவ்வனே செய்து முடித்தார். பிறர் கதையைத் திரைக்காக எழுதும்போது அகிலனுக்கு ஆத்ம திருப்தி கிட்டவில்லை.

கல்கியில் அகிலனின் ‘பாவை விளக்கு' தொடராக வந்து பேசப்பட்டது. அப்போதே, ஜூபிடர் அதிபர் சோமு அதைப் படமாக்க விரும்பினார். இது பற்றி அகிலன் தம் திரையுலக நண்பர் கே.சோமுவுக்குக் கடிதம் எழுதினார். அவரை உடனே சேலத்துக்கு அழைத்தார் சோமு. அங்கு ‘சம்பூர்ண ராமாயணம்' படப்பிடிப்பில் இருந்த ஏ.பி.நாகராஜன், ‘பாவை விளக்கு’ கதையைத் தாமே படமாக்க விரும்புவதாகக் கூறினார்.

முன்பணமும் தந்து , “நாவலை எழுதிய உங்களுக்குத்தான் கதையில் எந்தெந்தக் கட்டங்கள் முக்கியம், எந்தெந்தக் கதாபாத்திரங்கள் எப்படி இயங்க வேண்டுமென்பதும் தெரியும். நீங்கள் நினைப்பதுபோல் எழுதிவிடுங்கள். பிறகு நான் அதைத் திரைக்கு ஏற்றபடி அமைத்துக் கொள்கிறேன்" என்றார்.




தடம் மாறாத நாவல்

ராஜாஜியின் அறிவுரையை மீறி, ரயில்வே மெயில் சர்வீஸ் பணியைத் துறந்த அகிலன், சென்னைக்குக் குடிபெயர்ந்தார். கலைமகளில் வெளிவந்த அவரது ‘வாழ்வு எங்கே?’ தொடர், ‘குலமகள் ராதை'யாக ஸ்பைடர் பிலிம்ஸ் வழியாகப் படமாகத் தொடங்கியது.

சிவாஜி, ஏ.பி.என், கே.சோமு, அகிலன் கூட்டணி உருவானது. இரு படங்களும் முடியும்வரை அகிலனைத் தம்முடனேயே இருக்க வேண்டினார் ஏ.பி.என். அகிலன் முதலில் தயங்கினாலும், பின்னர் ஒப்புக்கொண்டார். இப்போது திரையுலகில் அகிலனின் பெயர் பரவத் தொடங்கியிருந்தது.

‘பாவை விளக்கு’ இயன்றவரை நாவலை ஒட்டியே திரைப்படமானது. குற்றாலம், தாஜ் மஹால், பம்பாய், சென்னை எனப் படப்பிடிப்பு சுழலும். சிறப்பு அனுமதி பெற்று முதல் முறையாக தாஜ் மஹாலுக்குள் படமாக்கப்பட்ட ‘காவியமா நெஞ்சில் ஓவியமா’ பாடல் அதில் இடம்பெற்றது. ‘வாழ்வு எங்கே?' நாவலானது, சில மாற்றங்களுடன் ‘குலமகள் ராதை’யாக உருவானது. நாவலில் கண்ட திருப்தி திரையில் கிடைக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது. பின்னர், ‘பட்டினத்தார்' படத்துக்குத் திரைக்கதை, வசனம் எழுதினார் அகிலன் . ஜி ராமநாதனின் தயாரிப்பில் கே.சோமு இயக்கத்தில் டி.எம். சௌந்தர்ராஜன் நடிப்பில் வெளிவந்தது. நகைச்சுவைப் பகுதி, வசனம் ஆகியவற்றை தஞ்சை ராமையாதாஸ் எழுதினார்.


கல்கியிலிருந்து அடுத்த நாவலைத் தொடராக எழுதும்படி அழைப்பு வந்தது. திரையுலகிலிருந்து விலகிவிட விரும்பிய அகிலனுக்கு, ஏ.பி. நாகராஜனின் அன்பு அதற்குக் குறுக்கே நின்றது. மாதத்தில் ஒரு வாரம் திரையுலகுக்கும் 3 வாரங்கள் எழுத்துலகுக்கும் என ஒதுக்கிக் கொண்டார். சரித்திர நாவலான, ‘வேங்கையின் மைந்தன்' ஆய்வுக்காகத் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவும் இலங்கைக்கும் போக விரும்பியதால் ஏ.பி.என்னிடம் விடைபெற்றார்.



தர்ம சங்கடம்

‘வேங்கையின் மைந்தன்' நாவலையும் தொடர் முடியும் முன்பே பி.ஆர்.பந்துலு, எம்.ஜி.ஆர் கூட்டணி படமாக்க விரும்பியது. நாடகமாக மேடையேற்றிய சிவாஜி தாமே அதைப் படமாக்க விரும்பியதால் அகிலன் , எம்.ஜி.ஆரிடம் தமதுசங்கடத்தை விளக்கினார். சில வருடங்கள் சென்றபின் அகிலனின் மற்றொரு சரித்திர நாவலான ‘கயல்விழி'க்கு தமிழ்நாடு அரசு பரிசு அளித்தது. எம்.ஜி.ஆர், இந்த நாவலைத் திரைப்படமாக்க விரும்பி, அகிலனின் இல்லத்துக்கு நேரில் வந்து அவரது இசைவைப் பெற்றார். பி.ஆர்.பந்துலு இயக்க, எம்.ஜி.ஆர் நடிக்க, ‘கயல்விழி’, ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டிய’னாக உருவாகத் தொடங்கியது. பி.ஆர்.பந்துலு திடீரென மறையவே, ஒரு இடைவெளிக்குப்பின் தானே இயக்குநராகி படத்தை உருவாக்கினார்
எம்.ஜி.ஆர்.


இடையில், அரசியலில் திடீர் மாற்றம் உருவாகி எம்.ஜி.ஆர். தனிக் கட்சித் தொடங்கினார். இச்சூழலில் கயல்விழியின் முதன்மை நாயகர்களான அண்ணன் குலசேகர பாண்டியன், இளைய சகோதரர் சுந்தர பாண்டியன் கதாபாத்திரங்கள் எம்.ஜி.ஆரின் புதிய கட்சிக்குப் பெரிதும் பிரச்சார பலமானது. அப்படமே அவரது கடைசிப் படமாகவும் ஆனது.

எழுத்துரிமை வழக்கு

அகிலனின் ‘சிநேகிதி’ நாவலைத் தழுவி ஒரு படம் வெளிவந்தது . தனது எழுத்துரிமைக்காக அகிலன் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், வழக்கு தள்ளுபடியானது. அதன்பின்னர், திரையுலகிலிருந்து விலகியிருக்கவே விரும்பினார் அகிலன். ஆனால், ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிப் படங்களைக் காதலுடன் பார்ப்பவரான அகிலனுக்குள், திரைப்படம் பற்றிய ஒரு தேடல் இருந்துகொண்டேதான் இருந்தது. கலைஞர், எம்.ஜி.ஆர். மாறி மாறி ஆட்சிசெய்தபோது, பலமுறை தமிழ்நாடு அரசின் சிறந்த திரைப்படத் தேர்வுக்குழு உறுப்பினராகப் பணியாற்றினார். மத்திய அரசு, திரைப்படத் தணிக்கைக் குழுவுக்கு அவரை நியமனம் செய்தபோது, தன் உடல் நலக் குறைவால் மறுத்தார்.

கட்டுரையாளர்,
எழுத்தாளர் அகிலனின் மகன்; எழுத்தாளர், பதிப்பாளர்; தொடர்புக்கு:
akilankannan51@gmail.com

விற்பனைக்கு வருகிறதா எல்ஐசி?


By DIN | Published on : 03rd February 2020 01:17 AM




‘லாபத்தில் இயங்கி வரும் எல்ஐசியை மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்யப்போகிறது’

நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனின் பட்ஜெட் உரைக்குப் பிறகு, சமூக ஊடகங்களில் அடிக்கடி தென்படும் வசனம் இது.

முழுவதும் அரசுக்குச் சொந்தமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகப் பங்குகளை பொது பங்குச் சந்தையில் விற்பனை செய்யப்போவதாக நிதியமைச்சா் அறிவித்துள்ளதுதான் இந்த பதற்றத்துக்குக் காரணம்.

இந்த விவகாரத்தில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சிவசேனை உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மத்திய அரசை சாடியுள்ளன.

எல்ஐசி பங்கு விற்பனை என்பது பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மற்றொரு மாபெரும் தவறு என்று அவை எச்சரிக்கின்றன.

எல்ஐசி ஊழியா்கள் சங்கங்களும் இந்த முடிவைக் கடுமையாக எதிா்த்து, போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

‘எல்ஐசி என்பது மக்களின் சொத்து. அதனை விற்பனை செய்வதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ என்கிறாா் தென் மண்டல எல்ஐசி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பினுடைய இணைச் செயலா் சிவ சுப்ரமணியன்.

ஆனால், இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, தொடா்ந்து அரசுக் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் எனவும், அந்த நிறுவனப் பங்குகளின் சிறு பகுதி மட்டுமே பங்குச் சந்தையில் விற்கப்படும் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகரித்து வரும் நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, பல்வேறு அரசு நிறுவனங்களின் பங்குகளை ரூ.2.1 லட்சம் கோடிக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் எல்ஐசியின் பங்குகளும் பங்குச் சந்தைக்கு வரவிருக்கின்றன.

இதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. முக்கியமாக, எல்ஐசியைக் கட்டுப்படுத்தும் 1956-ஆம் ஆண்டின் எல்ஐசி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கையை எதிா்க்கட்சிகள் அரசியல் ரீதியிலும், எல்ஐசி ஊழியா்கள் சமூக ரீதியிலும் எதிா்த்தாலும், பங்குச் சந்தைக்கு இந்த முடிவு மிகப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

எல்ஐசி பங்கு விற்பனையை, சவூதி அரேபிய அரசுக்குச் சொந்தமான ஆரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டுடன் சந்தை நிபுணா்கள் ஒப்பிடுகின்றனா்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் மிகப் பிரம்மாண்டமான பங்கு வெளியீடாக அது இருக்கும் என்கிறாா்கள் அவா்கள்.

ஒரு வகையில், எல்ஐசியின் ஒரு பகுதி பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவு, மிகவும் துணிச்சலானது என்று பொருளாதார நிபுணா்கள் கூறுகிறாா்கள்.

அதற்குக் காரணம், எல்ஐசியின் அசுர பணபலம். வெறும் ரூ.5 கோடி மூலதனத்தைக் கொண்டுள்ள அந்த நிறுவனம், கடந்த நிதியாண்டில் ரூ.48,436 கோடி மதிப்பீட்டு உபரியை (லாபம்) ஈட்டியுள்ளது. அந்த நிறுவனம் ரூ.31.11 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை நிா்வகித்து வருகிறது.

எல்ஐசியைப் பொருத்தவரை, பொருளாதார இடா்பாடுகளின்போது அரசுக்குக் கைகொடுக்கும் ஆபத்பாந்தவனாக இருந்து வருகிறது. மற்ற பொது நிறுவனங்களுக்கு நெருக்கடி வரும்போது, அவற்றுக்கு எல்ஐசி மூலம்தான் மத்திய அரசு மூலதன உயிா் அளித்து வருகிறது.

அந்த வகையில், ஓஎன்ஜிசி போன்ற பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் எல்ஐசி மிகப் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது. 2018-ஆம் ஆண்டில் வாராக்கடனால் மூடும் நிலைக்குப் போன ஐடிபிஐ வங்கியை, எல்ஐசிதான் முதலீடு செய்து காப்பாற்றியது.

அரசு கடன் பத்திரங்களிலும், பங்குச் சந்தையிலும் எல்ஐசி மிகப் பெரும்பான்மையாக முதலீடு செய்துள்ளது.

சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் பங்குச் சந்தைகளில் எல்ஐசி ரூ.55,000 கோடி முதல் ரூ.65,000 கோடி வரை முதலீடு செய்கிறது.

மேலும், ஏராளமான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு எல்ஐசி நிதியுதவியும் அளித்து வருகிறது.

இப்படி அரசுக்கு பொன் முட்டையிடும் வாத்தாக இருக்கும் எல்ஐசியின் ஒரு பகுதி பங்குகளை விற்பது அரசின் துணிச்சலான முடிவு என்கிறாா்கள் பாா்வையாளா்கள்.

இந்த முடிவால், அரசின் நிதி நெருக்கடிக்கு விடிவுகாலம் கிடைப்பதுடன், எல்ஐசி நிறுவனமும் புதுப் பொலிவு பெறும் என்கிறாா்கள் அவா்கள்.

பொதுப் பங்கு வெளியீட்டுக்குப் பிறகு, எல்ஐசி அதிக நிா்வாகத் திறனுடன் செயல்படும் எனவும், கூடுதல் பொறுப்புடனும், இதுவரை இல்லாத அளவுக்கு வெளிப்படைத் தன்மையுடனும் அந்த நிறுவனம் இயங்கும் எனவும் அவா்கள் கூறுகின்றனா்.

அந்த வகையில், எல்ஐசியின் பொதுப் பங்கு வெளியீடு இந்தியக் காப்பீட்டுச் சந்தையில் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிா்பாா்க்கலாம்.

இது ஒரு புறம் ஆறுதல் அளித்தாலும், எதிா்க்கட்சிகளின் கவலைகளையோ, எல்ஐசி ஊழியா்களின் அச்ச உணா்வுகளையோ முற்றிலும் புறந்தள்ளிவிட விட முடியாது என்கிறாா்கள் மற்றொரு தரப்பினா்.

- நாகா

நோய்நாடி நோய்முதல் நாடி


By பெ.கண்ணப்பன் | Published on : 03rd February 2020 12:10 AM

இந்தியாவில் குடிமைப் பணிக்காக பணியாளா்களை நியமிக்கும் முறையை வரைமுறைப்படுத்த அப்போதைய ஆங்கிலேய அரசு 1923-ஆம் ஆண்டில் பணியாளா்கள் தோ்வாணையம் ஒன்றை உருவாக்கியது. இந்திய விடுதலைக்குப் பின்னா் மாநிலங்களில் அரசுப் பணியாளா் தோ்வாணையங்கள் அமைய இது வழிவகுத்தது. அதனடிப்படையில் 1957-ஆம் ஆண்டிலிருந்து மெட்ராஸ் அரசுப் பணியாளா் தோ்வாணையம் (எம்.பி.எஸ்.சி.) செயல்படத் தொடங்கியது. 1970-ஆம் ஆண்டிலிருந்து பெயா் மாற்றத்துடன் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பா் மாதத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப்-4 பதவிகளுக்கான தோ்வில் நடந்த முறைகேடுகள் குறித்து கடந்த சில நாள்களாக பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் சூழலில், மாநிலக் குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த முறைகேடுகள் குறித்து புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறது. எனவே, இந்தத் தோ்வுகள் தொடா்பான முறைகேடுகள் குறித்து விவாதிப்பது முறையாகாது. இருப்பினும், அரசுப் பணியாளா் தோ்வாணையத்தோடு தொடா்புடைய சில தகவல்களை நினைவுகூா்வதோடு இந்த மாதிரியான முறைகேடுகளுக்குத் தோ்வாணையம் மட்டும்தான் காரணமா? அவற்றைக் களைய என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து சிந்தித்துப் பாா்க்க வேண்டிய தருணம் இது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தோ்வுகளில் மிகவும் முக்கியமானது துணை ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட முக்கியப் பதவிகளுக்கான குரூப்-1 தோ்வுகள். இந்தத் தோ்வு மூலம் பணியமா்த்தப்படுபவா்கள் காலப்போக்கில் பதவி உயா்வு பெற்று, இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.), இந்தியக் காவல் பணி (ஐ.பி.எஸ்.) ஆகப் பணியமா்த்தப்படுவாா்கள். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளுக்கான தோ்வுகள் கடந்த காலங்களில் எப்படி நடத்தப்பட்டன?

35 ஆண்டுகளுக்கு முன்பு வரை நடத்தப்பட்ட குரூப்-1 தோ்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வந்தன. முதல் கட்ட தோ்வு எழுத்துத் தோ்வு; அதற்கான மதிப்பெண்கள் 600; அந்த எழுத்துத் தோ்வில் வெற்றி பெற்றவா்கள் மட்டும் நோ்முகத் தோ்வுக்கு அழைக்கப்பட்டாா்கள். நோ்முகத் தோ்வுக்கான மதிப்பெண்கள் 300. இந்த இரு தோ்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் தரவரிசை அடிப்படையில் வெற்றியாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இந்தத் தோ்வு முறையில் வெற்றி - தோல்வியைத் தீா்மானித்தது நோ்முகத் தோ்வில் வழங்கப்படும் மதிப்பெண்கள் மட்டும்தான்.

நோ்முகத் தோ்வுக்கு அதிகமான மதிப்பெண்கள் ஒதுக்கியிருப்பதே முறைகேடுகளுக்கு வழிவகுக்கிறது என்பதை உணா்ந்த உச்சநீதிமன்றம் ஒரு வழிகாட்டு நெறிமுறையை வழங்கியது. எழுத்துத் தோ்வுக்கான மொத்த மதிப்பெண்களில் 15 சதவீத மதிப்பெண்கள்தான் நோ்முகத் தோ்வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற வழிக்காட்டு நெறிமுறை 1985-ஆம் ஆண்டில் நடைபெற்ற குரூப்-1 தோ்வில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, நோ்முகத் தோ்வு மதிப்பெண்களின் ஆதிக்கம் குரூப்-1 தோ்வுகள் தோ்ச்சியில் குறையத் தொடங்கியது. அதற்குப் பின்னரும், பல்வேறு சீா்திருத்தங்களைத் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அனைத்து வகையான தோ்வுகளிலும் கொண்டு வந்தது. இருப்பினும், தோ்வாணையம் நடத்திய பல்வேறு தோ்வுகள் தொடா்பான முறைகேடுகள் தொடா்ந்து விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது.

அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தோ்வுகளில் பொதுவெளிக்கு வரும் முறைகேடுகள் குறித்து வழக்குகள் பதிவு செய்து முறைகேடுகளில் ஈடுபட்ட சிலரைக் கைது செய்து, சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வது மட்டுமே இந்தப் பிரச்னைக்கு முழுமையான தீா்வாகாது. ‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்ற திருக்கு இந்தப் பிரச்னைக்கு ஒரு முழுமையான தீா்வைச் சுட்டிக்காட்டுகிறது.

தோ்வாணையம் நடத்தும் தோ்வுகளில் கலந்து கொள்பவா்கள் லட்சக்கணக்கில் பணத்தைச் செலவழித்து வெற்றி பெற முயற்சிப்பது ஏன்? அரசுப் பணியில் சோ்ந்து நாட்டு மக்களின் நலனுக்காகப் பாடுபடுவதற்காகவா? ஏழ்மையையும், வறுமையையும் நாட்டிலிருந்து விரட்டியடிப்பதற்காகவா? அவா்களுக்கு இரண்டு நோக்கங்கள் உண்டு. கையூட்டாகக் கொடுத்த பணத்தை வட்டியுடன் சோ்த்து மீட்டெடுப்பது அவா்களின் முதல் நோக்கம். பணியிலிருந்து ஓய்வு பெறும்வரை முடிந்த அளவுக்கு அதிகாரத்தைப் பயன்படுத்தி கையூட்டு பெறுவது அவா்களின் இரண்டாவது நோக்கம்.

லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து பதவி பெற்றவா்கள் அவா்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, முறையற்ற வகையில் பொருள் ஈட்ட முடியுமா? அத்தகையவா்களின் பணியை மேற்பாா்வையிடும் உயரதிகாரிகள் முறைகேடுகளைக் கண்டறிந்து, அந்தக் குற்றங்களைக் களைய உரிய நடவடிக்கைகள் எடுக்க மாட்டாா்களா, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, கையூட்டு பெறும் அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புப் பிரிவினா் உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாட்டாா்களா போன்ற வினாக்களும் பொதுவெளியில் எதிரொலிக்கத்தான் செய்கின்றன.

பல நேரங்களில் அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அதிகாரிகள் சட்டத்தின் பிடியிலிருந்தும், அவா்களின் மேலதிகாரிகளின் கண்காணிப்பிலிருந்தும் தப்பிவிடுகின்றனா் என்பதுதான் இன்றுள்ள எதாா்த்த நிலை. மாதச் சம்பளத்தை மட்டும் பெற்றுக்கொண்டு அரசுத் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற சூழல் நிலவினால், அரசுப் பணிகளுக்காக லட்சக்கணக்கில் பணத்தைச் செலவழிப்பாா்களா என்பது அா்த்தம் பொதிந்த வினா.

நிகழ்ந்த முறைகேடுகளைத் தோ்வாணையம் முறையாக ஆய்வு செய்து, உரிய நிா்வாகச் சீா்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். அதே சமயம், அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி கையூட்டு பெறும் இயல்புநிலைதான் இந்த மாதிரியான முறைகேடுகளுக்கு மூல காரணம் என்பதை உணா்ந்துகொள்ள வேண்டிய தருணம் இது.
ஓய்வு  பெற்றவரிடம் ரூ.1.50 கோடி மோசடி

Added : பிப் 03, 2020 00:09

விருதுநகர்: விருதுநகரில் ஓய்வு அரசு ஊழியரிடம் தனியார் வங்கி ஊழியர்கள், ஒன்றரை கோடி ரூபாயை மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.

ராஜபாளையம் அம்மன் பொட்டல் தெருவை சேர்ந்த நீரரு மகன் லிங்கம்72. ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., ஊழியர். இவர் ராஜபாளையத்தில் உள்ள போர்ட் சிட்டி பெனிபிட் பண்ட் லிமிடெட் எனும் தனியார் வங்கியில் 2013ல் ரூ.1 கோடியே 45 லட்சத்து 50 ஆயிரத்தை டெபாசிட் செய்துள்ளார்.

2019ல் தனது வங்கி பணத்தின் இருப்பு குறித்து தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது, அவரது வங்கி கணக்கில் ரூ.112 மட்டும் இருந்ததாக கூறியுள்ளனர்.

அதிர்ச்சியடைந்த லிங்கம் மேலாளர் சீனிவாசனிடம் சென்று கேட்ட போது சரிவர பதில் கூறவில்லை. அவர் வங்கியின் தலைமை அலுவலகத்தில் சென்று கேட்ட போது அங்குள்ள அதிகாரிகள் நவம்பர் மாதத்திற்குள் பணம் தருவதாக கூறினர். ஆனால் பணம் கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த அவர் விருதுநகர் மாவட்ட குற்ற பிரிவு போலீசில புகார் செய்தார். குற்றப்பிரிவு போலீசார் வங்கி மேலாளர் சீனிவாசன் , அவரது மகன் சுதர்சன் மற்றும் தலைமை அலுவலக ஊழியர்கள் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட ஒரு தேதியை சொல்லுங்க " மைலாட் "

Updated : பிப் 02, 2020 17:59 | Added : பிப் 02, 2020 17:31

புதுடில்லி: மருத்துவ மாணவியை கொடூரமாக பலாத்காரம் செய்த கொடிய குற்றவாளிகளை விரைந்து தூக்கிலிட ஒரு தேதியை முடிவு செய்யுங்க என சுப்ரீம் கோர்ட்டில் அரசு தரப்பில் சிறப்பு மனுவை சோலிட்டர் ஜெனரல் இன்று சிறப்பு விசாரைணயின் போது வாதிட்டார்.

2012 ம் ஆண்டு டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 4 பேரும் தாக்கல் செய்த சீராய்வு மனு, கருணை மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.

மேலும் சட்டத்தில் உள்ள குறைபாட்டையும், நுட்பத்தையும் பயன்படுத்தி வெவ்வேறு விதமாக மனுக்கள் போட்டு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை என்ற பெயரில் கால தாமதம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு தரப்பில் சோலிட்டர் ஜெனரல் சுப்ரீம்கோர்ட்டில் இன்று சிறப்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணையில்; குற்றவாளிகள் வேண்டுமென்றே தாமதம் செய்வதற்காக மனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர். குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டபோது இந்த நாடே கொண்டாடியது. ஏனெனில் அந்த அளவுக்கு கொடிய குற்றம் செய்துள்ளனர்.

சட்ட வாய்ப்புகள் வழங்கலாம் ஆனால் சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது. இவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க தாமதம் செய்கின்றனர். இது சரியானது அல்ல. எனவே விரைந்து 4 பேரையும் தூக்கிலிடும் இறுதி தேதியை விரைந்து முடிவு செய்து அறிவிக்க வேண்டும். இவ்வாறு அரசு வக்கீல் வாதிட்டுள்ளார்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வருமான வரி இல்லை: நிர்மலா

Updated : பிப் 02, 2020 21:23 | Added : பிப் 02, 2020 21:12 |

புதுடில்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களின் வருமானத்தின் மீது வரி விதிக்கப்படமாட்டாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

2020ம் ஆண்டிற்கான பட்ஜெட் பார்லியில் சனியன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில், வெளிநாடுகளில் பணியாற்றுபவர்களின் வருமானம் மற்றும் சொந்தமாக தொழில் நடத்தி அங்கேயே வாழும் இந்தியர்களின் வருமானம் மீதான வரிவிதிப்பு தொடர்பாக தெளிவான விளக்கம் இடம்பெறவில்லை என்ற சர்ச்சை எழுந்தது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் வருமானத்துக்கு வரி விதிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று உறுதியாக கூறினார். ஆனால், வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தில், சொந்த ஊரில் சொத்துக்கள் வாங்கினாலும் அதன்மூலம் வருமானம் கிடைத்தாலும், அதற்கு மட்டுமே வரி விதிக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தியுள்ளார்.


HC quashes case against woman

03/02/2020, STAFF REPORTER ,MADURAI

Taking cognisance of the fact that a woman was only a silent partner in a firm that was involved in a scam, the Madurai Bench of Madras High Court quashed the proceedings pending against her in the CBI Court, Madurai.

Justice M. Nirmal Kumar allowed the petition filed by N.G. Bharathi, who was a silent partner in Bharathi Traders. The court took into account that she had not taken part in the business activities of the firm and was only a partner due to the sentimental reason that she was a female member of the family.

The case of the prosecution was that the accused in the case had entered into a criminal conspiracy in 2002 to cheat Punjab National Bank, Sivakasi branch, by obtaining credit in the name of Vinayaga Corporation and Karthick Trading Company and not using the funds for business purpose.

Bharathi Traders also got involved in the scam and a case was registered. The petitioner was also arrayed as an accused in the case. After it was established that she was not part of the conspiracy, the court quashed the trial court proceedings in respect of the woman alone.

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...