Wednesday, February 19, 2020

எமனாக வருகிறது எல்.எஸ்.டி போதை... பெற்றோர்கள் மிக மிக மிக ஜாக்கிரதை!
கோவையை உலுக்கும் சைக்கோடேலிக் பார்ட்டிகள்

கோவையை உலுக்கும் சைக்கோடேலிக் பார்ட்டிகள்
பிரீமியம் ஸ்டோரி

சமீபத்தில் கோவை சரவணம்பட்டி மற்றும் அவிநாசி சாலைப் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருள் விற்பனை செய்ய முயன்றதாக, சென்னை மற்றும் கேரளாவைச் சேர்ந்த இளைஞர்கள் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். `எல்.எஸ்.டி’ எனப்படும் போதை மருந்து தடவிய போதை ஸ்டாம்ப் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இன்னபிற போதை மருந்துகள்தான் அவை.

‘எல்.எஸ்.டி-யை நாக்கில் வைத்தால் போதும்... கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து, அடுத்த எட்டு மணி நேரத்துக்கு அவர்கள் வேறு உலகுக்குச் சென்றுவிடுவார்கள். இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் குறுகியகாலத்திலேயே உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். தற்போது கோவையில் கல்லூரி மாணவர்கள், ஐ.டி ஊழியர்கள், பெண்கள் எனப் பலரும் எல்.எஸ்.டி-யைப் பயன்படுத்துகிறார்கள்’ என்றெல்லாம் தகவல்கள் கிடைக்க, கவலை கலந்த அதிர்ச்சியுடன் விசாரணையில் இறங்கினோம்.

ஸ்டாம்ப் வடிவிலான போதைப்பொருள்

ஆப்பிரிக்கா டு கோவை

இதுதொடர்பாக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் நீண்டகாலமாகப் பணியாற்றிவரும் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

‘‘எல்.எஸ்.டி போதைப்பொருள், உகாண்டாவில் தயாரிக்கப்பட்டு பிற ஆப்பிரிக்க நாடுகள் வழியாக இந்தியாவுக்கு வருகிறது. இந்தியாவில் கோவாதான் இதற்கான ஹப். இரண்டாவது இடத்தில் பெங்களூரு இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு எல்.எஸ்.டி விவகாரத்தில் சென்னையில் சிலர் கைதுசெய்யப்பட்டனர். அதன் பிறகு ஆங்காங்கே எப்போதாவது எல்.எஸ்.டி-க்காக கைது சம்பவம் நிகழும். ஆனால், கோவையில் எல்.எஸ்.டி-க்காக தொடர் கைது சம்பவங்கள் நிகழ்வது இதுவே முதன்முறை.

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பலரும் கல்விக்காகவும் வேலைவாய்ப்புக்காகவும் கோவை வருகின்றனர். அவர்களுக்கு பொருளாதாரப் பிரச்னை உள்ளது. அதற்காக அவர்கள் கையில் எடுத்திருப்பது தான் எல்.எஸ்.டி போன்ற போதைப்பொருள் விற்பனை. தற்போது, இதில் நம் நாட்டைச் சேர்ந்தவர்களும் ஈடுபடுகிறார்கள். ஒரு போதை ஸ்டாம்ப், சராசரியாக 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஸ்டாம்ப் அட்டையில் 20 முதல் 25 ஸ்டாம்ப்கள் வரை இருக்கும். இதில் பாதிக்குப் பாதி லாபம் கிடைக்கும் எனத் தெரிகிறது.

எல்.எஸ்.டி விலை உயர்ந்தது என்பதால் பெரும்பாலும் ‘சைக்கேடேலிக் ராக்’ மற்றும் ‘ரேவ்’ எனப்படும் போதை விருந்து கொண்டாட்டங்களில்தான் இதை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதாவது ஏற்கெனவே மிதமான போதையில் இருப்பவர்களை உச்சபட்ச போதைக்கு அழைத்துச் செல்வதுதான் சைக்கேடேலிக். தமிழில் இதற்கு `மாயத்தோற்றம்’ என்று பெயர். போதை ஏற ஏற, இசையின் ஒலியை ஏற்றிக்கொண்டே இருப்பார்கள். இசை ஒலிக்குத் தகுந்தாற்போல் போதையும் ஏறிக்கொண்டே இருக்கும்.

சைக்கேடேலிக் பார்ட்டி

சில மாதங்களுக்கு முன் பொள்ளாச்சி சேத்துமடை அருகில் சைக்கேடேலிக் பார்ட்டி நடத்திய விவகாரத்தில், 150-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டார்கள். அந்த ஒரு விஷயம் மட்டும்தான் வெளியில் வந்தது. ஆனால், புறநகர் பகுதிகளில் வார இறுதி நாள்களில் பண்ணைவீடுகள், சர்வீஸ் அப்பார்ட்மென்ட்கள் இங்கெல்லாம் அடிக்கடி போதை விருந்து கொண்டாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இவை வெளியே தெரிவதில்லை.

இதுபோன்ற கொண்டாட்டங்களுக்கு இன்ஸ்டாகிராமைத்தான் தகவல் பரிமாற்றத்துக்காக அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதற்காகவே இன்ஸ்டாகிராமில் பிரத்யேகமாக குழு ஆரம்பிக்கின்றனர். அதில், பார்ட்டி குறித்து தகவல்கள் விழுந்துகொண்டே இருக்கும். கடைசி நிமிடத்தில்தான் பார்ட்டி நடக்கும் இடத்தின் தகவல், இதர விவரங்கள் சொல்லப்படும்.

வார இறுதியை போதைக் களிப்பில் அனுபவிக்க வேண்டுமென நினைக்கும் பெரும்சம்பளக்காரர்கள், வசதி படைத்த மாணவர்களிடையே இந்தக் கலாசாரம் வேகமாகப் பரவிவருகிறது. பெரும்பாலும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களே இதை ஒருங்கிணைக்கிறார்கள். எல்.எஸ்.டி-யால் ஏற்படும் பாதிப்புகுறித்து அறியாமல் பலரும் இதைப் பயன்படுத்துவது வேதனையளிக்கிறது’’ என்றனர் அக்கறையுடன்.


“எல்லாமே கலர்ஃபுல்!”

மிகுந்த சிரமத்துக்குப் பிறகு எல்.எஸ்.டி நெட்வொர்க்கைச் சேர்ந்த ஒருசில கல்லூரி மாணவர்களிடம் பேச முடிந்தது. அடையாளங்களை மறைத்துக்கொண்டு வாட்ஸப் காலில் தயக்கத்துடன் பேசினார்கள். ‘‘ப்ரோ... இத நாங்க யூஸ் பண்ணதில்ல. ஆனா, இத யூஸ் பண்றவங்களை நல்லா தெரியும். அதை வெச்சுதான் சொல்றோம். எல்.எஸ்.டி-யை நாக்குல வெச்ச எட்டு மணி நேரத்துக்கு செம ஆக்டிவா, செம பவரா இருக்கும். ஏதாவது பண்ணிட்டே இருக்கணும்போல இருக்கும். சிலர் இதைப் போட்ட அப்புறம் `எல்லாமே கலர்ஃபுல்லா தெரியுது’னு சொல்வாங்க. சிலர் சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க. சிலர் அவங்களோட மூக்கே அவங்களுக்கு ரொம்பப் பெருசா தெரியுதுனு சொல்லிச் சிரிப்பாங்க. இப்படி ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மாதிரியான மனநிலை இருக்கும். ஜாலியா என்ஜாய் பண்ணலாம்னு இப்ப பொண்ணுங்களும் இதை யூஸ்பண்றாங்க. அதுலயே நிறைய வெரைட்டி கிடைக்குதுன்னும் சொல்றாங்க’’ என்றனர்.

கண்டுபிடிப்பது கடினம்!

கோவை போதை தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி-யான வின்சென்ட்டிடம் பேசினோம். ‘‘கஞ்சா விற்பனையை பெருமளவுக்குத் தடுத்துவிட்டோம். இப்போது, எல்.எஸ்.டி போன்ற போதைப்பொருள்களின் பயன்பாடு அதிகம் பரவிவருகிறது. மாநில எல்லைகளில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. சமீபத்தில், தென் மண்டலத்தில் உள்ள அனைத்து போதை தடுப்புப் பிரிவு போலீஸாரும் ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம். அதை தொடர்ந்து எங்களுக்கு சில ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதை விற்பவர்கள், வாங்குபவர்கள் அனைவருமே 35 வயதுக்குட்பட்டவர்கள்தான்.

கோவையை உலுக்கும் சைக்கோடேலிக் பார்ட்டிகள்

எல்.எஸ்.டி-யைப் பயன்படுத்துபவர்களுக்கு, கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படும். நரம்புமண்டலம் பாதிக்கப்படும். தொடர்ந்து பயன்படுத்துபவர்கள், கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிரிழப்பர். இளமையிலேயே முதுமைத்தோற்றம் வந்துவிடும். எல்.எஸ்.டி-யில் என்ன பிரச்னை என்றால், இது போதைப்பொருள் என்று பலருக்கும் தெரியாது. பார்ப்பதற்கு ஸ்டாம்ப் போன்று இருப்பதால், பெற்றோரோ கல்லூரி நிர்வாகமோ இதைக் கண்டறிய முடியாது. எங்கேயாவது மறைத்து வைத்தால் கண்டுபிடிப்பதும் கடினம். இதனால், இது எந்த வழியில் இங்கு வருகிறது என்பதும் சரியாகத் தெரியவில்லை.

எல்.எஸ்.டி நெட்வொர்க் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்.

கொடைக்கானலில் போதை விருந்து நடத்தியதற்காக 270 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கோவையில் கைது செய்யப்பட்டவர்கள், அந்த போதை விருந்துக்கும் எல்.எஸ்.டி சப்ளை செய்யவிருந்தனர். அதற்குள் நாங்கள் அவர்களை கைதுசெய்துவிட்டோம். இதையெல்லாம் தடுக்க வேண்டுமென்றால், பெற்றோர்களும் கல்வி நிறுவனங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்’’ என்றார்.

‘‘மனப்பிறழ்வு ஏற்படுத்தும்!’’

சேலத்தைச் சேர்ந்த போதை மறுவாழ்வு நிபுணர் மற்றும் மனநல மருத்துவரான மோகன வெங்கடாஜலபதியிடம் பேசினோம். ‘‘எல்.எஸ்.டி போன்றவை சைக்கேடேலிக் போதை மருந்துகள் (மனதில் வித்தியாசமான உணர்வுகளை ஏற்படுத்தும் மருந்துகள்) வகையில் வரும். அதாவது, உளவியல்ரீதியாக வித்தியாசமான அனுபவங்களை ஏற்படுத்தும். காதில் வித்தியாசமான ஒலிகள் கேட்கும். இல்லாத ஒரு பிம்பம் தெரியும். இதை `மாயத்தோற்றம்’ என்போம். ஒருமுறை பயன்படுத்தினாலே அடிமைப்படுத்தக் கூடிய ஆற்றல்கொண்டவை. `மெய்ம்மறந்த இன்பம்’ (Ectacy) என்று சொல்லப்படும் உணர்வை இந்த போதைமருந்து ஏற்படுத்தும்.

இதுபோன்ற போதைமருந்துகள் இங்கு கிடைக்கின்றன என்பதே அதிர்ச்சியாக இருக்கிறது. ஒருவேளை இந்த மருந்து பயன்பாட்டின் தொடக்கக்காலம் இதுவாக இருக்கலாம். நீண்ட ஆண்டுகள் அதீத தொடர் மதுப்பழக்கம் தரும் மனரீதியான பாதிப்புகளை சில மாதப் பயன்பாட்டிலேயே இதுபோன்ற போதைமருந்துகள் ஏற்படுத்திவிடும். நரம்புமண்டலம் பாதிக்கப்பட்டு, மனப்பிறழ்வு ஏற்படும். எந்த வேலையையும் சரியாகச் செய்ய முடியாது. இறுதியில் அது தற்கொலைக்கும் தூண்டும். பள்ளி, கல்லூரிகளில் இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். இதுபோன்ற போதைமருந்துகளை முற்றிலுமாகத் தடுப்பதுடன், அதற்கு அடிமையானவர்களை போர்க்கால அடிப்படையில் மீட்க வேண்டியதும் அவசியம்’’ என்றார்.
க்யூ ஆர் கோடு’ மூலமாக ஆன்லைனில் பண மோசடி: விழிப்புடன் செயல்பட சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை



சென்னை 19.02.2020

‘க்யூ ஆர் கோடு’களைப் பெற்று ஆன்லைனில் நூதன முறையில் பண மோசடி நடப்பதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. எனவே, ஆன்லைன் வாடிக்கையாளர்கள் விழிப்புடன் செயல்பட சைபர் கிரைம் போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.

ஆன்லைன் மூலம் பொதுமக்கள் பொருட்களை வாங்குவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. மக்கள் வீட்டிலிருந்தே தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ள முடிவதால் அதுபலரின் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால் தற்போது இதில் பல மோசடிகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலி பொருட்களை விற்பது, குறிப்பிட்ட காலத்துக்குள் பொருளை வழங்காமல் கால தாமதம் செய்வது, போலி தளங்களை உருவாக்கி ஏமாற்றுவது என மோசடிகளின் பட்டியல் நீள்கிறது.

தற்போது புதிய வகை மோசடியாக பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும்போது ‘க்யூ ஆர் கோடு’ மூலமாக பணத்தை நூதன முறையில் திருடும் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தினமும் சராசரியாக 4 புகார்கள் வரை வருகின்றன.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறியதாவது:

சென்னையைச் சேர்ந்த குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தனது பழைய பைக்கைவிற்பனை செய்ய இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். சில மணி நேரத்தில் அவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. எதிர்முனையில் பேசியவர், “பைக்கைநேரடியாக வந்து பார்க்க நேரமில்லை. ஆனால் எனக்கு உங்களதுபைக் பிடித்துள்ளது. அதைரூ.10 ஆயிரம் செலுத்தி உடனடியாக வாங்கிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். சில நிமிடங்களில் குமாரின் வாட்ஸ்அப்புக்குஒரு க்யூ ஆர் கோடு வந்துள்ளது.

பைக்கை வாங்கிக் கொள்வதாக கூறிய நபர், குமாரிடம், “அந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் உடனடியாக பணம் வந்துவிடும்” என்று தெரிவித்துள்ளார். குமார் அதை ஸ்கேன் செய்த சில விநாடிகளில், அவரது வங்கி கணக்கில் இருந்த மொத்த பணமும் அந்த நபரின் வங்கிக் கணக்குக்கு சென்றுவிட்டது.

குமார் ஸ்கேன் செய்த அந்த க்யூ ஆர் கோடு, அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்காக அந்த நபர் அனுப்பிய குறியீடு என்பது அதன் பின்னரே தெரியவந்துள்ளது. பணத்தை இழந்த குமாரால் அந்த நபரை அதன் பின்னர் தொடர்பு கொள்ள முடியவில்லை. சிறிது நேரத்தில் சம்பந்தப்பட்டவரின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டது. இப்படி பலர் தற்போது தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

ஸ்கேன் செய்வதை தவிர்க்கவும்

எனவே, பணத்தை செலுத்துவதற்கு மட்டுமே க்யூ ஆர் கோடைஸ்கேன் செய்ய வேண்டும். பணத்தை மற்றவரிடம் இருந்து பெறுவதற்கு, க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்வதை தவிர்க்கவும். சிலர் வணிகவரித் துறை அதிகாரி, ராணுவ அதிகாரி, போலீஸ்அதிகாரி என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு தங்களது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்துடன் தங்களது பொருட்களை விற்பதாக ஆன்லைனில் பதிவிடுகின்றனர்.

அவர்கள் மீதான மதிப் பீட்டின்பேரில், பொருள் தங்களின்கைகளுக்கு வந்து சேரும்என்று சிலர் முன்னரே பணம்செலுத்தி விடுகின்றனர். ஆனால், பொருள் வந்து சேர்வதில்லை. இப்படியும் மோசடி நடக்கிறது.

இதுபோன்ற மோசடிகளின் பின்னணியில் வடமாநில கும்பல் இருப்பதாக சந்தேகிக்கிறோம். அவர்களை கைது செய்ய தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இணைய தளத்தில் பொருட்களை வாங்கும்போது பொருட்கள் கைக்கு வந்த பின்னரே பணம் செலுத்த வேண்டும், வேறு நபரிடம் இருந்து வரும் தேவையற்ற லிங்குகளை திறந்து பார்க்க வேண்டாம். இதன் மூலம் மற்றவர்கள் உங்களின் டெபிட், கிரெடிட் கார்டுகளை ஹேக் செய்வது தடுக்கப்படும். போலி மின்னஞ்சல்களுக்கு பதில் அளிக்க வேண்டாம்.

இவ்வாறு சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை கூறியுள்ள னர்.

வரும் கல்வியாண்டு முதல் ஜிப்மர் எம்பிபிஎஸ் இடங்கள் 249 ஆக உயர்கிறது
புதுச்சேரி

இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றான ஜிப்மரில் எம்பிபிஎஸ் இடங்கள் 200-லிருந்து 249-ஆக உயர்கிறது. ஜிப்மர் நுழைவுத் தேர்வு தற்காலிக அட்டவணையில் இவ்விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜவஹர்லால் மருத்துவ பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிநிறுவனத்தில் (ஜிப்மர்) எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ், எம்டிஎஸ், பிஎஸ்சி, எம்எஸ்சி, பிஎச்டி மருத்துவம் மற்றும் மருத்துவம் சார் படிப்புகள் உள்ளன.

இக்கல்லூரியில், வரும் 2020-21ம் கல்வியாண்டு படிப்புகளுக்கான தற்காலிக நுழைவுத்தேர்வு அட்டவணை பட்டியல் அதன் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் ஜூலையில் எம்டி, எம்எஸ், பிடிஎப், எம்டிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் பதிவு மார்ச் 4-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 9-ம் தேதி முடிவடைகிறது. ஆன்லைன் நுழைவுத் தேர்வு மே 17-ம் தேதியும் அதைத்தொடர்ந்து கலந்தாய்வும் நடக்கிறது. ஜூலை 31-ல் சேர்க்கை நிறைவடைகிறது.

எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வானது நீட் கலந்தாய்வு முறையில் வரும் கல்வியாண்டில் நடத்தப்படும் என்று ஜிப்மர் தெரிவித்துள்ளது. இதற்கான தேதி பின்னர் தெரிவிக்கப்படும்.

தற்போது புதுச்சேரி ஜிப்மரில் 150, காரைக்காலில் 50 என மொத்தம் 200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு 10 சதவீதம் தரப்படுவதால் வரும் கல்வியாண்டில் இந்த இடங்கள் உயர்த்தப்படுமா என்று கேள்வி எழுந்தது. 10 சதவீத இடஒதுக்கீட்டு அமலால், கூடுதல் இடங்கள் பெற்று கலந்தாய்வு நடத்தலாம் என்றும் மத்திய அரசும் குறிப்பிட்டிருந்தது.

அதன்படி, வரும் கல்வியாண்டில் 49 இடங்கள் உயர்த்தப்பட உள்ளன. தற்காலிக தேர்வு அட்டவணையில் எம்பிபிஎஸ் இடங்கள் 249 என ஜிப்மர் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் பிஎஸ்சி, எம்எஸ்சி, எம்பிஎச், பிஎச்டி, பிபிடி படிப்புகளுக்கு ஏப்ரல் 21-ம் தேதி ஆன்லைன் பதிவு தொடங்கும். மே 20-ம் தேதி நிறைவடையும். ஆன்லைன் நுழைவுத் தேர்வு ஜூன் 21-ல் நடக்கும். அதைத்தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறும். ஆகஸ்ட் 31-ல் இதற்கான சேர்க்கை நிறைவடையும்.

ஜனவரி 2021-ம் ஆண்டுக்கான எம்டி, எம்எஸ். டிஎம், எம்சிஎச் படிப்புகளுக்கான ஆன்லைன் பதிவு வரும் செப்டம்பர் 16-ல் தொடங்கி அக்டோபர் 21-ல் நிறைவடையும். ஆன்லைன் நுழைவுத் தேர்வு டிச.6-ம் தேதியும் அதையடுத்து கலந்தாய்வும் நடக்கும். எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு 2021 பிப்.27-ம் தேதியும் டிஎம், எம்சிஎச்படிப்புகளுக்கு 2021 ஜன.30-ம் தேதியும் சேர்க்கை முடிவுபெறும் என்று ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்துக்கு சுற்றுலா

By DIN | Published on : 19th February 2020 01:03 AM |

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோக மையத்துக்கு பிப். 21-ஆம் தேதி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆதி யோகி எனப்படும் சிவபெருமானின் பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு முன் நடத்தப்படும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை, இந்தியாவிலிருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் வரும் லட்சக்கணக்கான பக்தா்கள் அமா்ந்து ஆா்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனா்.

இதில் கலந்து கொள்ள விரும்பும் மக்களுக்காக தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இச்சுற்றுலா பிப். 21-ஆம் தேதி, சென்னையில் இருந்து காலை 6 மணி அளவில் கோயம்புத்தூருக்குப் புறப்பட்டு மறுநாள் இரவு 8.30 மணி அளவில் சென்னை வந்தடையும். மகா சிவராத்திரி விழாவில் இரவு கலந்து கொண்ட பிறகு, காலையில் கோயம்புத்தூா் தமிழ்நாடு விடுதியில் புத்துணா்வுக்கு பிறகு புறப்பட்டு இரவு 8.30 மணி அளவில் சென்னை வந்தடைவா். இச்சுற்றுலாவுக்கு சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக தலைமை அலுவலகத்தில் இருந்து (திருவல்லிக்கேணி, டி1 காவல் நிலையம் அருகில்) வழிகாட்டி உதவியுடன், குளிா்சாதன சொகுசுப் பேருந்து இயக்கப்படும். இதற்கு கட்டணமாக பெரியவா்களுக்கு ரூ. 3900 வசூலிக்கப்படுகிறது. இப்பயணத்தில் காலை உணவு, மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம், சுற்றுலா வளாகம், வாலாஜா சாலை, சென்னை-2 எனும் அலுவலக முகவரியையோ, 04425333333, 25333444, 25333857, 25333850, 54, 180042531111 (கட்டணமில்லா தொலைபேசி) ஆகிய எண்களையோ, w‌w‌w.‌t​a‌m‌i‌l‌n​a‌d‌u‌t‌o‌u‌r‌i‌s‌m.‌o‌r‌g, ‌w‌w‌w.‌t‌t‌d​c‌o‌n‌l‌i‌n‌e.​c‌o‌m, ‌w‌w‌w.‌m‌t‌t‌d‌o‌n‌l‌i‌n‌e.​c‌o‌m ஆகிய இணையதள முகவரியையோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவாகரத்து வழக்கில் இழப்பு குழந்தைக்குத்தான்: உச்ச நீதிமன்றம்

Updated : பிப் 19, 2020 00:14 | Added : பிப் 19, 2020 00:11

புதுடில்லி 'கணவன், மனைவியின் விவாகரத்து வழக்கில் எப்போதும் இழப்பு அவர்களின் குழந்தைக்குத்தான்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விவாகரத்து வழக்கு ஒன்றில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், அஜய் ரஸ்தோகி ஆகியோரி அடங்கி அமர்வு அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:கணவன், மனைவி பிரச்னையில், நீதிமன்றங்கள் முதலில் மத்தியஸ்த நடைமுறையை பின்பற்ற வேண்டும். அது பலனளிக்காத பட்சத்தில், எவ்வளவு விரைவாக முடியுமோ அந்த அளவிற்கு வழக்கை முடிக்க முயற்சிக்க வேண்டும். ஏனெனில், வழக்கு நீடிக்கும் வரையில், ஒவ்வொரு நாளும் குழந்தைக்குத்தான் அதிக பாதிப்பு ஏற்படும். கணவன், மனைவி விவாகரத்து வழக்கில், எப்போதும் இழப்பு, அவர்கள் பெற்ற குழந்தைக்குத்தான்.

பெற்றோரின் பிரிவால், குழந்தை மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியுள்ளது. பெற்றோரின் அன்பையும், அரவணைப்பையும் இழக்க நேரிடுகிறது. செய்யாத தவறுக்காக குழந்தை பாதிக்கப்படுகிறது. அதனால், குழந்தை யாரிடம் இருந்தால் நல்லது என சீர்துாக்கிப் பார்த்து, தீர்ப்பளிக்க வேண்டும். குழந்தையின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்த பின்தான், இதர ஆட்சேபணைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.



சிங்கப்பூரிலிருந்து வந்தவருக்கு சிகிச்சை

Added : பிப் 18, 2020 23:24

தஞ்சாவூர் சிங்கப்பூரில் இருந்து திரும்பிய மன்னார்குடி இளைஞருக்கு காய்ச்சல் இருந்ததால் 'கொரோனா' வைரஸா என்ற சந்தேகத்துடன் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.திருவாரூர் மன்னார்குடியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன் மன்னார்குடி திரும்பிய அவருக்கு தொண்டை வலி காய்ச்சல் இருந்தது. அவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின் கொரோனா பாதிப்பா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தற்போது அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் 'கொரோனா' பாதிப்பு ஏதுமில்லை எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
Baby weighing only 1.1 kg saved

Hospital director Dr Vijaya said, “We had to do a caesarean as the mother had lost fluids and blood flow to the baby was reduced.

Published: 19th February 2020 03:42 AM 

By Express News Service

CHENNAI: Doctors at the Government Hospital for Women and Children, Egmore, saved a baby weighing only 1.1 kg. Shravani (26) from Andhra Pradesh, developed labour pain in the 30th week. She was rushed to the hospital on January 13 and delivered a girl by caesarean section.

Hospital director Dr Vijaya said, “We had to do a caesarean as the mother had lost fluids and blood flow to the baby was reduced. “The baby was kept under observation at the Neonatal ICU for over 30 days and was discharged on Monday. The baby was 1.4 kg at the time of discharge.” “In the last one year, we have saved around 23 babies weighing less than 1.5 kg, “ said Dr Vijaya.

NEWS TODAY 25.05.2026