மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்துக்கு சுற்றுலா
By DIN | Published on : 19th February 2020 01:03 AM |
மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோக மையத்துக்கு பிப். 21-ஆம் தேதி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆதி யோகி எனப்படும் சிவபெருமானின் பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு முன் நடத்தப்படும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை, இந்தியாவிலிருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் வரும் லட்சக்கணக்கான பக்தா்கள் அமா்ந்து ஆா்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனா்.
இதில் கலந்து கொள்ள விரும்பும் மக்களுக்காக தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இச்சுற்றுலா பிப். 21-ஆம் தேதி, சென்னையில் இருந்து காலை 6 மணி அளவில் கோயம்புத்தூருக்குப் புறப்பட்டு மறுநாள் இரவு 8.30 மணி அளவில் சென்னை வந்தடையும். மகா சிவராத்திரி விழாவில் இரவு கலந்து கொண்ட பிறகு, காலையில் கோயம்புத்தூா் தமிழ்நாடு விடுதியில் புத்துணா்வுக்கு பிறகு புறப்பட்டு இரவு 8.30 மணி அளவில் சென்னை வந்தடைவா். இச்சுற்றுலாவுக்கு சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக தலைமை அலுவலகத்தில் இருந்து (திருவல்லிக்கேணி, டி1 காவல் நிலையம் அருகில்) வழிகாட்டி உதவியுடன், குளிா்சாதன சொகுசுப் பேருந்து இயக்கப்படும். இதற்கு கட்டணமாக பெரியவா்களுக்கு ரூ. 3900 வசூலிக்கப்படுகிறது. இப்பயணத்தில் காலை உணவு, மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம், சுற்றுலா வளாகம், வாலாஜா சாலை, சென்னை-2 எனும் அலுவலக முகவரியையோ, 04425333333, 25333444, 25333857, 25333850, 54, 180042531111 (கட்டணமில்லா தொலைபேசி) ஆகிய எண்களையோ, www.tamilnadutourism.org, www.ttdconline.com, www.mttdonline.com ஆகிய இணையதள முகவரியையோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment