Tuesday, February 25, 2020

சென்னை ஸ்டான்லி உட்பட 5 மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் பணியிட மாற்றம்: முதல்வர்களாக 6 பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு

சென்னை 25.02.2020
சென்னை ஸ்டான்லி உட்பட தமிழகத்தில் 5 மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 6 பேராசிரியர்கள் மருத்துவக் கல்லூரி முதல்வர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
பணியிட மாற்றம் குறித்த விவரம்: (ஏற்கெனவே மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த இடம் அடைப்புக் குறியில்):
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி - ஆர்.சாந்திமலர் (ஸ்டான்லி), ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி- பி.பாலாஜி (செங்கல்பட்டு), கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி -ஆர்.முருகேசன் (கோவை இஎஸ்ஐ), கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி - ஏ.நிர்மலா (திருப்பூர்), அரியலூர் மருத்துவக் கல்லூரி - ஹெச்.முத்துகிருஷ்ணன் (விருதுநகர்).
முதல்வராக பதவி உயர்வு பெற்றுள்ளோர் விவரம்: (ஏற்கெனவே பேராசிரியராகப் பணியாற்றிய இடம் அடைப்புக் குறியில்)
நாமக்கல் மருத்துவக் கல்லூரி - கே.சாந்தா அருள்மொழி (மயக்கவியல் துறை, கோவை), திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி - அரசி வத்சன் (பெண்கள் நலன், மகப்பேறியல் துறை, சென்னை), திருப்பூர் மருத்துவக் கல்லூரி - வள்ளி சத்தியமூர்த்தி (மயக்கவியல் துறை, கீழ்ப்பாக்கம்), கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி - ஆர்.முத்துச்செல்வன் (பொது மருத்துவத் துறை, சென்னை), விருதுநகர் மருத்துவக் கல்லூரி - சி.ரேவதி(நுண் உயிரியல் துறை, திருநெல்வேலி), நாகப்பட்டினம் மருத்துவக்கல்லூரி - வி.விஸ்வநாதன் (கதிரியக்க சிகிச்சை, சென்னை).
சுகாதாரத்துறை செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024