Saturday, February 29, 2020

சாப்ட்வேர் பிரச்னையால் அரசு ஊழியர் சம்பளம் தாமதம்

Added : பிப் 28, 2020 23:36

மதுரை :சாப்ட்வேர் பிரச்னையால் இந்த மாதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைப்பது தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.2017ல் அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலை புதிய சாப்ட்வேர் மூலமாக தயாரித்து, அதன் மூலம் மட்டுமே சம்பளம் பெற வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கான புதிய சாப்ட்வேர் தயாரிக்கும் பணியை விப்ரோ மேற்கொண்டது. ஒருங்கிணைந்த மனிதவள மேம்பாட்டுத் திட்டம் (ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்) எனும் சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டது.முதற்கட்டமாக மதுரை, தேனி, ஈரோடு, சென்னை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இந்த மாதம் முதல் நடைமுறைபடுத்தப்படுகிறது. மே 31 ற்குள் தமிழகம் முழுவதும் நடைமுறைபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.ஆனால் சாப்ட்வேர் பிரச்னையால் சம்பளம் வழங்குவது தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.தாமதமின்றி ஊதியம் வழங்ககோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மதுரையில் சம்பள கணக்கு அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பள பட்டியல் தயாரிப்பதில் ஏற்படுகின்ற சிக்கல்கள் குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மதுரை மாவட்ட செயலாளர் நீதிராஜா கூறியது: ஏற்கனவே இருந்த சாப்ட்வேரில் உள்ள ஊழியர்களின் தகவல்களை புதிய சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்ய முடிவதில்லை, தற்போது உள்ள கணினிகள் புதிய சாப்ட்வேர்க்கு ஏற்றாற்போல் இல்லை. இணையதள வசதியும் இல்லை. எனவே, சம்பள பட்டியல் தயாரிப்பதில் சிரமம் எற்படுகின்றது.சந்தேகங்களுக்கு விப்ரோ ஊழியர்கள் மழுப்பலான பதில்களையே அளிக்கின்றனர். முன்பு இருந்த நடைமுறைப்படி சம்பளம் வழங்க வேண்டும்' என்றார்.பொருளாளர் ராம்தாஸ் கூறுகையில், 'புதிய சாப்ட்வேரில் உள்ள பிரச்னைகளை சரிசெய்து, காலதாமதமாகாமல் சம்பளம் கிடைக்க அரசு வழி செய்ய வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024