Wednesday, February 26, 2020

நிர்பயா' குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேறுமா?

Updated : பிப் 26, 2020 05:24 | Added : பிப் 26, 2020 05:23 |

புதுடில்லி: 'நிர்பயா' பாலியல் பாலத்கார வழக்கின் குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைத்து, டில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம், மார்ச், 5ல் விசாரிக்கவுள்ளது.

டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, 2012ல், ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சித்ரவதைக்கு ஆளானார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில், முகேஷ் குமார் சிங், 32, பவன் குப்தா, 25, வினய் குமார் சர்மா, 26, அக் ஷய் குமார், 31, ஆகியோருக்குதுாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

டில்லி திஹார் சிறையில், இவர்களுக்கு துாக்கு தண்டனையை நிறைவேற்ற, இரண்டு முறை, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டும், சட்ட சிக்கல்களால் நிறைவேற்ற முடியவில்லை. கருணை மனு, மறு சீராய்வு மனு என, நான்கு பேரும் மாறி மாறி மனு தாக்கல் செய்வதால், இவர்களுக்கான தண்டனையை நிறைவேற்றுவது தாமதமாகி வருகிறது.

இதற்கிடையே, 'குற்றவாளிகள் நான்கு பேருக்கும், தனித்தனியாக தண்டனையை நிறைவேற்றக் கூடாது; ஒரே நேரத்தில் தான் நிறைவேற்ற வேண்டும். 'சட்ட சிக்கல் தீரும் வரை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்' என, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, மத்திய அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நேற்று பரிசீலனைக்கு வந்தபோது, வழக்கை, மார்ச்., 5ல், விசாரிக்கவுள்ளதாக, நீதிபதிகள், ஆர்.பானுமதி, அசோக் பூஷன், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு, நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில், குற்றவாளிகளுக்கான தண்டனையை, மார்ச்., 3ல் நிறைவேற்ற, டில்லி சிறப்பு நிதிமன்றம், புதிய, 'வாரன்ட்' பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024