Wednesday, February 26, 2020

மருத்துவ பல்கலையில் மார்ச், 5ல் பட்டமளிப்பு

Added : பிப் 26, 2020 00:09

சென்னை:தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை பட்டமளிப்பு விழா, மார்ச், 5ல் நடைபெற உள்ளது.

சென்னை, கிண்டியில் உள்ள, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் கீழ், 600க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இளநிலை, முதுநிலை மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர் படிப்புகள், மருத்துவம் சார்ந்த படிப்புகள் என, 100க்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன. அந்த கல்லுாரிகளில், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் படிப்புகளை நிறைவு செய்கின்றனர்.அதன்படி, கடந்த கல்வியாண்டில் படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா, பல்கலையின் வெள்ளி விழா அரங்கில், மார்ச், 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில், கவர்னரும், பல்கலையின் வேந்தருமான பன்வாரிலால் புரோஹித், சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு, பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கி கவுரவிக்க உள்ளார். இந்நிகழ்வில் நேரடியாக, 724 மாணவர்கள், பட்டங்களை பெற உள்ளனர்.

விண்வெளி ஆராய்ச்சி மையமான, 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கஸ்துாரி ரங்கன், அணுசக்தி துறை முன்னாள் இயக்குனர் சிதம்பரம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளனர். மேலும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், செயலர் பீலா ராஜேஷ், பல்கலை துணை வேந்தர் சுதா சேஷய்யன் பங்கேற்கின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024