Saturday, February 29, 2020


'இன்டர்நெட்' வேகம் எங்கு அதிகம்

Added : பிப் 29, 2020 01:03

உலகளவில் சராசரி இன்டர்நெட் வேகம் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் தைவான் முதலிடத்தை பெற்றுள்ளது.

உள்ளங்கையில் உலகம் என்பது 'இன்டர்நெட்' வளர்ச்சியால் சாத்தியமானது. ஸ்பெயினின் 'வெப்சைட் டூல் டெஸ்டர்' அமைப்பை சேர்ந்த விஞ்ஞானிகள் உலக நாடுகளில் 2017 -2019ம் ஆண்டுகளில் 'பிராட்பேண்ட்' இன்டர்நெட் வேகம் குறித்து ஆய்வு நடத்தினர். ஆன்லைனில் பயனாளர்களிடம் தகவல்களை சேகரித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் முதலிடத்தை தைவான் பெற்றுள்ளது.

தைவானில் மின்னணு நிறுவனங்கள் அதிகம் உள்ளது. இவை அந்நாட்டின் மொத்த ஜி.டி.பி., யில் 18 சதவீத பங்களிப்பை அளிக்கிறது.இப்பட்டியலில் உள்ள 'டாப் - 25' நாடுகளில் 18 நாடுகள் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்தவை. முதலிடத்தில் உள்ள தைவானில் இன்டர்நெட் வேகம் 85 எம்.பி.பி.எஸ்., என்ற அளவில் உள்ளது. இதன் மூலம் 5 ஜி.பி., அளவிலான வீடியோவை, 8 விநாடிகளில் டவுண்லோடு செய்ய முடியும்.

முந்திய குட்டி தீவு

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இடையே உள்ள ஜெர்சி தீவில் இன்டர்நெட் வேகம் 67 எம்.பி.பி.எஸ்., ஆக உள்ளது. இங்கு வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு 'பைபர்' கேபிள் மூலம் இன்டர்நெட் சேவை வழங்கப்படுகிறது. அமெரிக்காவில் இன்டர்நெட் வேகம் 32 எம்.பி.பி.எஸ்., மற்றும் வீடியோ டவுண்லோடு செய்ய 20 வினாடிகளும், பிரிட்டனில் இன்டர்நெட் வேகம் 22 எம்.பி.பி.எஸ்., மற்றும் வீடியோ டவுண்லோடு செய்ய 30 விநாடிகளும் ஆகிறது.

11

உலகின் சராசரி இன்டர்நெட் வேகம் 2017ம் ஆண்டு 9 எம்.பி.பி.எஸ்., ஆக இருந்தது. இது 2019ல் 11 எம்.பி.பி.எஸ்., ஆக அதிகரித்துள்ளது.

30

உலகில் இன்டர்நெட் வேகம் குறைவாக உள்ள நாடு ஏமன். இது 207வது இடத்தில் உள்ளது. இங்கு 300 கே.பி.பி.எஸ்., என்ற அளவில் உள்ளது. வீடியோவை டவுண்லோடு செய்ய 30 நிமிடங்கள் தேவைப்படும்.

8.66

இப்பட்டியலில் 74வது இடத்தில் உள்ள இந்தியாவில், இன்டர்நெட் வேகம் 8.66 எம்.பி.பி.எஸ்., ஆக உள்ளது.

'டாப் - 10' நாடுகள்

'பிராட்பேண்ட்' இன்டர்நெட் வேகத்தில் அமெரிக்கா (14வது இடம்), பிரான்ஸ் (22), ஜெர்மனி (27), பிரிட்டன் (33), ஆஸ்திரேலியா (50), ரஷ்யா (54) பின்தங்கி உள்ளன. இப்பட்டியலில் 'டாப்-10' நாடுகள்.

1. தைவான்
2. சிங்கப்பூர்
3. ஜெர்சி
4. சுவீடன்
5. டென்மார்க்
6. ஜப்பான்
7. லக்சம்பர்க்
8. நெதர்லாந்து
9. சுவிட்சர்லாந்து
10. சான் மரீனோ

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024