Saturday, February 29, 2020

2 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர் பழனிசாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார்

சென்னை

ராமநாதபுரம், விருதுநகரில் அமைய உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர் பழனிசாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், ஊட்டி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. மத்திய அரசின் 60 சதவீத நிதி மற்றும் மாநில அரசின் 40 சதவீத நிதியில் இந்த கல்லூரிகள் தலா ரூ.325 கோடியில் கட்டப்பட உள்ளன.

இந்நிலையில், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமையவுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர் பழனிசாமி நாளை (மார்ச் 1) அடிக்கல் நாட்டுகிறார். இதைத் தொடர்ந்து அம் மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ள புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, முடிவுற்ற பணிகளையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

ராமநாதபுரம் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலை 10 மணிக்கும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில், மாலை 3 மணிக்கும் விழா நடக்கிறது. விழாவுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமை தாங்குகிறார். துணை முதல்வர் ஓபன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024