Thursday, February 27, 2020

சில்லரை நாணயங்களை பயன்படுத்த திருமலையில் புதிய திட்டம் அமல்

Added : பிப் 26, 2020 23:54

திருப்பதி :ஏழுமலையான் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்படும் சில்லரை நாணயங்களை சரியான முறையில் பயன்படுத்த தேவஸ்தானம் புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.இது குறித்து, தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி கூறியதாவது.'திருமலை ஏழுமலையான் உண்டியலில், பக்தர்கள் சமர்பிக்கும் காணிக்கைகளில் உள்ள நாணயங்களை பிரித்தெடுத்து, தனியே பராமரிக்கப்பட்டு வருகிறது.இவை எடையிலும், அளவிலும் பெரியதாக உள்ளதால், வங்கிகள் பெற்றுச் செல்ல மறுக்கின்றன.இவற்றை சரியான முறையில் பயன்படுத்த, தேவஸ்தானம் புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்த உள்ளது.அதன்படி, திருமலையில் உள்ள அனைத்து வங்கிகளிலும், 200 ரூபாய், 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் மதிப்புள்ள நாணய பாக்கெட்டுகள் இருக்கும்.வியாபாரிகள் இந்த சில்லரை பாக்கெட்டுகளை வாங்கி சென்று பயன்படுத்தி கொள்ளலாம். பக்தர்கள் கேட்கும் பட்சத்தில், இது ஏழுமலையான் உண்டியல் நாணயங்கள் எனக்கூறி, அவர்களுக்கும் தரலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

லாபம் யாருக்கு?

தேவஸ்தானம் மேற்கொண்ட இந்த முடிவால், சில்லரை நாணயங்கள் பயன்பாட்டிற்கு வருவது ஒருபுறமிருந்தாலும், இதை கடைகள் மூலம் அளிப்பதால், வியாபாரிகள் உண்டியல் நாணயங்களை அதிக விலைக்கு விற்க வாய்ப்புள்ளது.இதனால் வியாபாரிகளுக்கத்தான் லாபம். 'தரிசன டிக்கெட் முறைகேடு, லட்டு முறைகேடுகளை கட்டுபடுத்தி வரும் தேவஸ்தானம், காணிக்கை நாணயங்கள் மூலம், புதிய முறைகேட்டை அனுமதிக்கிறது' என, பக்தர்கள் கூறுகின்றனர். இதையும் வெளிப்படையாக கவுண்டர் ஏற்படுத்தி தேவஸ்தானமே அளித்தால், பக்தர்கள் பயன்பெறுவர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024