Wednesday, February 26, 2020

ஆர்.டி.ஓ., உதவியாளர் லஞ்ச வழக்கில் கைது அடங்க மாட்றாங்கய்யா...!

Updated : பிப் 26, 2020 02:14 | Added : பிப் 26, 2020 01:27

ஈரோடு:இறப்பு சான்றிதழ் வழங்க, 4,000 ரூபாய் லஞ்சம் பெற்ற, ஈரோடு, ஆர்,டி.ஓ., அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை குள்ளம்பாளையத்தைச் சேர்ந்தவர், சத்தியமூர்த்தி, 35; விவசாயி. இவர் மாமனார் முத்து சாமி, 1988ல் இறந்துள்ளார். மாமனாரின் இறப்பு சான்றிதழை, நீதிமன்றம் மூலம், சத்தியமூர்த்தி வாங்க ஆணை பெற்றார்.இது தொடர்பாக, ஈரோடு, ஆர்.டி.ஓ., அலுவலகத்தை அணுகினார். அங்கிருந்த அலுவலக உதவியாளர் கணேசன், 49, சான்றிதழ் வழங்க, 4,000 ரூபாய் கேட்டுள்ளார்.

இது குறித்து, ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில், சத்தியமூர்த்தி புகார் அளித்தார்.லஞ்சஒழிப்பு போலீசார், நேற்று காலை, கணேசனை கைது செய்தனர். மேலும், லஞ்ச பணத்தில், யார் யாருக்கு பங்குஉள்ளது என, விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024